இரும்புத்திரையை உடைத்திடுவோம்!

0 237

நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பௌத்த இன­வாத கடும்­போக்­கா­ளர்­களின் ஆதிக்கம் நாடு பூரா­கவும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு காவல்­து­றை­யி­னரும், அர­சாங்­கமும் துணை­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு பல சான்­றுதல் உள்­ளன. அச்­சான்­று­களில் ஒன்­றாக நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் மீறி நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் முல்­லைத்­தீவு குரு­கந்த ரஜ­மஹா விகா­ரையின் அதி­பதி கொழும்பு மேதா லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­பட்ட விவ­கா­ரமும் வர­லாற்றில் இடம்­பி­டித்­துள்­ளது. இந்த சம்­பவம் நாட்டில் பௌத்த இன­வாதம் எந்­த­ள­விற்கு காலூன்­றி­யுள்­ளது என்­ப­தனை புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. மேலும் நாட்டின் சட்­டமும், ஒழுங்கும், நீதி­மன்­றங்­களின் தீர்ப்பும் எங்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யா­தென்ற பௌத்த இன­வாத தேரர்­களின் நிலைப்­பாடு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய ஏற்றுக் கொள்ள முடி­யாத ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களின் எதி­ரொ­லி­யா­கவே சுமார் 30 வரு­டங்கள் கொடூர யுத்தம் நாட்டில் நடை­பெற்­றது. அந்த யுத்­தத்தில் ஏற்­பட்ட வெற்றி பௌத்த இன­வா­தி­களின் எண்­ணத்தில் அகங்­கா­ரங்­களை உரு­வாக்­கி­யுள்­ளன. அந்த சேற்றில் புதைந்து கொண்டு இருப்­ப­தனால் யுத்­தத்தின் கார­ணத்­தையும், அதனால் ஏற்­பட்ட வடுக்­க­ளையும், படிப்­பி­னை­க­ளையும், பின்­ன­டை­வு­க­ளையும் உணர்ந்து கொள்­வ­தற்கு முடி­யாத வகையில் பௌத்த இன­வா­தி­க­ளுக்கும், அவர்­களை இயக்­கு­கின்ற தேரர்­க­ளுக்கும் அறிவு மழுங்­கி­யுள்­ளார்கள். இந்­நிலை நீடிக்­கு­மாயின் இலங்கை மிக மோச­மான இன­வா­தத்தைக் கொண்­ட­தொரு நாடு என்ற அவல நிலைக்­குள்­ளா­கி­விடும்.

இதே வேளை, பௌத்த இன­வா­தி­களும், தேரர்­களும் சிறு­பான்­மை­யி­னரை தேவைக்கு ஏற்­ற­வ­கையில் பயன்­ப­டுத்திக் கொண்டு தமி­ழர்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும் மோத­விட்டு நிரந்­தரப் பகை­யா­ளி­க­ளாக மாற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனை உணர்ந்து கொள்­ளாது தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­த­னையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

