சபா­நா­யகர் சிறைக்கு செல்லத் தயா­ரா­கட்டும்

அர­சாங்க தரப்பு எம்.பி.க்கள் சூளுரை

0 627

இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாரா­ளு­மன்­றத்தை கூட்டும் சபா­நா­யகர் சபையை தவ­றாக வழி­ந­டத்­து­வது சிறை­வாசம் அனு­ப­விக்கும் குற்­ற­மாகும். ஆகவே சபா­நா­யகர் சிறைக்கு செல்லத் தயா­ராக வேண்­டு­மென ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். தனது சுய­புத்­தி­யு­டனா சபா­நா­யகர் செயற்­ப­டு­கின்றார் என்ற கேள்வி எழும்­பு­கின்­றது. ஆகவே அவரை மருத்­துவ பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறு­கின்­றனர்.

பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நேற்று ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர்கள் இதனைக் குறிப்­பிட்டனர். இது குறித்து அமைச்சர் தினேஷ் குண­வர்­தன கூறு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வது தொடர்­பாக சபா­நா­யகர் பின்­பற்­றி­யுள்ள நட­வ­டிக்­கைகள் அர­சி­ய­ல­மைப்­புக்கும், பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளைக்கும் முர­ணா­னது என நாங்கள் தொடர்ச்­சி­யாகக் கூறி வரு­கின்றோம். சபா­நா­யகர் தொடர்ந்தும் பக்­க­சார்­பாக செயற்­பட்டு வரு­கின்றார். சபா­நா­யகர் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நிலை­யியல் கட்­ட­ளைக்­க­மை­வாக செயற்­படும் வரை ஆளும் கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் அவர் எடுக்கும் தீர்­மா­னங்­களை நிரா­க­ரித்து சரி­யான தீர்­மா­னத்­திற்கு வரு­மாறு அவ­ரை வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இன்­றைய தினத்­திற்­கு­ரிய நிகழ்ச்சி நிரலை பார்த்தால் பத்­திரம் வெற்றுப் பத்­தி­ர­மா­கவே இருக்­கின்­றது. இதன்­படி சபா­நா­யகர் நினைத்­த­வாறு நட­வ­டிக்­கை­யெ­டுப்­பதால் எங்­க­ளுக்கு மக்கள் பிர­தி­நி­திகள் என்ற வகையில் இந்த நட­வ­டிக்­கை­களை ஆத­ரிக்க முடி­யாது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­துள்­ள­துடன் அமைச்­ச­ர­வை­யொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தில் முறை­யற்ற வகையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணைகள் தொடர்­பாக ஜனா­தி­பதி சபா­நா­ய­ருக்கு அறி­வித்­துள்ளார். இதன்­படி முறை­யற்ற வகையில் நிறை­வேற்­றப்­பட்ட அனைத்து தீர்­மா­னங்­களும் நீக்­கப்­பட்டு  முறை­யாக பாரா­ளு­மன்­றத்தை நிலை­யியல் கட்­ட­ளைக்­க­மைய நடத்திச் செல்­லு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­நி­லையில் தொடர்ந்தும் சபா­நா­யகர் தவ­றான முறை­மை­யையே பின்­பற்­று­கின்றார். இன்று பாரா­ளு­மன்றம் கூடு­வ­தற்கு முன்னர் கட்சித் தலை­வர்கள் கூட்­டமும் நடை­பெ­ற­வில்லை. அத்­துடன் அவரால் நிய­மிக்­கப்­பட்ட தெரிவுக் குழுவும் கூட­வில்லை. இதன்­படி இன்­றைய தினமும் பாரா­ளு­மன்றம் நிலை­யியல் கட்­ட­ளையை பின்­பற்றி கூட­வில்லை. இதனால் இன்­றைய கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தில்­லை­யென நாங்கள் தீர்­மா­னித்­துள்ளோம். சபா­நா­யகர் சரி­யான முறையில் பாரா­ளு­மன்­றத்தை நடத்திச் செல்லும் வரை மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் தொடர்ந்தும் செயற்­ப­டுவோம் எனக் குறிப்­பிட்டார்.

செய்­தியாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா,

பாரா­ளு­மன்றம் என்­பது கேலிக் கூத்­துக்­கான இட­மில்லை. பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியும் எதிர்க்­கட்­சியும் இருக்க வேண்டும். இதுவே உலக நாடு­க­ளி­லுள்ள பாரா­ளு­மன்­றத்தின் சம்­பி­ர­தா­ய­மாக இருக்­கின்­றது. இந்­நி­லையில் சபா­நா­யகர் செயற்­படும் முறை­மையை பார்த்தால் ஆளும் கட்­சியோ, பிர­த­மரோ, அமைச்­சர்­களே இல்­லை­யென்­பது போன்றே இருக்­கின்­றது. அப்­ப­டி­யென்றால் எவ்­வாறு பாரா­ளு­மன்றம் செயற்­பட முடியும். சபா­நா­ய­கரின் தான் தோன்­றித்­த­ன­மான செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவர் தனது சுய புத்­தி­யு­டனா செயற்­ப­டு­கின்றார் என்ற கேள்வி எழும்­பு­கின்­றது. ஆகவே அவரை மருத்­துவ பரி­சோ­த­னைக்கும் உட்­ப­டுத்த வேண்டும் போலி­ருக்­கின்­றது. இன்­றைய பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலை பார்த்தால் நிலை­யியல் கட்­ட­ளைக்­க­மைய பாரா­ளு­மன்றம் நடக்கும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனை எங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிகழ்ச்சி நிர­லுக்­க­மைய எங்­களால் செயற்­பட முடி­யாது என்­ப­த­னா­லேயே நாங்கள் கூட்­டத்தை பகிஷ்­க­ரித்­துள்ளோம். அவர் மத்­தி­யஸ்­த­மாக நடந்­து ­கொண்டு ஆளும் கட்­சியை ஏற்­றுக்­கொண்டு செயற்­ப­டு­மாறு அவரை கோரு­கின்றோம் எனக் குறிப்­பிட்டார்.

செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த அமைச்சர் விமல் வீர­வன்ச,

சபா­நா­ய­கரின் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருக்கும் கரு ஜயசூரிய மக்கள் பணத்தை பயன்­ப­டுத்தி இன்று ரணில், அனுர, சுமந்­திரன் குழுவின் அர­சியல் பிர­சார செயற்­பா­டு­க­ளுக்­காக பாரா­ளு­மன்ற சபா பீடத்தை பயன்­ப­டுத்தி வரு­கின்றார். முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் கணவன் அரச வங்­கி­யொன்றில் தலை­வ­ராக இருந்த போது மேற்­கொண்ட செயற்­பாட்டை அடிப்­ப­டை­யாக கொண்டு 5 வருட சிறைத்­தண்­ட­னைக்கு இலக்­கா­கி­யுள்ளார். இதே­போன்று தனக்கு சம்­பந்­த­மில்­லாத அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி மக்கள் பணம் மற்றும் வரிப் பணத்தை அரச நிறு­வ­னத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்ட விரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சபாநாயகர் ஆசனத்தில் இருக்கும் கரு ஜயசூரியவும் மிக விரைவில் அதேபோன்ற வழக்குகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் ரணில், அனுர, சுமந்திரன் உள்ளிட்ட குழுவின் அரசியல் செயற்பாட்டு பிரசாரத்தை முன்னெடுத்தமைக்கான பொறுப்பை அவர் ஏற்க நேரிடும். ஆகவே விரைவில் தண்டனைக்குத் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.