‘வன்முறை தீர்வல்ல’ என்பதே அஷ்ரபின் கோட்பாடாகவிருந்தது

நினைவேந்தல் நிகழ்வில் கலாநிதி ரவுப் செய்ன்

0 680

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் குரு­நாகல் சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ “ரிச்வின்” வர­வேற்பு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19ஆவது நினை­வேந்தல் நிகழ்வில் சிறப்பு பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆற்­றிய உரை

தொகுப்பு: பஸ்னா ஆதிப்

2000ஆம் ஆண்டு செம்­டெம்பர் 16ஆம் திகதி இறக்­காமம் ஆல­ம­ரச்­சந்தி எனப்­படும் இடத்தில் தற்­பொ­ழுது அந்த மரத்தை வெட்டி விட்­ட­போ­திலும், அன்று அம்­ம­ரத்­த­டியில் அம்­பா­றைக்கு செல்­வ­தற்­காக அதி­காலை 5.30 மணி­ய­ளவில் வந்து காத்துக் கொண்­டி­ருந்தேன். திரு­கோ­ண­மலை, கிண்­ணி­யாவில் எனக்­கொரு நிகழ்ச்சி இருந்­தது. அப்பொழுது சுபஹ் தொழு­கையை தொழு­து­விட்டு என்னை கடந்து சென்ற எனது மச்சான் ஒருவர் என்னை நோக்கி, “இன்று தலைவர் ஊருக்கு வருகை தர­வி­ருக்­கிறார். நீங்கள் எங்கு செல்­கின்­றீர்கள்” என்று வின­வினார்.

தலைவர் அன்று எனது மச்­சானின் வீட்­டுக்கு வர­வி­ருந்தார். காலை சாப்­பா­டாக புட்டும், விறால் மீன் கறியும் சமைக்­கு­மாறு வேண்­டி­ய­தற்­கி­ணங்க தயா­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. எனது தந்தை, சகோ­தரர், சொந்­தக்­கா­ரர்கள், அய­ல­வர்கள் என பலரும் தலை­வரின் வரு­கையை எதிர்­பார்த்து வீட்டை முற்­று­கை­யிட்டு இருந்­தார்கள்.

அன்று யுத்­தத்­திற்கு முன்னர் இருந்த வீதியில் அம்­பா­றை­யி­லி­ருந்து திரு­கோ­ண­ம­லைக்கு செல்­வ­தாக இருந்தால் பல­வி­த­மான வழி­களில் நுழைந்து செல்ல வேண்­டி­யி­ருந்­தது. ஒரு மணி­ய­ளவில் கிண்­ணி­யாவை சென்­ற­டைந்து விட்டேன்.

அன்று கைய­டக்கத் தொலை­பேசி வச­திகள் கிடை­யாது. அங்கு சென்ற பிற்­பாடு தான் தலைவர் அஷ்ரப் இறக்காமம் நகரை அடை­ய­வில்லை. மாறாக, தனது 51ஆவது வயதில் ஹெலி­கொப்டர் விபத்தில் வபாத்­தா­கி­விட்­டார்கள் என்ற செய்­தியை நான் கேள்­வி­யுற்றேன். இந்த நிகழ்வு மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­மை­யாக அமைந்­த­தற்கு காரணம் உள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் வர­லாற்றில் 1980களில் மிகவும் கறை, இருள் படிந்த எமது சமூகம் அநா­தை­யாக்­கப்­பட்டு, நடுத்­தெ­ருவில் நிறுத்­தப்­பட்ட ஒரு கால­மாகும்.

குறிப்­பாக, இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பின்னர் முஸ்­லிம்கள் நாதி­யற்­ற­வர்­க­ளாக நிறுத்­தப்­பட்ட கால­கட்டம். 1981ஆம் ஆண்டில் காத்­தான்­கு­டியில் கால்­ப­தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற இயக்கம் 1986ஆம் ஆண்டு ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து கொண்­டது. 1989ஆம் ஆண்டு நடந்த தேர்­தலில் முதன்­மு­த­லாக போட்­டி­யிட்­டது. பின்னர் படிப்­ப­டி­யாக இக்­கட்சி வளர்ச்­சி­ய­டைந்து மாபெரும் விருட்­ச­மாக வளர்ந்து நிற்­கின்­றது.

