காத்தான்குடியில் ஷுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு கத்முல் குர்ஆன், பேரணி மற்றும் பிரகடனம் வெளியீடு

0 201

காத்­தான்­குடி மீரா பெரிய ஜும்ஆப் பள்­ளி­வாசல், மஸ்­ஜிதுல் ஹுசை­னியா ஆகி­ய­வற்றில் 03.08.1990 அன்று இரவு நேரத் தொழு­கையை நிறை­வேற்­றிக்­கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் புலி­களால் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்­தி­னை­யொட்டி சனிக்­கி­ழமை காத்­தான்­கு­டியில் தேசிய சுஹ­தாக்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது

இத­னை­யொட்டி படு­கொலை இடம் பெற்ற காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் குர்ஆன் ஓதுதல் மற்றும் பிராத்­தனை என்­பன இடம் பெற்­ற­துடன் அப்­ப­கு­தியில் பல் வேறு பரீட்­சை­களில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­களும் இதன் போது கௌர­விக்­கப்­பட்­டனர்.

பள்­ளி­வா­சலின் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்­லெவ்வை தலை­மையில் நடை­பெற்ற இந்த வைப­வத்தில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் உட்­பட காத்­தான்­குடி நகர சபை உறுப்­பி­னர்கள், உல­மாக்கள், பிர­மு­கர்கள், முக்­கி­யஸ்­தர்கள், பள்­ளி­வா­சலின் நிரு­வா­கிகள் என பலரும் கலந்து கொண்­டனர்.

இதன் போது காத்­தான்­குடி ஜாமி­யத்துல் பலாஹ் அற­புக்­கல்­லூ­ரியின் விரி­வு­ரை­யாளர் மௌலவி எம்.பி.எம்.பாஹிம் (பலாஹி) மற்றும் காத்­தான்­குடி அல்­மனார் அறி­வியற் கல்­லூ­ரியின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.அக்ரம் (நளீமி) ஆகியோர் சிறப்­பு­ரை­­யாற்­றினர்.

இதே­வேளை வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட மற்றும் படு­கொலை செய்­யப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கான விசா­ர­ணையை கோரி பேரணி ஒன்றும் இடம்­பெற்­றது.
காத்­தான்­குடி ஹிஸ்­புல்லாஹ் மண்­டப முன்­றலில் இருந்து ஆரம்­ப­மான இப்­பே­ர­ணியில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­ச­ினைகள் மற்றும் முஸ்­லிம்­களின் தியா­கங்கள் போன்­ற­வற்றை எடுத்­துக்­காட்டும் வகை­யி­லான பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு சென்ற மக்கள் பேரணி காத்­தான்­குடி முதலாம் குறிச்சி அந்­நாசர் பாட­சாலை சந்­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சுஹ­தாக்கள் நினைவு பந்­தலை வந்­த­டைந்­தது. சுஹ­தாக்கள் தின பிர­க­ட­னமும் இங்கு வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. அப்­பி­ர­க­ட­னத்தில்,

01. யுத்த காலங்­களில் பறிக்­கப்­பட்ட மற்றும் இழக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் வயல் நிலங்கள் மற்றும் குடி­யி­ருப்பு காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­கான முஸ்­தீ­பு­களை உட­ன­டி­யாக ஆரம்­பித்தல்.

02. யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மற்றும் இலங்­கையில் ஏனைய இடங்­க­ளி­லி­ருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை குடி­ய­மர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல்.

03. 30 வருட சிவில் யுத்­தத்தில் மிகவும் கொடூ­ர­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் சமூ­கத்­திற்கு சர்­வ­தேச தரா­த­ரங்­க­ளுடன் தீர்வு வழங்­கப்­பட வேண்டும்.

04. முஸ்லிம் வெறுப்புப் பிரச்­சா­ரத்­திற்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்தல்

05. புதிய அர­சியல் யாப்பு ஒன்று வரு­மாக இருந்தால் அது முஸ்­லி­ம்க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் உள்­ள­டக்கி இருப்­ப­தனை உறுதி செய்தல்

06. யுத்த காலத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தீவி­ர­வாத எதிர்ப்­புச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழித்து சர்­வ­தேச மனித உரி­மை­க­ளுக்கு உட்­பட்ட பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­ட­மொன்றை உரு­வாக்­குதல்

07. அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் கைதான அப்­பாவி பொது­மக்­களின் விடு­த­லையை உட­ன­டி­யாக உறுதி செய்தல்.

08. யுத்த காலத்தில் கொல்­லப்­பட்ட முஸ்லிம் சிவி­லி­யன்­க­ளுக்கு, கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட மற்றும் அங்­க­வீ­ன­மாக்­கப்­பட்டு வாழ்வில் இன்­னல்­களை அனு­ப­வித்து வரும் முஸ்­லிம்­க­ளுக்கு உரிய பொறுப்புக் கூறல்கள் வழங்­கப்­பட வேண்டும்.

09. கிழக்கு மாகா­ணத்தில் யுத்த காலத்தின் போது தமிழ் ஆயு­த­தா­ரி­களின் கொடூ­ரங்கள் கார­ண­மா­கவும் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் கார­ண­மா­கவும் தங்­க­ளது பூர்­வீகக் காணி­களை இழந்த முஸ்­லிம்­க­ளுக்கு அக்­கா­ணிகள் மீண்டும் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும்.

10. பல பக்க பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாகி மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் வாழ்ந்­து­வரும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு சனத்­தொகைக் கேற்ப காணிப் பங்­கீடு வழங்­கப்­பட வேண்டும்.

11. யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட, காணா­ம­லாக்­கப்­பட்ட முஸ்லிம் சிவி­லி­யன்கள் தொடர்­பான தக­வல்கள் மற்றும் தர­வுகள் பூர­ண­மாக சேக­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு, அல்­லது சேக­ரிக்­கப்­பட்ட தக­வல்­களை ஆவண வடிவில் கொண்டு வரு­வ­தற்கு அவற்றை தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் இயங்­கு­கின்ற மனித உரி­மைகள் அமைப்­புக்­க­ளிடம் அல்­லது அவை சார்ந்த நிறு­வ­னங்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்­கான திட்­டத்தை முஸ்லிம் சமூகம் ஆரம்­பிக்க வேண்டும். அல்­லது அதற்­காக உற்­சாகப் படுத்த வேண்டும். அத்­தோடு இது தொடர்பில் கல்­வி­யா­ளர்கள் அர­சியல் பிர­தி­நி­தி­களும் தமது ஆத­ர­வினை வழங்க வேண்டும்.

12. ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ரான இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேறும் அடிப்­படை உரிமை மீறல்­களை துரி­த­மாக விசா­ரித்தல்.

13. ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிப்பதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்றும் உறுதி வழங்குகின்றோம் எனவும் அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பேரணியில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், ஜம் இய்யதுல் உலமா சபை, நகர சபை, தேசிய சுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.நூர்தீன் , எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.