நற்பெயருக்கு களங்கம் விளைவித்த பலருக்கு எதிராக முறையிடுகிறார் டாக்டர் ஷாபி

0 2,425

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்றுப் பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சிஹாப்தின் மொஹமட் ஷாபியும் அவ­ரது சட்ட குழு­வி­னரும் பல­ருக்கு எதி­ராக டாக்டர் சாபியின் நற்­பெ­ய­ருக்குக் களங்கம் ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் உரி­மை­யியல் பாதிப்­புகள் தொடர்பில் வழக்­குகள் பதிவு செய்­ய­வுள்­ளார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர், பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, பிரதி பொலிஸ்மா அதிபர் கித்­சிறி ஜயலத், டாக்டர் ஷாபிக்கு எதி­ராக பொய் பிர­சா­ரங்­களைப் பரப்­பிய சிங்­கள பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் மற்றும் இரு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கவே வழக்­குகள் பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ளன.

டாக்டர் மொஹமட் ஷாபி இந்த வழக்­கு­களை குரு­நாகல் மற்றும் கொழும்பு மாவட்ட நீதி­மன்­றங்­களில் தாக்கல் செய்­ய­வுள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் தன்னை, பலரைக் கொன்ற கொலை­யாளி என எனக்­கெ­தி­ராக மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டங்­களின் போது தெரி­வித்­தி­ருக்­கிறார் என டாக்டர் மொஹமட் ஷாபி கடந்த திங்­கட்­கி­ழமை பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்­கி­ர­ம­ரத்­ன­விடம் புகார் செய்­துள்ளார். மேலும் ஒரு புகார் குரு­நாகல் மேயர் துஷார விதா­ர­ன­வுக்­கெ­தி­ராக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அந்தப் புகாரில் குரு­நாகல் மேயர் தான் பெண்­க­ளுக்கு கருத்­தடை செய்­துள்­ள­தாக சிங்­கள பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு தெரி­வித்­துள்­ள­தா­கவும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­பீட பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன தனது முக­நூலில் பதி­வேற்­றி­யி­ருந்த மாறு­பா­டான தவ­றான கருத்­து­களால் முகநூல் பாவ­னை­யாளர் களால் டாக்டர் மொஹமட் ஷாபியின் குடும்­பத்­துக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்கப் பட்­ட­தாக பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­ம­ன­வுக்கு எதி­ராக புகார் செய்­யப்­பட்­டுள்­ளது.
மேலும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் மற்றும் இரு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக தனி­யான முறைப்­பா­டுகள் பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் வழங்­கப்­பட்­டுள்­ளன. பத்­தி­ரி­கையில் பிர­சு­ர­மான கட்­டு­ரையில் டாக்டர் ஷாபி தனது வகுப்புத் தோழி­க­ளுக்கு விஷம் கலந்து மாத­விடாய் காலத்தில் அணியும் நெப்­கின்கள் வழங்­கி­ய­தாக தெரி­வித்­துள்ளார். இதற்கு எதி­ராக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

பதில் பொலிஸ்மா அதிபர், பிர­தம நீதி­ய­ரசர் ஆகியோரிடமும் சட்­டத்­த­ரணி இந்­தி­ர­சிரி சேன­ரத்­ன­வுக்கு எதி­ராக சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் என்­ப­வற்­றிலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சட்­டத்­த­ரணி சட்ட விதி­களை மீறி­யுள்­ள­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­டத்­த­ரணி சானக அபே­விக்­ர­ம­வுக்கு எதி­ரா­கவும் தனி­யான முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது. சட்­டத்­த­ர­ணியின் சமூக வலைத்­த­ளத்தில் ஷாபிக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான சாட்­சி­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி குற்­றங்­களை நிரூ­பிக்க குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் தவ­றி­யுள்­ளது என பதி­வேற்­றி­யி­ருந்தார்.

டாக்டர் ஷாபியின் வழக்கை நீதி­யா­கவும், நியா­ய­மா­கவும் நடாத்­து­வ­தற்கு இவர்கள் பல்­வேறு தடை­களை விதித்­துள்­ளார்கள். இவர்­க­ளுக்கு எதி­ராக டாக்டர் ஷாபியின் மனைவி டாக்டர் இமாரா ஷாபி கடந்த ஜூன் 25 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வினைத் தாக்கல் செய்­துள்ளார். டாக்டர் ஷாபியும் இவ்­வாரம் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இவர்­க­ளுக்கு எதி­ராக மனு­வொன்­றினைக் கைய­ளிக்­க­வுள்ளார்.

பொய்­யான சாட்­சி­யங்­களைச் சோடித்து டாக்டர் ஷாபியைக் கைது செய்த குரு­நாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்­சிறி ஜய­லத்தை இட­மாற்றம் செய்­வ­தற்கு தேசிய பொலிஸ் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அதன் செய­லாளர் நிசாந்த வீர­சிங்க தெரி­வித்­தி­ருந்தார்.

பதில் பொலிஸ்மா அதிபர் விக்­கி­ர­ம­ரத்­னவின் உத்­த­ர­வுக்­க­மைய தேசிய பொலிஸ் ஆணைக்­குழு குரு­நாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்­சிறி ஜய­லத்தை திரு­கோ­ண­ம­லைக்கு இட­மாற்­று­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு அமை­யவே பதில் பொலிஸ்மா அதிபர் இந்த உத்­த­ர­வினை வழங்­கி­யி­ருந்தார். என்­றாலும் அவ­ரது இட­மாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வினால் தற்­கா­லி­க­மாக இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பதில் பொலிஸ்மா அதி­பரின் விசா­ர­ணைகள் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

டாக்டர் ஷாபிக்கு எதி­ரான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜய­லத்தின் குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் விசா­ர­ணையில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பிரதி பொலிஸ்மா அதி­பரின் இட­மாற்றம் நியா­ய­மா­னதா என்று நாம் ஆராய வேண்­டி­யுள்­ளது. பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்­குழு ஆராயும் என அக்­கு­ழுவின் செய­லாளர் வீர­சிங்க தெரி­வித்தார். குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்றுப் பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் மொஹமட் ஷாபி வரு­மா­னத்தை மீறி பாரி­ய­ளவில் சொத்து சேர்த்­துள்­ள­தாக பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டார். பின்பு குரு­நாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயலத், பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசா­நா­யக்க ஆகியோர் டாக்டர் ஷாபி சட்­ட­வி­ரோத கருத்­தடை செய்­தி­ருந்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

சிங்கள பத்திரிகையொன்று குருநாகலைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் சிங்கள தாய்மாருக்கு சட்ட விரோதமாகக் கருத்தடை செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை யடுத்தே இவ்விவகாரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் செய்தி வெளியிடப்பட்டதை யடுத்து உடனே ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் சன்ன ஜயசுமன தனது முகநூல் பதிவில் குறிப்பிட்ட டாக்டரின் பெயர் ஷாபி என்று பதிவேற்றியதுடன் அவரது புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.