குரு­கந்த ரஜ­மஹா விகாரை

முல்­லைத்­தீவு நாயாறு, குரு­கந்த ரஜ­மகா விகா­ரையின் வர­லாறு மிகவும் குறு­கி­ய­தாகும். குறிப்­பிட்ட இடத்தில் முல்­லைத்­தீவு நாயாறு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யமே இருந்­துள்­ளது. இதற்கு நீண்ட வர­லாறு இருப்­ப­தாக அப்­பி­ர­தேச தமிழ் மக்கள் தெரி­விக்­கின்­றார்கள். யுத்த காலத்தில் குறிப்­பிட்ட பிர­தேசம் இரா­ணு­வத்தின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டில் இருந்த போதுதான், அங்கு புதி­தாக இந்த விகாரை கட்­டப்­பட்­ட­தாக அப்­பி­ர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றார்கள். இவ்­வி­காரை அமைக்­கப்­பட்­டுள்ள காணி நாயாறு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்­திற்­கு­ரி­யது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது ஆல­யத்தின் காணியின் ஒரு பகு­தி­யினை அப­க­ரித்தே குரு­கந்த ரஜ­மகா விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விகா­ரையின் நிலை­பேற்­றுக்கு அங்கு அருகில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம் பெரும் துணை­யாக இருந்­துள்­ளது.
இதே வேளை, இந்த ஆல­யத்தின் முழுக் காணி­யையும் கப­ளீகரம் செய்து கொள்ளும் திட்­டமும் விகா­ரை­ய­தி­ப­திக்கு இருந்­துள்­ளது என்­ப­தனை அவ­ரது நட­வ­டிக்­கை­களின் மூல­மாக அறிந்துகொள்ள முடி­கின்­றது. அவர் நாயாறு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்­திற்கு வழி­பாட்­டிற்­காக வரு­கின்ற பக்­தர்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆல­யத்­திற்கு வரு­கின்ற தமி­ழர்­க­ளுக்கு நெருக்­க­டி­க­ளையும், அச்­சு­றுத்­தல்­க­ளையும் ஏற்­ப­டுத்தி அவர்­களின் வரு­கையை முற்­றாகத் தடுக்கும் போது நாள­டையில் முழுக் காணியும் விகா­ரைக்­கு­ரி­ய­தாக மாற்­றப்­ப­டு­வ­தோடு, ஆல­யமும் இல்­லாமல் போய்­விடும். இது இஸ்­ரே­லி­யர்­களின் நில ஆக்­கி­ர­மிப்­புக்கு ஒப்­பா­ன­தாகும். இத்­த­கைய நட­வ­டிக்­கையை கண்­டித்து ஆலய நிர்­வா­கத்­தினால் பொலிஸில் முறைப்­பாடு (2019 ஜுன் மாதம்) செய்­யப்­பட்­டது. அதனை நீதி­மன்றம் விசா­ர­ணைக்கு எடுத்த போது இரண்டு வழி­பாட்டுத் தலங்­களும் தங்­க­ளது வழி­பாட்டுக் கட­மை­களை பக்­தர்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தாது செயற்­ப­டுத்த வேண்­டு­மென்றும், உள்­ளூ­ராட்சி சபையின் அனு­ம­தியைப் பெற்று புதிய கட்­டி­டங்­களை அமைக்க வேண்­டு­மென்றும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. ஆயினும், இதன் பின்­னரும் ஆல­யத்­திற்கு வருகை தந்­த­வர்­க­ளுக்கு இடை­யூ­றுகள் செய்­யப்­பட்­ட­தா­கவே தமி­ழர்கள் தெரி­வித்­துள்­ளார்கள்.

இதே வேளை, குறிப்­பிட்ட பிர­தே­சம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்­கு­ரி­யது என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­கு­ரிய பெயர் பல­கையும் நடப்­பட்­டுள்­ளது. இதற்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை தொடர்ச்­சி­யாக வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நாயாறு பாலத்­துக்கு அண்­மை­யாக தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை அடாத்­தாக பிடித்து அப்­ப­கு­தியில் பல நூறு ஆண்­டு­க­ளாக பிள்­ளையார் ஆலயம் இருந்த இடத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள குரு­கந்த ரஜ­மஹா விகா­ரைக்கு இடத்தை சொந்­த­மாக்­கு­வ­தற்கும் 2018ஆம் ஆண்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

அப்­ப­கு­தியில் உள்ள ஆல­யத்­தி­னதும், தமிழ் மக்­க­ளி­னதும் காணி­களை அப­க­ரிப்­ப­தற்­காக தொல்­பொருள் திணைக்­களம் ஊடாக நில அளவைத் திணைக்­க­ளத்தால் 2018.07.03 நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதற்கு மக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் எதிர்ப்பு தெரி­வித்­தார்கள். ஏற்­க­னவே வன­ஜீ­வ­ரா­சிகள் திணை­களம் ஊடாக 21 ஆயி­ரத்து 500 ஏக்கர் நிலத்தை சுவீ­க­ரிப்பு செய்­வ­தற்கு எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வரும் சூழ­லிலே இந்த நட­வ­டிக்கை எடுக்­க­ப்பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேதா­லங்­கார தேரர் மரணம்

