பொதுபலசேனா கலைக்கப்படும்

ஞானசார தேரர்

0 640

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலின் பின்பு பொது­ப­ல­சேனா அமைப்பைக் கலைத்து விடப் போவ­தாக அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

நேற்று ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

சிறு­பான்மை மக்­க­ளான தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­குகள் இன்றி எமது நாட்டில் அர­சாங்கம் ஒன்­றினை அமைக்க முடி­யாது, ஜனா­தி­பதி ஒரு­வ­ரையும் தெரிவு செய்ய முடி­யாது என்ற மாயை­யான நிலைப்­பாடு இது­வ­ரை­காலம் இருந்து வந்­தது. ஆனால் இந்த ஜனா­தி­பதி தேர்­த­லுடன் முறி­ய­டிக்­கப்­பட்­டு­விட்­டது. கட்­டுக்­க­தை­யாக மாறி­விட்­டது.

தற்­போது எமது நாட்­டிற்கு சிறந்த தலை­மைத்­துவம் ஒன்று கிடைத்­துள்­ளது. எமது நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் அடிப்­ப­டை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்­கக்­கூ­டிய ஒரு தலை­மைத்­து­வத்­தையே நாம் எதிர்­பார்த்தோம். பொதுத் தேர்­தலின் பின்பு தகு­தி­வாய்ந்த அமைச்­ச­ர­வை­யுடன், நேரான ஊழ­லற்ற பய­ணத்தை மேற்­கொள்ள முடியும். அதற்­கான தலை­மைத்­து­வத்தை நாட்டு மக்கள் தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள்.

நாட்டில் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கும், இன­வா­தி­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­படக் கூடாது. பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். அடிப்­ப­டை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டு மக்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கப்­படும் என்­பதில் நம்­பிக்கை இருக்­கி­றது.

இதனால் எமது அமைப்பு அவ­சி­ய­மில்லை என நாங்கள் நம்­பு­கிறோம். நாங்கள் தேர்தல் முடிவு குறித்து மிகவும் மகிழ்­கிறோம். 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு எமது வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம். 20 வரு­ட­கா­ல­மாக இந்து சமுத்­தி­ரத்தில் கண்ணீர் சிந்தும் நாடாக மாறி­யி­ருந்த எமது நாடு மீண்டும் இந்து சமுத்­தி­ரத்தில் ஓர் முத்­தாக மாற்றம் பெறு­வ­தற்கு சிங்­க­ள­வர்கள் ஒன்­று­பட வேண்டும் என்ற எமது கொள்­கையை இது­வரை காலம் நாம் நாட்டு மக்­க­ளுக்கு வலி­யு­றுத்தி வந்தோம்.

இப்­போது சிங்­க­ள­வர்­க­ளுக்­கென்று ஒரு தலைவர் இருக்­கிறார். இப்­போது எமக்கு போராட்­டங்கள் நடத்த வேண்­டிய தேவை இருக்­காது. நாட்டில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதே எமக்குப் பிரச்­சி­னை­யாக இருந்­தது. சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்தால் சிதை­வுக்­குள்­ளா­கி­யுள்ள தேசிய ஒரு­மைப்­பாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

சிறு­பான்மை வாக்­குகள் இன்றி எமது நாட்டில் அர­சாங்­க­மொன்­றினை அமைக்க முடி­யாது என்ற மாயை இருந்­தது. ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களின் பின்பு அந்தக் கருத்து முறி­ய­டிக்­கப்­பட்­டு­விட்­டது. இன்று நல்­லதோர் சிறந்த தலை­மைத்­துவம் கிடைத்­துள்­ளது. பொதுத் தேர்­தலின் பின்பு திற­மை­யான புதிய அமைச்சர்களுடன் புதிய பயணத்தை எம்மால் ஆரம்பிக்க முடியும்.

நாட்டை வழிநடாத்த சிறந்த தலைமைத்துவம் கிடைத்துள்ளது. அதனால் இதன்பிறகு எமது அமைப்பு தேவையற்றது எனக் கருதுகிறோம். எனவே பொதுத் தேர்தலின் பின்பு எமது அமைப்பைக் கலைத்து விடத் தீர்மானித்துள்ளோம் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.