நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா?

0 1,231

“முஸ்லிம் கிரா­மங்கள் மாத்­தி­ரமே அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்­ளதை நாம் பார்க்­கின்றோம். தமிழ் கிரா­மங்­க­ளை­யல்ல. கத்­தோ­லிக்க மற்றும் இந்துக் கிரா­மங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­தற்­கான ஒரே வழி கோத்­தா­விற்கு வாக்­க­ளிப்­பதே.” – மன்­னாரில் நாமல்­ரா­ஜ­பக்ச.

“நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­ட­வேண்டும். தமிழ் இளை­ஞர்­க­ளா­கிய நாம் சிந்­தித்துச் செயற்­ப­ட­வேண்டும்.” – SLPP இற்­காக கிரான் இளைஞர் முன்­னணி விநி­யோ­கித்த துண்­டுப்­பி­ர­சுரம்.

புத்­த­ளத்தில் வாழும் மன்னார் வாக்­கா­ளர்கள் வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட தனியார் பஸ்­களில் வாக்­க­ளிக்க வரு­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. – உதவித் தேர்­தல்கள் ஆணை­யாளர் – மன்னார்.

முஸ்­லிம்கள் கோத்­தா­விற்கு வாக்­க­ளிக்­கா­விட்டால் அவர்­க­ளுக்கு தக்க பதி­லடி கிடைக்கும் – –-அலி சப்ரி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி

என்ன காரணம் கூறப்­பட்­டாலும், 2005 ஆம் ஆண்டுத் தேர்­தலில் பெரும் எண்­ணிக்­கை­யான வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களும், ஏன் கொழும்புத் தமிழ் மக்­களும் கூட வாக்­க­ளிக்­க­வில்லை. இதன் விளைவு, பொது­வாகக் கூறு­வ­துபோல், வர­லா­றா­கி­யுள்­ளது. அந்த வர­லாற்­றினை மீண்டும் ஆழ­மாகச் சிந்­தித்துப் பார்ப்­பது காலத்தின் கட்­டா­ய­மாக இருக்­கின்­றது. தமது வாக்­கு­களை அளிப்­ப­தில்லை என்­கின்ற தமிழ் மக்­களின் தீர்­மா­னத்­தினால் பத­விக்கு வந்த ஜனா­தி­பதி அடுத்த 10 வரு­டங்­க­ளாக முழு நாட்­டிற்கும் ஜனா­தி­ப­தி­யாக ஆட்சி செய்தார். அந்த ஆட்­சியின் தாக்கம் சக­ல­ராலும் அனு­ப­விக்­கப்­பட்­டது. மற்­று­மொரு ஜனா­தி­பதித் தேர்தல் வந்­துள்ள இந்த நிலையில் சிலர் அதனைப் பகிஷ்­க­ரிக்கக் கோரு­வதும் பிர­தான போட்­டி­யா­ளர்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தற்­காக வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வதும் நிகழ்­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் 2005 ஆம் ஆண்டு மேற்­கொண்ட பகிஷ்­க­ரிப்­பினால் அனு­ப­வித்த பாடங்­களை நினைத்­துப்­பார்ப்­பது கட்­டா­ய­மாக மாறி­யுள்­ளது.

இந்த நாட்டின் சிறு­பான்­மை­யி­னரின் தலை­விதி என்­ன­வென அறிந்­து­கொள்ள எஞ்­சி­யி­ருப்­பது மூன்று நாட்கள் மாத்­தி­ரமே. வடக்­கிலும் கிழக்­கிலும் ஒவ்­வொரு பிர­சார மேடை­யிலும் நான் பார்ப்­பது சிறு­பான்­மை­யினர் மீது விதைக்­கப்­படும் இன­வா­தமும் வெறுப்­பு­ரை­க­ளுமே. பிரித்­தாளும் சூழ்ச்­சிக்குப் பெயர் போனது சிங்­கள அர­சாங்­கங்கள். சுதந்­திரம் கிடைத்­த­தி­லி­ருந்து அவை செய்­து­வ­ரு­வது அதைத்தான். ஆனால் இந்தத் தேர்­தலில் நாம் முன்­னெப்­போதும் பார்த்­தி­ராத ஆழத்­தினைத் தொட்­டுள்­ளது.