பழை­ய­செம்­மலை நாயாறு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தின் காணி­யினை அடாத்­தாக பிடித்து விகாரை அமைத்துக் கொண்ட தேரர் கொழும்பு மேதா­லங்­கார தேரர் என்றே அழைக்­கப்­ப­டு­கின்றார். மேதா­லங்­கார தேரர் புற்று நோயினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் கொழும்பு மஹ­ர­கம வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் (21.09.2019அன்று) மர­ண­ம­டைந்தார்.

இந்­நி­லையில் மர­ண­ம­டைந்த பௌத்த பிக்­குவின் சட­லத்தை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்­துக்கு கொண்டு வந்து இறு­தி­கி­ரி­யை­களை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இரா­ணுவம் மற்றும் கடற்­ப­டையின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஆல­யத்தின் நிர்­வா­கிகள் தெரி­வித்­துள்­ளார்கள். இந்­ந­ட­வ­டிக்­கை­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக பழை­ய­செம்­மலை நாயாறு நீரா­வி­யடி பிள்­ளையார் நிர்­வா­கத்­தி­னரால் (22.09.2019) முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் தடை கோரி முறைப்­பாடு ஒன்று செய்­யப்ட்­டது.
இத­னை­ய­டுத்து முல்­லைத்­தீவு நீதி­மன்ற பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் முன்­னி­லையில் இந்த விவ­காரம் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­படி 23.09.2019 காலை 9 மணிக்கு விகாரை தரப்­பி­ன­ரையும் பிள்­ளையார் ஆலய தரப்­பி­ன­ரையும் முல்­லைத்­தீவு நீதி­மன்றில் முன்­னி­லை­யா­கு­மாறும் நாளைய (23.09.2019) தினம் இந்த விவ­காரம் தொடர்­பாக நீதி­மன்­றத்தால் கட்­டளை ஒன்று பிறப்­பிக்கும் வரை குறித்த பௌத்த பிக்­குவின் உடலை பூமியில் புதைக்­கவோ எரிக்­கவோ முடி­யாது எனவும் பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் உத்­த­ர­விட்டார்.

இந்­நி­லையில் முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் 23ஆம் திகதி விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. நாயாறு, குரு­கந்த ரஜ­மகா விகா­ரா­தி­ப­தியின் உடலை, நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் தகனம் செய்ய நீதி­மன்றம் தடை உத்­த­ர­விட்­டது. அத்­தோடு, தேரரின் உடலை இரா­ணுவ முகா­மிற்கு அருகில் உள்ள கடற்­க­ரையில் தகனம் செய்­யு­மாறும் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இதேவேளை முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்தின் வளா­கத்தில் பெரு­ம­ளவு மக்கள் திரண்டிருந்­தார்கள். பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்த ஞான­சார தேரரின் தலை­மையில் இன­வாத பௌத்த பிக்­கு­களும், சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் நீதி­மன்­றத்தின் வளா­கத்தில் இருந்­தார்கள்.