முஸ்லிம் சமூ­கத்தில் அர­சியல் அடை­யா­ளத்தை அல்­லது அடை­யாள அர­சி­யலை ஆரம்­பித்து வைத்த பெருமை தலைவர் அஷ்­ர­பையே சேரும். எனது பள்­ளிப்­ப­ரு­வத்தில் தலைவர் எனது ஊருடன் நல்ல நெருக்­க­மாக இருந்தார். அவ­ரு­டைய தந்­தைக்கு அங்கு ஏறத்­தாழ 15 ஏக்கர் கரும்பு காணி­யொன்று இருந்­தது. அக்­கா­ணியை பரா­ம­ரிப்­ப­தற்கு சட்டக் கல்­லூ­ரியின் விடு­முறைக் காலங்­களில் அடிக்­கடி வருவார் என்று எனது தந்­தையின் சகோ­த­ரர்கள் என்­னிடம் சொல்­லி­யி­ருக்­கின்­றார்கள். 1990களில் அவர் அங்கு வந்­த­போது நான் 9ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்­டி­ருந்தேன். அவ­ரு­டைய கூட்டம் எங்கு நடை­பெற்­றாலும் அவ­ரது உரையை செவி­ம­டுப்­ப­தற்­காக நான் செல்­வது வழக்­க­மாக கொண்­டி­ருந்தேன். அவ்­வு­ரையில் 2 விட­யங்கள் என்னை கடு­மை­யாகக் கவர்ந்­தி­ருந்­தன.
அவற்றுள் ஒன்­றுதான் அவ­ரது “தொனி.” இயல்­பா­கவே அவ­ரது தொனி வெள்ளித் தொனி என்­ற­ழைக்­கப்­படக் கூடிய வகையில் அமைந்­தி­ருக்கும். மிகவும் அற்­பு­த­மான அந்த தொனியின் மூலம் உரை­யாற்­று­கையில் நீண்ட நேரம் செவி­சாய்த்துக் கொண்­டி­ருக்­கலாம். இரண்­டா­வது விடயம் அவ­ரது உரை மிகுந்த தர்க்­க­ரீ­தி­யாக, அறி­வு­பூர்­வ­மாக ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­தாக அமையும்.

ஒரு தலை­வ­ரிடம் இருக்க வேண்­டிய தலை­மைத்­துவம் பற்றி உல­க­ளா­விய ரீதியில் நிறைய கோட்­பா­டுகள் உள்­ளன. தலை­மைத்­துவம் என்­பது ஒரு சிறந்­தணித் தொகுப்பா? அல்­லது பண்­புகள் நிறைந்த தொகுப்பா? இத்­த­கைய கோட்­பா­டு­களை எல்லாம் தொகுத்து நோக்­கினால் தலைவர் அஷ்­ரபின் தலை­மைத்­துவம் இந்த எல்­லா­வ­கை­யான கோட்­பா­டு­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டதை எளி­தாகப் புரிந்­து­கொள்­ளலாம்.

தலை­வரின் அர­சியல் சாதனை என்ன என்ற கேள்­வி­யொன்று எம்­மத்­தியில் உள்­ளது. பல­வி­த­மான சாத­னை­களை எமது சமூ­கத்­திற்­காக அவர் ஆற்­றி­யி­ருக்­கின்றார். அர­சி­ய­ல­மைப்பில் 15ஆவது திருத்­தத்தை கொண்­டு­வ­ரு­வதில் மிக­முக்­கிய பங்­காற்­றி­யவர் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்­களே.

பாரா­ளு­மன்­றத்தில் ஒரு கட்சி நுழை­வ­தற்கு 12.5வீத வாக்­கு­களை பெற்­றி­ருக்க வேண்­டு­மென்ற அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை வெறு­மனே 5வீத வாக்­குகள் பெற்றால் போது­மா­னது என்ற மிகப் பெரிய சாத­னையை அவர் நிகழ்த்­தி­யுள்ளார்.

முஸ்­லிம்­களின் அர­சியல் அடை­யா­ளத்தை இந்த நாட்டில் வெகு­வாக நிலை­நி­றுத்தி சகல கட்­சி­க­ளாலும் இறு­தி­யாக ஏமாற்­றப்­பட்ட முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஓர் அர­சியல் முக­வ­ரியை தலைவர் அஷ்­ரப்தான் உண்­மையில் வழங்­கி­னார்கள்.

அந்­த­வ­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் இத்­த­கைய அர­சியல் அடை­யா­ளத்தை அல்­லது அடை­யாள அர­சி­யலை மிக உறு­தி­யாக நிலை­நி­றுத்­திய பெருமை அவ­ரையே சாரும்.

1993ஆம் ஆண்­ட­ளவில் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அபூ­பக்­கரின் மகன் என்­னு­டைய நண்பன். ஒருநாள் அவ­ரு­டைய வீட்­டுக்கு சென்­ற­போது அங்கு தலை­வரின் திறனை காண வாய்ப்­பொன்று கிடைத்­தது. விளையும் பயிரை முளை­யிலே தெரியும் என்­ப­தற்­கி­ணங்க அவர் நிறைய கதை­களை எங்­க­ளிடம் கூறினார்.