மொட்டுக் கட்­சியின் முன்­னணிப் பிர­சா­ர­கர்கள், குறிப்­பாக வடக்கு, கிழக்கில் பிர­சாரம் மேற்­கொள்­ப­வர்கள் வெறுப்­பினைப் பரப்பி கோத்­தா­விற்கு வாக்கு சேக­ரிக்­கின்­றனர். சஜித்­திற்கு வாக்­க­ளிக்க வேண்டாம். ஏனெனில் சஜித் முஸ்­லிம்­க­ளுடன் இருக்­கின்றார். கோத்­தா­விற்கு வாக்­க­ளி­யுங்கள் ஏனெனில் அவர் முஸ்­லிம்­களை வைக்­க­வேண்­டிய இடத்தில் வைப்பார் என்­பதே இவர்­களின் பிர­சார சுலோ­க­மாக இருக்­கின்­றது. கருணா மற்றும் பிள்­ளையான் போன்­றோரும் பிர­சாரம் செய்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத நஞ்சைக் கக்கி வரு­கின்­றனர். முஸ்­லிம்­களைத் தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­க­வேண்­டு­மானால் கோத்­தா­விற்கு வாக்­க­ளி­யுங்கள் என்று அவர்கள் தமிழ் மக்­க­ளிடம் கேட்டு வரு­கின்­றனர். இதி­லுள்ள முரண்­நகை என்­ன­வென்றால் இதே மொட்டுக் கட்சி ஆத­ர­வா­ள­ரான ஹிஸ்­புல்லா இதே மொழி­யினைப் பயன்­ப­டுத்தி தீவி­ர­வாத முஸ்­லிம்­களைத் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் அணி­தி­ரட்ட அவரை உசுப்­பேற்றி வரு­கின்­ற­மை­யாகும்!
நல்­லாட்சி அர­சாங்கம் அது கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காற்றில் பறக்­க­விட்டு சிறு­பான்மை மக்­களை நட்­டாற்றில் விட்­டு­விட்­ட­மையே இவ்­வா­றான தந்­தி­ரங்கள் உலா­வ­ரு­வ­தனை சாத்­தி­ய­மாக்­கி­யுள்­ளது. வடக்­கிலும் கிழக்­கிலும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சமு­தா­யத்­தினர் தங்­களின் வாக்­கு­களை அளிக்­கக்­கூ­டாது என அழுத்தம் கொடுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது. அவர்­களின் பிரச்­சி­னை­யினை கோத்­தாவும் தீர்க்­கப்­போ­வ­தில்லை சஜித்தும் தீர்க்­கப்­போ­வ­தில்லை என அவர்­க­ளுக்குக் கூறப்­பட்டு வரு­கின்­றது. நீண்ட மௌனத்தின் பின்னர் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி அதன் கடைசிக் கட்சிக் கூட்­டத்தில் சஜித்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வது என வவு­னி­யாவில் தீர்­மா­னித்த பின்னர் காணா­மற்­போன குடும்­பங்­களைச் சேர்ந்த தாய் ஒருவர் சம்­பந்­தனை நோக்கி செருப்­பினை எறிந்­துள்ளார்.

மறு­மு­னையில் சஜித்­திற்­காக வாக்­க­ளிப்­ப­தனால் ஏற்­படும் விளை­வுகள் பற்றி முஸ்­லிம்கள் எள்ளி நகை­யா­டப்­ப­டு­கின்­றனர் அல்­லது அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். இம்­மக்­களின் சொந்தச் சமு­தா­யத்­தி­னரே அச்­சத்­தினைப் பரப்­பி­வ­ரு­கின்­றனர். வாக்­கா­ளர்­களைத் தூரப்­ப­டுத்த இவர்கள் பயன்­ப­டுத்தும் உத்­தி­களில் ஒன்று முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்­பான குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். புர்கா மற்றும் நிகாப் அணியும் பெண்­க­ளினால் வாக்குச் சாவ­டியில் அச்சம் உரு­வாக்­கப்­ப­டலாம் என்­கின்ற கார­ணத்­தினால் சமா­தா­ன­மான தேர்­த­லுக்­காக அதனைத் தடை­செய்­வது அவ­சியம் எனப் பொலிசார் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்­கு­த­லுக்கு முன்னர் நடந்த தேர்­தல்­க­ளிலும் முஸ்லிம் பெண்கள் வாக்­க­ளித்­துள்­ளனர். வரி­சையில் நின்­றுள்­ளனர். வாக்­க­ளிக்க முன்னர் தம் அடை­யா­ளத்­தினைக் காட்ட முகத்­தி­ரை­யினை நீக்கிக் காட்­டி­யுள்­ளனர். சகல தேர்­தல்­க­ளிலும் இவ்­வாறே ஒரு பிரச்­சி­னை­யு­மின்றி நடந்­துள்­ளனர் என்­கின்ற கார­ணத்­தினால் இவ்­வா­றான வீண் பிர­சா­ரங்கள் குழப்­பத்­தி­னையும் சந்­தே­கத்­தி­னையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன. அண்மைக் காலங்­களில் தமது ஆடை கார­ண­மாக அர­சாங்க நிறு­வ­னங்­க­ளிலும் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்­க­ளிலும் தொல்­லை­க­ளுக்­கா­ளான பெண்­களும் குறிப்­பாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்­கு­த­லுக்குப் பின்னர் காடை­யர்­க­ளினால் தாக்­கப்­பட்ட முஸ்லிம் கிரா­மங்­களைச் சேர்ந்த பெண்­களும் உண்­மை­யி­லேயே அச்­ச­ம­டைந்­துள்­ள­துடன் அவர்கள் முன்பு வாக்­க­ளித்த அதே எண்­ணிக்­கையில் வாக்­க­ளிக்கச் செல்­வார்­களா என்­பது சந்­தே­கமே.