நீதி­மன்­றத்தில் உத்­த­ரவு மீறப்­பட்­டது

எனினும், நீதி­மன்ற உத்­த­ர­வினை கருத்­திற்­கொள்­ளாது, பொது மக்­களின் பலத்த எதிர்ப்­பிற்கு மத்­தியில் தேரரின் உடல் நீரா­வி­யடி ஆலய வளா­கத்தில் தகனம் செய்­யப்­பட்­டுள்­ளது. நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்கு மாற்­ற­மாக கொழும்பு மேதா­லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­ப­டு­வ­தற்கு பாது­காப்பு தரப்­பினர் பூரண ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­னார்கள். அத்­தோடு, சட்­டத்­திற்கு மாற்­ற­மாக செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு பாது­காப்பும் வழங்­கி­னார்கள். சட்­டத்­திற்கு மாறாக நடக்­கின்­ற­வர்­களை கைது செய்ய வேண்­டி­ய­வர்கள் சட்­டத்தை மதிக்­காது செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வது என்­பது இலங்­கையின் சட்ட ஆட்­சியில் உள்ள பார­பட்­சத்தைக் காட்­டு­கின்­றது.

இதே வேளை, ஆல­யத்தின் எல்­லைக்குள் உடலை தகனம் செய்­வது நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்கு எதி­ரா­னது என்று சட்­டத்­த­ரணி ஒருவர் ஞான­சாரத் தேரர் தலை­மை­யி­லான பிக்­கு­க­ளுக்கும், ஏனை­ய­வர்­க­ளுக்கும் சுட்டிக் காட்­டிய போது ஏற்­பட்ட வாக்­கு­வாதம் இறு­தியில் கைக­லப்பில் முடிந்­துள்­ளது. இதனால், ஒரு சில­ருக்கு காயங்கள் ஏற்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கண்­ட­னங்கள்

பௌத்த தேரர்­களும், ஒரு சில சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் நீதி­மன்­றத்தின் தீர்ப்பை மதிக்­காது செயற்­பட்­ட­மையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, கோத்­த­ாபய ஆகி­யோர்கள் கண்­டித்­துள்­ளார்கள். இவ்­வாறு கண்­டித்­துள்ள இவர்கள் சட்­டத்தை மதிக்­காது நடந்­த­வர்­களை கைது செய்ய வேண்­டு­மென்று தெரி­விக்­க­வில்லை. தற்­போது ஜனா­தி­பதி தேர்தல் காலம் என்­ப­தனால் தமிழ் மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தாமரை இலையில் ஒட்­டாது தண்ணீர் போன்று நடந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். பௌத்த இன­வா­தி­க­ளி­னதும், இன­வாத தேரர்­க­ளி­னதும் ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கை­களின் போது இவ்­வா­றுதான் சிங்­கள அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நாட்டை நிர்­வ­கிக்கும் ஆணையை சட்ட ரீதி­யாகப் பெற்றுக்கொண்ட ஆட்­சி­யா­ளர்கள் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் பார­பட்­ச­மாக நடந்து கொள்­வது பௌத்த இன­வா­தி­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாது­காப்பு அர­ணாக இருக்­கின்­றது. இந்த அரணை உடைக்­காத வரை நாட்டில் நீதியை நிலை­நாட்ட முடி­யாது.

தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும்

பௌத்த இன­வா­திகள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக ஆட்­சி­யா­ளர்­களின் உத­வி­யுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தனை தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் மிகவும் தெளி­வாக உணர்ந்­துள்­ளார்கள். ஆனால், நடை­மு­றையில் இதனைக் கண்டு கொள்ள முடி­வ­தில்லை. தமிழர்­க­ளுக்கும், முஸ்­லி­ம்க­ளுக்கும் இடையே உள்ள முரண்­பா­டு­களை தீர்த்து வைக்­கு­மாறு பௌத்த இன­வா­தி­களை நாடு­கின்ற ஒரு நிலையை காணக்கூடி­ய­தாக இருக்­கின்­றது. இந்­நி­லைப்­பாட்டை அண்­மைக்­கா­ல­மாக தமி­ழர்­க­ளி­டமே அவ­தா­னிக்க முடி­கின்­றது.