கொழும்பில் ஸாஹிரா கல்­லூ­ரியில் தலைவர் கற்­கின்­ற­போது அவ­ருடன் கற்ற சக மாண­வ­னொ­ருவன் அதிபர் அலு­வ­ல­கத்­திற்கு சென்று, அஷ்ரப் தான் அமரும் கதி­ரையில் ஊசி­யொன்றை வைத்­த­தா­கவும், அது தன்னைக் குத்­தி­விட்­ட­தா­கவும் முறைப்­பாடு செய்தார். அதிபர் உடனே தலைவர் அவர்­களை அழைத்து விசா­ரித்தார். அப்­போது தலைவர் அந்த மாண­வனை நோக்கி நான் ஊசி வைத்­ததை நீ பார்த்­தாயா என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் ஆம், நான் பார்த்தேன் என்று கூறினார். அதற்கு பதி­ல­ளித்த தலைவர் நான் வைத்­ததை நீ பார்த்­தி­ருந்தால் ஏன் நீ அதில் அமர்ந்தாய் என்று கேட்டார். அவ்­வாறு கண்­டி­ருந்தால் நீ அமர்ந்­தி­ருக்­க­மாட்டாய் அல்­லவா? ஆகவே, நீ பொய் சொல்­கின்றாய் என்று சொன்­னாராம். அதிபர், தலை­வரின் பேச்சுக் கூர்­மையைக் கண்டு வியந்­தாராம்.

நான் 2003ஆம் ஆண்­ட­ளவில் வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பேரா­சி­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்­பியின் வீட்­டுக்கு அடிக்­கடி சென்று உரை­யா­டு­வது வழக்கம். அவ­ருடன் சேர்ந்து பல­வி­த­மான உலக நடப்­புகள் தொடர்பில் அறிந்து கொள்வேன். அவ்­வாறு ஒரு நாள் இலங்­கையின் முஸ்லிம் அர­சியல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டிய போது தலைவர் விபத்தில் வபாத்­தாகி இரண்டு வாரங்­க­ளுக்குப் பிறகு என்­னிடம் கூறிய கருத்தை நினைவு கூரலாம் என்று நினைக்­கின்றேன்.

அதா­வது, என்­னு­டைய 72 வயது ஆயுட்­கா­லத்தில் பல சமூ­கத்தை சேர்ந்த பல­வித கோட்­பா­டுகள், பண்­பு­களைக் கொண்ட தலை­வர்­களை நான் கண்­டி­ருக்­கின்றேன். ஆனால், அஷ்­ரபை போன்று ஓர் உன்­ன­த­மான தலை­வரை நான் கண்­ட­தில்லை. சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் அவ­ரி­ட­மி­ருந்த ஆண் நிலை வசீ­கரம் என்ற பண்பை, தனித்­து­வத்தை எந்­த­வொரு சமூ­கத்தை சேர்ந்த அர­சி­யல்­வா­தி­யி­டமோ, தலை­வ­ரி­டமோ நான் காண­வில்லை.

உண்­மையில் அவ­ரி­ட­மி­ருந்த ஆண் நிலை வசீ­கரம், வெள்ளி தொனி, கம்­பீரம், தனித்­துவம், தலை­மைத்­துவம், நேர்மை, திறன், ஆளுமை இவை அனைத்­தையும் பார்க்­கையில் பேரா­சி­ரியர் கூறிய கூற்­றுக்கு விளக்கம் கிடைக்­கின்­றது.

தலைவர் கலந்­து­கொண்ட கூட்டம் ஒவ்­வொன்­றிலும், அவர் அடிக்­கடி ஆழ­மாக கூறிய ஒரு வாக்­கியம் தான் “at the time when the Tamil military weapon turned against Muslims we have started Sri Lanka Muslim Congress” எப்­போது தமிழ் ஆயு­தக்­கு­ழுக்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக திருப்­பப்­பட்­டதோ அன்றே முஸ்லிம் சமூ­கத்­திற்­காக முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபிக்­கப்­பட்­டது. இந்த வாக்­கி­யத்தை அடி­யொட்டி 2005 ஆம் ஆண்டு டெய்லி மிரர் பத்­தி­ரி­கைக்கு, ‘’ஹக்கீம் முஸ்லிம் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­புவார்” என்ற தலைப்பில் கட்­டு­ரை­யொன்றை எழுதி தலைவர் கூறிய கூற்றை சுட்­டிக்­காட்டி இருந்தேன். பிரிட்­டனை சேர்ந்த அர­சியல் ஆய்வு செய்த ஒருவர் அவ­ரு­டைய பட்டப் பின்­ப­டிப்பு அறிக்­கையில் இந்தக் கூற்றை அடிக்­கு­றிப்­பாக போட்­டுள்ளார். இந்தக் குறித்த விடயம் இன்­றைய கால­கட்­டத்­திற்கு மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

நான் இவ்­வாண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி சம்­மாந்­து­றையில் முன்­னைய நாள் இரா­ஜாங்க அமைச்சர் ஹரீ­ஸினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்­கான கல்வி விழிப்­பு­ணர்வு மாநா­டொன்றில் பேச்­சா­ள­ராகக் கலந்­து­கொண்டேன். அன்று நான் உரை­யா­டு­கையில் முக்­கிய கருத்­தொன்றை அங்கு பதிவு செய்தேன். “ஒரு சிறு­பான்மை சமூ­கத்தை அடக்­கி­யொ­டுக்­கு­வ­தற்கு அல்­லது சீர்­கு­லையச் செய்­வ­தற்கு பெரும்­பான்மை சமூ­கத்­திற்கோ அல்­லது அர­சாங்­கத்­திற்கோ தேவைப்­பட்டால் அந்த சிறு­பான்மை சமூ­கத்­திற்­குள்­ளேயே சில குழுக்­களை இயக்கி விரோத செயல்கள், வன்­முறை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஆத­ர­வ­ளிக்­கின்ற ஆயு­த­மாக பயன்­ப­டுத்தி ஊக்­கு­விப்­பதன் மூலம் மிக இல­கு­வா­கவும், விரை­வா­கவும் அச்­ச­மூ­கத்தை காய­றுக்­கலாம்; நிலை­கு­லையச் செய்­யலாம். இதற்குத் தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் ஏரா­ள­மான நிகழ்­வுகள் பதி­வா­கி­யுள்­ளன.

