மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது

0 1,130

அர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ள மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­பத்­து­ட­னான (MCC) ஒப்­பந்தம் தொடர்பில் தற்­போது நாட்டில் பல­வாறு விமர்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது.

 

நாட்டின் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­காக அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­ப­னத்­தி­ட­மி­ருந்து 480 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை மானி­ய­மாகப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பிலே ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை கடந்த வாரம் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்தார். அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

 

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரி­சலை முகா­மைத்­துவம் செய்தல், நாடெங்கும் காணி­களின் நிர்­வா­கத்தை மேம்­ப­டுத்தல், வீதிக் கட்­ட­மைப்­பு­களை ஏற்­ப­டுத்தல், உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தல் ஆகிய திட்­டங்­களை உள்­ள­டக்­கியே இந் நிதி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இந்த ஒப்­பந்தம் 2020 ஆம் ஆண்டு முதல் அமு­லுக்கு வர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­ப­னத்­து­ட­னான ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தாலும் ஜனா­தி­பதி, எதிர்க்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உட்­பட பல்­வேறு தரப்­பினர் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டக்­கூ­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

 

நாட்டின் அர­சியல் அதி­கா­ரத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் மிலே­னியம் சவால்கள் போன்ற நாட்­டுக்கு சவால்­களை உரு­வாக்கும் ஒப்­பந்­த­மொன்றில் அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வது பொருத்­த­மற்­றது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்­துள்ளார்.

 

மக்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்­தையும் தெளி­வு­ப­டுத்­திய பின்பு உரிய கலந்­து­ரை­யாடல் களை நடத்தி நாட்­டுக்குப் பாத­க­மற்­ற­தாயின் ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்பு கைச்­சாத்­தி­டலாம் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

 

இலங்­கையில் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த மிலே­னியம் சவால்கள் ஒப்­பந்தம் ஊடாக அமெ­ரிக்கா 480 மில்­லியன் டொலர் நிதி வழங்­கு­வ­தாகக் கூறப்­பட்­டாலும் இது இலங்­கையின் 2 இலட்சம் ஏக்கர் காணியை சுவீ­க­ரிக்கும் அமெ­ரிக்­காவின் திட்டம் என எதிர்க்­கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

 

காணி தொடர்­பான விப­ரங்­களை கணினி மயப்­ப­டுத்­து­வ­தற்கு வெளி­நாட்­டுக்கு இட­ம­ளிப்­பது ஆபத்­தா­னது. இது நாட்டின் இறை­மைக்கும் பொரு­ளா­தா­ரத்­திற்கும் சவாலை ஏற்­ப­டுத்தும் எனவும் மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

 

மக்­க­ளி­டையே கருத்­துக்­க­ணிப்பு நடத்­தாது ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படக் கூடாது. இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தானால் நாட்டின் 18 வீத­மான நிலம் அமெ­ரிக்க வச­மாகக் கூடும். கிழக்கு மாகா­ணத்­திலே அதிக நிலம் அமெ­ரிக்கா வச­மாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார்.

 

இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டக்­கூ­டாது என நேற்று முன்­தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலை­யத்தின் முன்­பாக ஆர்ப்­பாட்­ட­மொன்றும் நடத்­தப்­பட்­டது. தாய்­நாட்டைப் பாது­காக்கும் இயக்கம் இந்த ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.  ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டக்­கூ­டாது என இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கமும் அரசைக் கோரி­யுள்­ளது. இந்த ஒப்­பந்­தத்தை எதிர்த்து உடு­தும்­பர காசி­யப்ப தேரர் கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் நேற்று முதல் உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்றினையும் ஆரம்­பித்­துள்ளார்.

 

‘அமெ­ரிக்­காவின் சி.ஐ.ஏ. யினால் தயா­ரிக்­கப்­பட்ட மரணப் பொறி­யல்ல இந்த ஒப்­பந்தம். இதில் காணி பிரச்­சி­னைகள் இல்லை. நாட்டின் அபி­வி­ருத்தி கருதி அனைத்து நிறு­வ­னங்­க­ளி­னதும் வழி­காட்­டலின் கீழ் ஏற்­ப­டுத்­தப்­பட்ட திட்­டமே இது. இதன் மூலம் எமக்கு 8600 கோடி ரூபா கிடைக்கும்’ என சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

 

இதே­வேளை ‘ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. எனவே இது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­ட­தென நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதும் அங்­கீ­கா­ரத்­துக்­காக பாராளுமன்றில் சமர்ப்­பிக்­கப்­படும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பது போன்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களும் பாராளுமன்றமும் தெளிவுபடுத்தப்படவேண்டும். கலந்துரை யாடல்கள் நடத்தப்படவேண்டும். இதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். இதில் அவசரப்படுவது ஆரோக்கியமானதல்ல.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.