2018 ஒக்­டோபர் 26 இல் நடந்த அர­சி­ய­ல­மைப்புச் சதி கிலி ஏற்­ப­டுத்தும் நினை­வூட்­ட­லாகும். குறிப்­பாக, ராஜபக் ஷவினை மறு­த­லித்த 6,217,162 வாக்­கா­ளர்­க­ளுக்கும் ஒரு நினை­வூட்­ட­லாகும். ஏனெனில் இந்த ராஜபக் ஷாக்கள் அவர்கள் எதிர்­பார்த்­தி­ராத வகையில் 2015 இல் எதை இழந்­தார்­களோ அதனை மீண்டும் பெறு­வ­தற்கு எமது அடிப்­படை ஜன­நா­யக நிறு­வ­னங்­களை இடித்­து­டைக்க ஆர்வம் கொண்­டுள்­ளனர் என்­பதே அந்த நினை­வூட்­ட­லாகும். மஹிந்த பின்­க­தவு வழி­யாகப் பத­வி­யினைப் பிடித்­த­போது சிறு­பான்மைக் கட்­சி­க­ளான TNA, SLMC, ACMC, TPAஒன்­றாக நின்று அவ­ரது அடா­வடி முயற்­சி­யினைத் தோற்­க­டித்­தமை எமது ஒற்­று­மையின் பலத்­தினைப் பறை­சாற்றி நிற்­கின்­றது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தமி­ழர்­களைப் பகைமை கொள்ளச் செய்­வதன் மூலம் சஜித் வெற்­றி­பெ­று­வ­தற்­கான சிறு­பான்­மை­யி­னரின் உத­வி­யினை அகற்றும் செயற்­பாட்டை மொட்டுக் கட்சி மேற்­கொண்டு வரு­கின்­றது. தாம் அனு­ப­வித்த அட்­டூ­ழி­யங்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களை வேண்­டு­மென்றே மீண்டும் பத­விக்குக் கொண்­டு­வர யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் விரும்­ப­மாட்­டார்கள் என்­பதை நன்கு அறிந்­து­கொண்டு, கோத்­தா­விற்கு எதி­ரா­ன­வர்­களை வாக்­க­ளிக்கச் செல்­லாது தடுக்கும் உத்­தி­யினை இவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். சிங்­களத் தலை­வர்­களைத் தெரி­வு­செய்­வதால் எப்­ப­யனும் இல்லை என்ற மந்­தி­ரத்­தினை ஓதி இம்­மக்­களை வாக்குச் சாவ­டி­யி­லி­ருந்து தூர­மாக்கும் சதித்­திட்­டத்­தினை இவர்கள் நிறை­வேற்­றி­வ­ரு­கின்­றனர்.