இலங்­கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்­டு­வெ­டிப்பு சம்­பவம் இக்­கூற்­றுக்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக அமைந்­துள்­ளது.
வட­கி­ழக்கில் அக்­க­ரைப்­பற்று, சம்­மாந்­துறை, நிந்­தவூர், கல்­முனை காத்­தான்­குடி, ஏறாவூர், மீரா­ஓடை, பால­முனை, ஓட்­ட­மா­வடி, திரு­கோ­ண­ம­லையில் தோப்பூர், மூதூர், கிண்­ணியா போன்ற பிராந்­தி­யங்­களில் புலிகள் மட்­டு­மல்­லாது பல்­வேறு தமி­ழா­யுதக் குழுக்கள் பெயர் கூறி­மு­டிக்க இய­லா­த­ள­வுக்கு இருந்­தன. இன்­னொரு பக்கம் இந்­தி­யா­வி­லி­ருந்தும் அமைப்­புக்­களை அமைத்து அவர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல­வி­த­மான அநி­யா­யங்­களை செய்து கொண்­டி­ருந்­தார்கள்.

இந்த தமி­ழா­யுதக் குழுக்கள் தான் பள்­ளி­வா­சல்­களில் முஸ்­லிம்­களை சுட்­டார்கள். முஸ்லிம் பொலி­ஸாரை தனி­மைப்­ப­டுத்தி கொலை செய்­தார்கள். இவ்­வாறு எக்­கச்­சக்­க­மான நாச­கார செயல்­களை கட்­ட­விழ்த்­து­விட்ட காலத்தில் தான் முஸ்­லிம்கள் குறித்தும், அர­சியல் அபி­லா­ஷைகள் குறித்தும் எது­வித அக்­க­றையும் இல்­லாமல் தான் ஜே. ஆர். ஜய­வர்­த­னவால் பிர­தமர் ஆர்.ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வுக்கு கூடத் தெரி­யா­மல்தான் அவ்­வொப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இத்­த­கைய கொடூ­ர­மான காலப்­ப­கு­தியில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் கட்சி அர­சி­யலில் பங்­கு­பற்றி வெற்­றி­கண்டு அர­சியல் அடை­யா­ளத்தை இந்த நாட்டில் நிலை­நி­றுத்தி சாதனை புரிந்­தது. இந்தக் கால­கட்­டத்தின் இயல்­பான போக்கு முஸ்லிம் இளை­ஞர்கள் வன்­மு­றையை நோக்கி செல்­கின்ற பேரா­பத்தை எதிர்­கொண்ட தரு­ணத்­தில்தான் அவர்­க­ளது உணர்­வு­க­ளுக்கு ஜன­நா­யகக் கால்­வாயை அமைத்து இந்தக் கட்­சியை உரு­வாக்கி ஜன­நா­யக முறையில் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களை அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக இந்தப் போராட்­டத்தை தலைவர் அஷ்ரப் ஆரம்­பித்து வைத்தார்.
1989ஆம் ஆண்டு றொனால்ட் றேகன், அமெ­ரிக்­காவில் ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது அவரை சுற்­றி­யி­ருந்த ஒரு கூட்டம் உலக வங்­கியின் முன்னாள் தலைவர் வோலட்டோ விச், ரிச்சர்ட் ஆக்­கிடெக், அதே­போன்ற பல தலை­மைகள் சேர்ந்து அமெ­ரிக்­காவை 20ஆம் நூற்­றாண்டில் வல்லரசாக இருப்­பதை போலவே 21ஆம் நூற்­றாண்­டிலும் வல்­ல­ரசு நாடாக இருப்­ப­தற்கு ஒரு திட்­டத்தை ஆரம்­பித்­தார்கள். அமெ­ரிக்­காவின் இரா­ணுவம், அறிவு, விஞ்­ஞானம், தொழில்­நுட்பம், பொரு­ளா­தாரம் போன்­ற­வற்றை பலப்­ப­டுத்­தினால் தான் அவர்­க­ளுக்­கு­ரிய பலத்தை, சக்­தியை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள என்ன செய்­வது என்று ஆலோ­சனை செய்­தார்கள்.

