ந.தே.முன்னணி அநுரவை ஆதரிக்க தீர்மானம்

0 568

ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி வேட்­பாளர் அனுர குமார திஸா­நா­யக்­கவை ஆத­ரிக்க நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தீர்­மா­னித்­துள்­ளது.
எதிர்­வரும் நவம்பர் 16 இல் நடை­பெறத் திகதி குறிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில், தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பா­ள­ரான அனுர குமார திஸா­நா­யக்­கவை ஆத­ரிப்­ப­தென நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தலை­மைத்­துவ சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்சி நேற்­றைய தினம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

குறித்த அறி­விப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கட்­சியின் உள்­ளக மட்­டங்­க­ளிலும் சமூக மட்­டத்­திலும் பல சுற்றுக் கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் தொடர்ச்­சி­யா­கவும் விரி­வா­கவும் ஆராய்ந்­ததன் பின்­பு­லத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் பெறப்­பட்­டுள்­ளது.

நாட்டின் பிர­தான இரு அர­சியல் முகாம்­க­ளுக்கு வெளியே வலு­வான மூன்­றா­வது அர­சியல் சக்­தி­யொன்றைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யதன் அவ­சி­யத்தை ஆழ­மாக உணர்ந்­ததன் பின்­பு­லத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்­க­வுடன் கட்­சியின் தலை­மைத்­துவ சபை­யினர் பல கட்டப் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு வந்­துள்­ளனர்.

தேசிய மக்கள் சக்தி என்­பது 28 அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய ஒரு கூட்­ட­ணி­யாகும். இதன் ஸ்தாபக அமைப்­பு­களுள் ந.தே.மு.வும் ஒரு முக்­கிய அங்­க­மா­க­வுள்­ளது.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்­தியின் உள்­ளகக் கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் ந.தே.மு. பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு பல்­வேறு காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பு­களை வழங்கி வந்­துள்­ளனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்­தியின் பிர­தான பங்­கா­ளி­க­ளான மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ரு­டனும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தொடர்ச்­சி­யான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு வரு­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் நேற்­றைய தினம் ந.தே.மு.யின் தேசிய செயற்­குழு கொழும்பில் கூடி தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்கும் தீர்­மா­னத்­திற்கு அங்­கீ­காரம் வழங்­கி­யது.

மேலும், எதிர்­வரும் 26.09.2019 வியா­ழக்­கி­ழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன், ந.தே.மு.யின் முதலாவது உத்தியோகபூர்வ பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதன் மூலம் கட்சியின் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.