புத்தக கண்காட்சிக்கு சென்ற நால்வர் கைது

மண்டபத்தை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு

0 725

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில் வீடியோ பண்ணிக் கொண்­டி­ருந்த நான்கு முஸ்லிம் வாலி­பர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி மண்­ட­பத்தில் கட­மை­யி­லி­ருக்கும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பண்­டா­ர­நா­யக்க மண்­ட­பத்தில் கடந்த பத்து தினங்­க­ளாக புத்­தகக் கண்­காட்சி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழ­மை­யோடு முற்­றுப்­பெற்­றது. மேற்­படி கைது செய்­யப்­பட்ட நான்கு பேரும் உட்­பி­ர­வே­சத்­திற்­கான அனு­மதி கட்­ட­ணத்­தையும் செலுத்­தாது கடந்த 28 ஆம் திகதி சனிக்­கி­ழமை உட்­பி­ர­வே­சித்தே மேற்­படி வீடியோ நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இது பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது, குறித்த நான்கு சந்­தேக நபர்­களும் புத்­தக கண்­காட்­சிக்கு வரும் பார்­வை­யா­ளர்­க­ளோடு உள்­நு­ழைந்து மாநாட்டு மண்­டபம் உள்­ளிட்ட காட்­சி­களை வீடியோ பதிவு செய்து கொண்­டுள்­ளனர். இவர்கள் மீது சந்­தேகம் கொண்ட மக்கள் இவர்­க­ளிடம் கேள்வி எழுப்­பி­ய­துடன் இவர்­களை வெளி­யேற விடாது தடுத்து வைத்தே மாநாட்டு மண்­டப பொறுப்­பி­லுள்ள பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இவர்­க­ளி­ட­மி­ருந்து வீடியோ கெமரா ஒன்­றையும் மூன்று கைபே­சி­க­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

புத்­தகக் கண்­காட்­சியை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்­காக இவ்­வாறு ஈடு­பட்­ட­தாக அவர்கள் கூறி­யுள்­ளனர். ஆனால் 29 ஆம் திகதி முற்­றுப்­பெ­ற­வுள்ள இறுதிக் கட்­டத்தில் இவ்­வாறு நடந்து கொண்­டமை பொலி­ஸா­ருக்கு மேலும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் ஏற்­க­னவே இவர்கள் மீது சந்­தேகம் கொண்ட மக்கள் இவர்­க­ளிடம் தம்மைப் பதி­வு­செய்த காட்­சி­களை அழிக்­கும்­படி கூறி­ய­போது அவர்கள் அழித்து விட்­ட­தாகக் கூறி­யுள்­ளனர். ஆனால் அக்­காட்­சிகள் அழிக்­கப்­ப­டா­தி­ருப்­பதைக் கண்டும் மேலும் சந்­தேகம் தரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட நால்­வரும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக கறு­வாத்­தோட்ட பொலி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­டப பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி டீ.பத்ம­சிரி மற்றும் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரனாத் சமரகோன் ஆகிய இருவரும் தொடர்ந்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் வெல்லம்பிட்டிய, வெள்ளவத்தை, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 – 43 வயதுகளுக்கிடைப்பட்டவர்களாவர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.