தமி­ழர்­க­ளுக்கும், முஸ்­லி­ம­க­ளுக்கும் இடையே உள்ள முரண்­பா­டு­களை பயன்­ப­டுத்திக் கொள்­வதில் பௌத்த இன­வா­திகள் முண்­டி­ய­டித்துக் கொண்டு முன்னே வரு­வ­த­னையும் பார்க்­கின்றோம். ஒரே மொழியை பேசு­கின்ற இரண்டு இனங்­க­ளையும் மோத­விட்டு புதினம் பார்க்­கின்ற தரப்­பா­கவே பௌத்த இன­வா­தி­களும், அவர்­களை இயக்­கு­கின்ற பிக்­கு­களும், அர­சி­யல்­வா­தி­களும் உள்­ளார்கள்.

இத்­த­கைய பௌத்த இன­வா­திகள் தமி­ழர்­களுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே பிணக்­குகள் ஏற்­படும் போது தமி­ழர்­களின் பக்கம் நின்று போரா­டு­கின்­றார்கள். தமி­ழர்கள் அதனை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு முயற்­சி­களை எடுக்­கின்­றார்கள். இது தமி­ழர்­களின் அர­சியல் போராட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள பல­வீ­னத்தைக் காட்­டு­கின்­றது. தமி­ழர்கள் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்டு, உயிரிழப்­புக்­களை சந்­திப்­ப­தற்கும், தங்­க­ளுக்­கு­ரிய அர­சியல் அதி­கா­ரங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் தடை­யாக இருப்­ப­வர்கள் பௌத்த இன­வாத கடும்­போக்கு தேரர்­களும், அர­சி­யல்­வா­தி­க­ளு­மா­வார்கள். இத்­த­கை­ய­வர்­களை துணைக்கு அழைத்து முஸ்­லிம்­களை அடக்க நினைப்­பது அல்­லது நியா­யத்தைப் பெற்றுக்கொள்ள எண்­ணு­வது சர­ணா­கதி நிலை­யாகும். தமி­ழர்­க­ளுக்கு நியா­யத்தைப் பெற்றுத் தருவோம் என்று முஸ்­லிம்­க­ளோடு மல்­லுக்­கட்டும் பௌத்த இன­வாத தேரர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள மக்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் பிணக்­குகள் ஏற்­படும் போது தமி­ழர்­க­ளுக்கு பாத­க­மாக செயற்­ப­டு­வ­தனைக் காண்­கின்றோம். கல்­முனை பிர­தேச (தமிழ்) உப­பி­ர­தேச செய­ல­கத்தை தரம் உயர்த்த வேண்­டு­மென்ற கோரிக்கை தீவி­ர­ம­டைந்த போது, தமி­ழர்­க­ளுக்கு நியா­யத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று 2019.7.17ஆம் திகதி சாகும்­வரை உண்­ணா­வி­ரதம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதன்போது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும், இவ்­வி­வ­கா­ரத்தில் ஈடு­படும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டன. கல்­மு­னையில் தமிழ்/ முஸ்லிம் இன­மோதல் ஏற்­பட்­டு­வி­டுமோ என்று அச்சம் கொள்ளும் அள­வுக்கு அந்த உண்­ணா­வி­ரதம் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. தொடர்ச்­சி­யாக 07 நாட்கள் உண்­ணா­வி­ரதம் நடை­பெற்­றது.

இந்த உண்­ணா­வி­ரதம் கல்­முனை சுபத்­ரா­மய விகா­ரா­தி­பதி ரன்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரர் தலை­மையில் நடை­பெற்­றது. இவ­ருடன் கிழக்­கி­லங்கை இந்து குருமார் ஒன்­றி­யத்தின் தலை­வரும், கல்­முனை முருகன் ஆல­யத்தின் பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்­தரும், கல்­முனை மாந­கர சபையின் உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரன் ராஜன், அழ­கக்கோன் விஜ­ய­ரத்னம், இந்து ஆல­யங்­களின் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ணப்­பிள்ளை லிங்­கேஸ்­வரன் ஆகி­யோர்­களும் பங்­கேற்­றனர்.