இக்­கால கட்­டத்தில் சோவியத் யூனியன் முற்­றாக சரிந்து பனிப்போர் முடி­வுற்­றி­ருந்த கால­மாகும். இந்த அடிப்­ப­டையில் அமெ­ரிக்­காவின் மொத்த பட்­ஜெட்டில் 40சத­வீ­தத்தை இரா­ணு­வத்­திற்­காக ஒதுக்க வேண்டும். உல­கத்­தி­லுள்ள 72வீத­மான எண்ணெய் வளம் 16 அரபு முஸ்லிம் நாடு­களில் தான் இருக்­கின்­றது. அந்த எண்ணெய் வளத்தை 1962ஆம் ஆண்­டி­லி­ருந்து குறைந்த விலைக்கு கொள்­ளை­ய­டித்­தி­ருந்த மேற்­கத்­திய நாடுகள் தொடர்ந்தும் அவ்­வாறு அந்த எண்ணெய் வளத்தை கொள்­ளை­ய­டிக்க வேண்­டு­மென்றால் மத்­திய கிழக்கு நாடு­களை கைய­கப்­ப­டுத்த வேண்டும். இதற்­கான சந்­தர்ப்­பத்தை எதிர்­பார்த்­தி­ருந்த வேளையில் குவைத் மீது சதாம் படை­யெ­டுத்­த­மை­யினால் தான் அமெ­ரிக்க இரா­ணுவம் மத்­திய கிழக்­கிற்குள் நுழைந்­தது. பின்னர் சதாமின் படைகள் பின்­வாங்­கின. அமெ­ரிக்க இரா­ணு­வமும் பெரு­ம­ளவு பின்­வாங்­கி­யது.

மீண்டும் அவர்கள் இந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு நிகழ்வை நடத்த முற்­பட்­டார்கள். அதுதான் நாக­ரி­கங்­க­ளுக்­கிடை­யி­லான மோதல் எனும் விட­யத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்கள். அது என்­ன­வென்றால், உல­கத்தில் நிறைய நாக­ரிகங்கள் இருக்­கின்­றன. இந்­நா­க­ரி­கங்­க­ளுக்குள் 21 ஆம் நூற்­றாண்டில் அமெ­ரிக்­கா­விற்கு சவா­லாக இருக்கப் போகின்ற நாக­ரி­க­மாக இஸ்­லா­மிய நாக­ரிகம் காணப்­பட்­டது. இதனை அவர்கள் வெற்­றி­கொள்ள வேண்டும். காரணம் என்­ன­வென்றால், சோவியத் யூனி­யனின் உடை­வோடு வர­லாறு முடிந்­து­விட்­டது என்று ஜப்­பா­னிய அர­சியல் சிந்­த­னை­யாளர் பிரான்ஸிஸ் பொக்­க­யாம் ஒரு கருத்தை நிறு­வினார்.

அதற்குப் பதி­லுரை எழு­திய அமெ­ரிக்­காவின் இன்­னொரு வெளி­நாட்டு கொள்கை வகுப்­பா­ள­ரான சாமுவேல் ஹன்டிங்டன் “வர­லாறு முடி­ய­வில்லை. சோவியத் யூனி­ய­னுக்குப் பதி­லாக ஒரு புதிய நாக­ரிகம் உல­கிற்குள் உரு­வா­கிக்­கொண்டு வரு­கின்­றது. அதுதான் இஸ்லாம். அதை நீங்கள் வெற்­றி­கொள்ள வேண்டும்.”

மீண்டும் அமெ­ரிக்­கா­வினால் மத்­திய கிழக்­கிற்குள் இருக்­கின்ற தடைகள் எல்லாம் தாண்டி சட்­டங்­களை பேணி நுழைய என்ன செய்­யலாம் என்று ஆழ­மாக திட்டம் தீட்­டி­யது. செப்­டெம்பர் 11ஆம் திகதி அமெ­ரிக்­காவில் நிகழ்த்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வ­மா­னது நவீன அர­சியல் களத்­திற்கு திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. இத்­தாக்­கு­தலை ஒசாமா பின்­லாடன் செய்தார் என்றும் அவர் ஆப்­கா­னிஸ்­தானின் டோரா போரா மலைக்குள் ஒளிந்­தி­ருக்­கின்றார் என்றும் கூறி மீண்டும் அமெ­ரிக்க இரா­ணுவம் நுழை­கின்­றது. தோரா போரா­வி­லி­ருந்து பக்­தா­துக்கு செல்ல அவர்கள் பாதையை அமைத்துக் கொண்­டார்கள். இத­னூ­டாக 10 வரு­டங்கள் அங்­கி­ருந்து எண்ணெய் வளத்தை சுரண்டி எடுத்­தார்கள்.