இந்த வாக்­கா­ளர்­களை ஏமாற்ற இவர்கள் பயன்­ப­டுத்தும் மூன்­றா­வது தந்­திரம் கோத்­தா­விற்கு ஒரு­போதும் வாக்­க­ளிக்­கா­த­வர்­களின் வாக்குச் சீட்­டுக்­களைச் செல்­லு­ப­டி­யற்­ற­தாக ஆக்க எடுக்கும் முயற்­சி­யாகும். கோத்­தா­விற்கு ஆத­ர­வாக மட்­டக்­க­ளப்பில் பிர­சாரம் செய்­ப­வர்கள் தமிழ்ப் பெண்கள் குழு­வொன்­றிடம் தமது விருப்பு வாக்­கு­களைச் செலுத்த மூன்று புள்­ள­டி­களைப் போடு­மாறு கேட்­டுள்­ளனர். அதா­வது இந்தப் பெண்கள் கோத்­தா­விற்கு வாக்­க­ளிக்­க­மாட்­டார்கள் என்­பதை அறிந்தே இவ்­வாறு கூறி­யுள்­ளனர். இரண்­டடி நீளமும் 35 வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் தாங்­கிய வாக்குச் சீட்டே குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்தப் போது­மான கார­ண­மாகும். 1 இல் இருந்து 3 வரை அடை­யா­ள­மி­டு­வதும் அல்­லது புள்­ளடி அடை­யாளம் (X) இடு­வதும் அல்­லது 1 இல் இருந்து 3 வரை­யான தெரி­வினை அடை­யா­ள­மி­டு­வதும் குழப்­பத்­தினை அதி­க­ரிக்கச் செய்­கின்­றது.
எவ்­வா­றா­யினும், இவர்கள் தமது வாக்­கு­களை அளிப்­ப­தற்­காகச் சென்­றே­யா­க­வேண்டும். இந்த நாட்டின் பிர­சைகள் என்ற ரீதியில் ஒரு­வரை ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­வ­தற்கும் மற்­று­மொரு பிர­ஜை­யினை நிரா­க­ரிப்­ப­தற்கும் உரிமை கொண்­டுள்ள இவர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள ஒருவர் பாவச்­யெல்­களில் வல்­ல­வரா அல்­லது ஓர­ளவு வல்­ல­வரா என்­கின்ற கள யதார்த்­தத்­திற்கு அப்பால், வாக்­குச்­சீட்­டுக்கள் எண்­ணப்­படும் அந்த ஜன­நா­யக செயற்­பாட்டின் உயிர்­நாடி இந்­நாட்டின் பிர­சை­க­ளான தாங்­கள்தான் என்­கின்ற உண்­மை­யினை எச்­சந்­தர்ப்­பத்­திலும் மறக்­க­லா­காது. வாக்­கு­ரிமை என்­பது நமது இருப்பின் அங்­கீ­காரம். நாம் இந்த நாட்டின் கௌர­வ­மான பிர­சைகள் என்­ப­தற்­கான சான்று. எனது வாக்கு இந்த நாட்டின் தலை­வி­தி­யினைத் தீர்­மா­னிக்கும் வலி­மை­யினை எனக்கும் வழங்­கி­யுள்­ளது எனும் பெரு­மி­தத்தின் குறி­யீடு. இது பொய்­யி­னையும் வெறுப்­பி­னையும் பரப்பிச் செல்லும் போலி ஆசா­மி­களின் பசப்பு வார்த்­தை­க­ளி­னாலும் அச்­சு­றுத்­தல்­க­ளி­னாலும் நீர்த்­துப்­போ­கக்­கூ­டாது.
வாக்களிக்கச் செல்லாமல் இருப்பது மக்களின் வலிமையினைக் குறைத்துவிடுகின்றது. அது பாவச்செயல்களில் வல்லவர்கள் கோலோச்சப் பாதை அமைத்துக் கொடுக்கின்றது.

அப்பட்டமான பொய்கள், தவறான தகவல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் திரிபுபடுத்தல்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் உண்மையான தெரிவுகள் தங்குதடையின்றி புள்ளடிகளாகப் பதியப்பட்டு மக்கள் நேய ஆட்சியினை மலரச் செய்வது நம் எதிர்காலச் சந்ததியினருக்காக நம் இயற்கை வளங்களுக்காக எம் நாட்டின் ஒற்றுமைக்காக எமது கலாசார விழுமியத்திற்காக, எமது வன வளத்திற்காக, எமது கடல்வளத்திற்காக, எமது பாரம்பரிய நிலத்திற்காக எமது வாழியல் உரிமைக்காக நாம் ஆற்றவேண்டிய கடமையாகும்.

புள்ளடியிட்டு பாவிகளின் கதைகளுக்கு முற்றுப் புள்ளியிடுவோம். நம் தலைவிதியினை நாமே எழுதுவோம். பிரசாரகர்கள் எம் தலைவிதியினை வரைய நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என்ற சிந்தனையுடன் வாக்களிக்கச் செல்வோம்.-Vidivelli

  • சிரீன் அப்துல் சரூர்

Leave A Reply

Your email address will not be published.