இவர்­களின் போராட்­டத்தில் நியாயங்கள் இருந்­தன. அதனை பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களும் ஏற்­றுள்­ளார்கள். எல்­லை­களை தீர்­மா­னிப்­ப­தில்தான் பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆனால், இவர்கள் தற்­போது முல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் பிக்­குவின் உடல் தகனம் செய்­யப்­பட்­ட­மை­யிட்டு எந்தக் கருத்­தையும் தெரி­விக்­க­வில்லை. மௌன­மா­கவே இருக்­கின்­றார்கள். கல்­முனை முஸ்­லிம்கள் கல்­முனை தமி­ழர்­க­ளுக்கு அநி­யா­யங்­களைச் செய்­கின்­றார்கள் என்று அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருக்கும் ரன்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரர் முல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்­தை­யிட்டு கருத்­துக்­களை சொல்­ல­வில்லை.

மேலும், கல்­மு­னையில் நடை­பெற்ற உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேலும் உற்­சா­கப்­ப­டுத்தி கல்­மு­னையில் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே விரி­சல்­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று அத்­து­ர­லிய ரத்ன தேரர், கல­கொட அத்­த­ஞா­ன­சார தேரர், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சுமன ரதன தேரர் ஆகி­யோர்கள் அங்கு சென்­றி­ருந்­தார்கள்;. இதற்கு முன்­ன­தாக தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக பல கருத்­துக்­களை வெளி­யிட்டு போராட்­டங்­களைச் செய்த இவர்­களை உண்­ணா­வி­ரத்தை ஏற்­பாடு செய்­த­வர்கள் மிகுந்த மகிழ்ச்­சி­யுடன் வர­வேற்­றார்கள். மேலும், உங்கள் பிரச்­சி­னை­களை நாங்கள் தீர்த்துத் தரு­கின்றோம் என்று வருகை தந்த பிக்குகள் தெரிவித்திருந்தார்கள். இந்த உண்ணாவிரத்தைக் கூட ஞானசார தேரரே முடித்து வைத்தார். தற்போது ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதியாது, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தையும் மதியாது பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு தலைமை தாங்கியுள்ளார். ஆகவே, இவர்களின் மனநிலையை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதே வேளை, அரசியல் ரீதியாக தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக பச்சையாக இனவாத்தைப் பேசினார்கள். தமிழர்களுக்கு அநியாயம் செய்யப்பட்டள்ளது என்றார்கள். ஆனால், இவர்கள் கூட நீராவியடி ஆலய விவகாரப் பிரச்சினையை அறிந்துகொள்ள விஜயம் செய்யவில்லை. அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. அது தமிழர்களுக்கு அநியாயம் என்று சொல்ல முடியவில்லை. ஆகவே, இவர்கள் தங்களின் வங்குரோத்து அரசியலை சரிசெய்து கொள்வதற்கு கல்முனை விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆகவே, தமிழர்களும், முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொள்ளும் விடயங்களில் எவ்வாறு தமது நோக்கத்தை அடைந்து கொள்ளலாமென்று பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் தமது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு முன்வருதவனையும் காண்கின்றோம்.

ஆதலால், தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுகை செய்து இரண்டு இனங்களையும் நிரந்தரமாக மோதவிடுவதற்கு பௌத்த இனவாதிகளும், அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்கு இனவாத அரசியல்வாதிகளும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதனை தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். பேசித் தீர்க்க வேண்டிய விவகாரங்களை விட்டுக் கொடுப்புக்களை செய்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனைச் செய்யாது தாங்கள் எங்கள் முடிவினில் மாறமாட்டோம் என்று தமிழர்களும், முஸ்லிம்களும் விடாப்பிடியாக இருந்தால் பௌத்த இனவாதிகளும், பேரினவாதிகளும் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படாத வரை இரண்டு இனங்களும் பௌத்த இனவாதிக்கத்தின் இரும்புத் திரையை உடைக்க முடியாது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.