ஈராக்கை மூன்று நாடு­க­ளாகப் பிரித்து ஷியாக்­க­ளுக்கும், ஸுன்­னி­க­ளுக்கும், எண்ணெய் வளம் செறிந்­தி­ருக்கும் பகு­தியை குர்த்­திஸ்­க­ளுக்கும் வழங்க சிராஜ் பிராந்­தி­யத்தை உரு­வாக்­கி­விட்டு அமெ­ரிக்கா வெளி­யே­றி­விட்­டது. ஆனால் இந்த திட்­டத்தில் அமெ­ரிக்கா முழு­மை­யாக வெற்றி காண­வில்லை.
அமெ­ரிக்­காவின் சப்­பாத்து கால்கள் மிதி­ப­டாமல் எவ்­வாறு உல­கத்தை கட்­டுப்­ப­டுத்­தலாம் என்று அவர்கள் யோசித்­தார்கள். விசே­ட­மாக, இஸ்­லா­மிய உலகை எவ்­வாறு கட்­டுப்­ப­டுத்­தலாம் என்று யோசித்­தார்கள். ஏன் இஸ்­லா­மிய உலகம் அவர்­க­ளுக்கு முக்­கி­ய­மென்றால் 72 சத­வீ­த­மான எண்ணெய் வளம், 40சத­வீ­த­மான இயற்கை வாயு, முக்­கிய கடல் வழிப்­பா­தைகள், பெரிய துறை­மு­கங்கள் எல்லாம் அரபு நாடு­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்­கின்­றன. நைல் நதி, மெதேன் கோடு, யூப்­பி­ரட்டிஸ் மத்­திய கிழக்­கிற்குள் அமைந்­தி­ருக்­கின்­றது.
.முஸ்­லிம்­க­ளுக்குள் ஆயு­தங்­களை விநி­யோ­கித்து இரா­ணுவக் குழுக்­களை உரு­வாக்கி அவர்­க­ளுக்­குள்ளே அவர்­களை மோத விடு­கின்ற கலா­சா­ரத்தை தோற்­று­வித்­தார்கள். மேற்கு ஆபி­ரிக்­காவின் நைஜீ­ரியா நாட்டில் போக்கோ ஹராம் இரா­ணு­வத்தை உரு­வாக்­கி­னார்கள். 1990ஆம் ஆண்டில் பாகிஸ்­தானின் பெனாஸிர் பூட்­டோ­வுடன் சேர்ந்து தலி­பான்­களை உரு­வாக்­கி­னார்கள். 2016ஆம் ஆண்டில் இஸ்ரேல், ஐ.எஸ்.ஐ.எஸ். இனை சிரி­யாவில் உரு­வாக்­கி­னார்கள். அஸ்­ஸபாப் என்ற இயக்­கத்தை சோமா­லி­யாவில் உரு­வாக்­கி­னார்கள். ஒசாமா பின்­லா­டனின் தலை­மையில் அல் கை­தாவை உரு­வாக்­கி­னார்கள். யார் இவர்கள்? இஸ்­லா­மிய உல­கிற்குள் இஸ்­லாத்­திற்கு விரோ­த­மாக மேற்கு நாடு­களின் பினா­மி­யாக இயங்­கு­கின்ற இவ்­வ­மைப்­புக்­களின் நோக்கம் என்ன?

நான்­கா­வ­தாக உரு­வாக்­கப்­பட்ட விட­யம்தான் இஸ்­லாமோ போபியா. உலகில் 137 நாடு­களில் சிறு­பான்மை இன­மாக முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். அர­சியல், பொரு­ளா­தாரம், கல்வி எல்லா வகை­யிலும் அடக்கி ஒடுக்கி ஓர் அடி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­க­மாக வாழ வைக்க அமெ­ரிக்­கா­வினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விடயம் தான் இஸ்­லாமோ போபியா என்ற விடயம்.

முஸ்­லிம்கள் வன்­மு­றை­யா­ளர்கள், தீவி­ர­வா­திகள் என்று இந்த ஏகா­தி­பத்­திய நாடுகள், இஸ்லாம் வன்­மு­றையை போதிக்­கின்­றது, தூண்­டு­கின்­றது என்று திரும்பத் திரும்ப ஊட­கங்­க­ளுக்கு செய்­தி­களை முன்­வைக்­கின்­றன. இதனால் செப்­டெம்பர் தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ராக தொடர்ச்­சி­யாக 18 வரு­டங்­க­ளாக இவ்­வு­லகை 6 ஊடக நிறு­வ­னங்­களே கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. உல­கி­லுள்ள 193 நாடு­க­ளிலும் வாழ்­கின்ற 748கோடி மக்கள் காலையில் விடிந்­ததும் பார்க்­கின்ற தொலை­பேசி, பத்­தி­ரிகை ஸ்தாப­னங்கள், இணை­யத்­த­ளங்கள், தொலைக்­காட்சி அலை­வ­ரி­சைகள் யாவுமே அசோ­ஸி­யேடட் பிரஸ், பிரித்­தா­னிய ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பனம் (BBC), ரொயிட்டர், ஏ.எப்.பி., சி.என்.என், ஆகிய 6 ஊடக நிறு­வ­னங்­கள்தான் 96 வீத­மான வெளி­நாட்டு செய்­தி­களை தயா­ரித்து இதர நாடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­றார்கள். அமெ­ரிக்­காவை சார்ந்­த­தா­கவே இருக்­கின்­ற­மை­யினால் அவற்றில் காண்­பிக்­கப்­படும் செய்­திகள் முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள். பலஸ்­தீ­னி­யர்கள், பொஸ்­னி­யர்கள் பிரி­வி­னை­வா­திகள் என்று திரும்பத் திரும்ப செய்தி வடிவில் வழங்­கு­கின்­றார்கள்.

