எகிப்து ஜனாதிபதி சிசிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள்

0 461

எகிப்­திய ஜனா­தி­பதி அப்துல் பத்தாஹ் எல்-­சி­சி­யினை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தினைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட எகிப்­தி­யர்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு முன்­னணி மனித உரி­மைக்­கு­ழு­வொன்று வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

நாடு­மு­ழு­வதும் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்ட டசின் கணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து அமை­தி­யான ஆர்ப்­பாட்­டத்­திற்­கான உரி­மை­யினைப் பாது­காக்­கு­மாறு மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் கடந்த சனிக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் எகிப்­திய அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

தலை­நகர் கெய்­ரோ­விலும் ஏனைய நக­ரங்­க­ளிலும் நூற்­றுக்­க­ணக்­கான எகிப்­தி­யர்கள் வீதி­களில் இறங்கி சிசி வெளி­யேறு எனும் கோசம் உள்­ளிட்ட அர­சாங்­கத்தை வெளி­யே­று­மாறு கோரும் கோசங்­களை எழுப்­பினர். சிசியின் ஆட்­சிக்கு எதி­ராக மிக அரி­தாக இடம்­பெறும் மாற்­றுக்­க­ருத்தின் வெளிப்­பாடு என இது கரு­தப்­ப­டு­கின்­றது.

குறைந்­தது 74 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­க­மொன்­றிற்குத் தெரி­வித்த பாது­காப்பு வட்­டா­ரங்கள் சிவில் ஆடை தரித்த பொலிஸார் கெய்ரோ நகர்ப் பகு­தியில் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தன.

ஜனா­தி­பதி சிசியின் பாது­காப்பு முக­வ­ர­கங்கள் அமை­தி­யான ஆர்ப்­பாட்­டங்­கள் மீது பலப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக மத்­திய கிழக்கு மற்றும் வட ஆபி­ரிக்க மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பக பிரதிப் பணிப்­பாளர் மைக்கேல் பேஜ் தெரி­வித்தார்.

உலகம் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தையும் கடந்த கால அட்­டூ­ழி­யங்கள் மீண்டும் இடம்­பெ­றா­து தடுக்கும் வகையில் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து வரு­கின்­றது என்­பதை அதி­கா­ரிகள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

அடுத்த வாரம் இடம்­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் பொதுச்­சபைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக நிவ்­யோர்க்­கிற்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை புறப்­பட்டுச் சென்ற அல்-­சிசி வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்டம் தொடர்பில் எவ்­வித கருத்­துக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை.

கருத்துச் சுதந்­திரம், ஒன்று கூடு­வ­தற்­கான மக்­களின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்துச் செயற் படுமாறு எகிப்திய அரசாங்கத்தை எகிப்தின் சர்வதேச பங்காளி நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் கோர வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.