முஸ்­லிம்­க­ளிடம் சக்­தி­வாய்ந்த ஊட­க­மொன்று இல்லை. உலகில் இஸ்­லாத்தை பற்றி, முஸ்­லிம்­களை பற்றி போபி­யாவை உரு­வாக்­கி­விட்டால் வளம்­பொ­ருந்­திய மத்­தி­ய­கி­ழக்கு தொடர்ந்தும் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்கும். எண்­ணெயை கொள்­ளை­ய­டித்துக் கொண்டே இருக்­கலாம். அமெ­ரிக்­காவில் 74 குழுக்கள் இஸ்­லாமோ போபி­யாவை பரப்­பு­கின்­றன. இதற்­காக 500மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் அவர்கள் உல­கிற்கு அமெ­ரிக்­காவில் இருக்­கின்ற முஸ்­லிம்கள் யாவரும் பயங்­க­ர­வா­திகள் என்று பரப்­பு­கின்­றார்கள். இன்று மேற்கு நாடு­களில் ஏகப்­பட்ட வல­து­சா­ரி கட்­சிகள் தோன்றி முஸ்லிம் சிறு­பான்மை மக்கள் தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் என்ற மாயையை தோற்­று­விக்­கின்­றன.

சமீப காலத்தில் உலகில் நிகழ்த்­தப்­பட்ட குண்­டு­வெ­டிப்­பு­களும் இந்த மாயையின் பின்­ன­ணியில் நிகழ்த்­தப்­பட்­ட­வையே. இந்த மாயையை மக்­க­ளிடம் கொண்டு சேர்ப்­ப­தற்கு முத­லா­வ­தாக ஊட­கத்தை பல­மான ஆயு­த­மாக அமெ­ரிக்­கர்கள் கையாள்­கின்­றனர். இலங்­கை­யிலும் இந்­நி­லைமை காணப்­ப­டு­கின்­றது.கடந்த ஏப்ரல் குண்­டு­வெ­டிப்பின் பின்னர் இடம்­பெற்ற தேடுதல் நட­வ­டிக்­கை­களின் போது வாள்கள் பள்­ளி­யி­லி­ருந்து கைப்பற்றப்பட்டதாக செய்­திகள் பரப்­பப்­பட்­டன. வாளையும், பள்­ளி­யையும் அரு­க­ருகில் வைத்து காட்­டு­வார்கள்.

இரண்­டா­வ­தாக, முஸ்­லிம்­க­ளுக்குள் குழுக்­களை உரு­வாக்கி பல­மான ஆயு­தங்­களை கைய­ளித்­துள்­ளார்கள். இரா­ணு­வத்­திடம் இல்­லாத ஆயு­தங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இடம் எவ்­வாறு உள்­ளன. இந்­தி­யாவில் நரேந்­திர மோடி­யி­லி­ருந்து நியூயோர்க் ஆகிய நாடுகள் இணைந்து செயற்­ப­டு­கின்ற இஸ்­லா­மி­மோ போ­பியா வலை­ய­மைப்­பிற்கு தத்­த­மது நாடு­களில் முஸ்­லிம்­களை பற்­றிய பயத்தை ஏற்­ப­டுத்தி ஊதியம் பெறு­கின்­றார்கள்.

இலங்­கையில் 10வீத முஸ்­லிம்கள் 2600 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. இந்த சனத்­தொகை இவ்­வாறு அதி­க­ரித்துக் கொண்டே சென்றால் 2050இல் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யா­கி­வி­டு­வார்கள். இலங்கை முஸ்லிம் நாடாக மாறி­விடும் என்ற பரப்­பு­ரையை செய்­கி­றார்கள்.

இந்த நாட்டில் 1000 ஆண்­டு­க­ளுக்கு மேலாக பெரும்­பான்மை சமூ­கத்­தோடு நாங்கள் இணங்கி வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். அன்று பெர­ஹெ­ர­வுக்குப் பொறுப்­பாக இருந்­த­வர்கள் எமது முஸ்­லிம்கள். அரண்­ம­னையில் குளி­ய­லுக்குப் பொறுப்­பாக இருந்­தவர் முஸ்­லிம்கள். வைத்­தி­ய­ராக இருந்­தவர் அபூ­பக்கர் புள்ளே வெத­னா­ரகே. ஆகவே எல்லாம் நாங்­க­ளா­கத்தான் இருக்­கின்றோம். இடையில் என்ன நடந்­தது. இதுதான் இந்­நாட்டில் சிங்­கள, முஸ்லிம் சமூகம் சிந்­திக்க வேண்­டிய முக்­கிய விட­ய­மா­க­வுள்­ளது.

இங்கு எமது தலை­வரின் தூர­நோக்கைப் பார்த்தால் வன்­மு­றைக்கு வன்­முறை அல்ல தீர்வு. பயங்­க­ர­வா­தத்­திற்கு பயங்­க­ர­வாதம் அல்ல முடிவு என்று ஜன­நா­யக வழியில் வென்­றெ­டுக்க இளை­ஞர்­களை வழி­ந­டத்­தினார். இதற்­கா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் அன்று தலை­வ­ரினால் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

இந்த தரு­ணத்தில் முஸ்லிம் சமூகம் முத­லா­வ­தாக கவ­னத்திற் கொள்ள வேண்­டிய விட­யம்தான் முஸ்­லிம்கள் வெளிப்­படை தன்­மை­யுடன் செய­லாற்ற வேண்டும். மத்­ரஸா பள்­ளிக்­கூ­டங்கள் பயான்­களில் என்ன நடக்­கி­றது என்­பதை எல்­லோரும் வந்து பார்க்கும் வித­மாக செய்­யுங்கள். ஒளிவு மறை­வாக செய்ய வேண்­டிய விட­ய­மொன்று முஸ்லிம் சமூ­கத்தில் கிடை­யாது. சந்­தே­கங்­களை உரு­வாக்­கினால் அவை போபி­யாக்­களை உரு­வாக்கும். இன்று எமது நாடு இருக்­கின்ற நிலை­மையை பார்த்தால் சிறி­ய­தொரு விபத்­தைக்­கூட இனப் பிரச்­சி­னை­யா­கத்தான் பார்க்­கின்­றார்கள். ஆகவே கல்வி உட்­பட சகல விட­யத்­திலும் வெளிப்­படைத் தன்­மையை காட்டி செயற்­ப­டுங்கள்.

இரண்­டா­வது, நாம் ஒருபோதும் உணர்ச்சிபூர்வமாக செயற்படக் கூடாது. பக்குவமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் எம்மை சுற்றி நடக்கின்ற கசப்பான சம்பவங்களை நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.மூன்றாவதாக, நாம் பேண வேண்டியது எம்மோடு சேர்த்து இந்த நாட்டிற்காகவும் போராட வேண்டும். நாட்டை கட்டியெழுப்புதலில் நாம் பங்குகொள்ள வேண்டும். சமாந்தரமாக இதனை செய்ய வேண்டும்.

பெரும்பான்மை சமூகத்திற்குள் பரப்பப்பட்டுள்ள ஐயங்கள், சந்தேகங்கள் போன்றவற்றை நீக்குகின்ற பொறுப்பு எம் சமூகத்தை சார்ந்தது என்று அண்மையில் ஒரு சிங்கள நண்பரொருவர் ஒரு நிகழ்வில் சுட்டிக்காட்டினார்.
மேலும், எமது சமூகம் இந்த நாட்டின் சட்டதிட்டத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். அடிப்படை போக்கு வரத்து சட்டங்களைகூட எம்மவர்கள் சில இடங்களில் கடைப்பிடிக்கத் தவறுகின் றனர். இந்த நிலைமையை எம்முள் திருத்திக் கொள்ள வேண்டும்.

வன்முறை, போராட்டம், பயங்கரவாதம் என்பவற்றுக்கு இஸ்லாத்தில் எவ்வித இடமும் கொடுக்கப்படவில்லை. மர்ஹூம் அஷ்ரபின் மறைவை நினைவுபடுத்தும் இந்நாளில் அவரது தூரநோக்கு சிந்தனையிலிருந்து எடுக்க வேண்டிய முக்கிய விடயம்தான் எமது இளைஞர்கள் ஒருபோதும் வன்முறையை கையிலெடுக்க இடம்கொடுக்கலாகாது. ஜனநாயகத்தின் வழியில் நின்று எமது இலக்கை அடைந்துகொள்ள வேண்டும்.நாங்கள் செய்ய வேண்டிய போராட்டம் அறிவுப் போராட்டமாகவே அமைய வேண்டுமே தவிர ஆயுதப் போராட்டமாக மாறக்கூடாது. உலகிலுள்ள பெரும்பான்மை நாடுகளில் வாழ்கின்ற 100 கோடி முஸ்லிம்களுக்கு 56 முஸ்லிம் நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை வெறும் 650 ஆகும். இந்தியாவில் 1300மில்லியன் மக்களுக்காக 2500 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 30கோடி மக்கள் உள்ள அமெரிக்காவில் 5750 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆகவே எமது சமூகத்தில் அறிவுத் தேவையை விருத்தி செய்தல் அவசியமாகும்.

அமைச்சர், தலைவர் ஹக்கீமின் கூற்றுக்கிணங்க முஸ்லிம் சமூகம் தங்களை தாங்களே சுயபரிசீலனை செய்து கொள்ளவேண்டிய காலத்தில் இருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்திற்கு வெளியிலிருந்து வரக்கூடிய சவால்களை சரியாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் உள்ளக ரீதியாக தங்களை தாங்களே பரீசிலினை செய்ய வேண்டும். இதன் மூலமே வளமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனக் கூறி விடைபெறுகின்றேன்.

Vidivelli

Leave A Reply

Your email address will not be published.