மைத்திரியின் இரகசிய நகர்வு

0 805

2018 ஒக்­டோபர் 26 வெள்­ளிக்­கி­ழமை மாலை, இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எதிர்­பா­ராத பல சம்­ப­வங்கள் அரங்­கே­றின. கிட்­டத்­தட்ட அவை ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தா­க­வி­ருந்­தன. இந்த திட்­டங்கள் அனைத்­தையும் நிறை­வேற்­றி­யது வேறு யாரு­மல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே.

கடந்த ஒரு வார கால­மாக மிகவும் இர­க­சி­ய­மான முறையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ச­வுடன் தான் நடாத்தி வந்த பேச்­சு­வார்த்­தை­க­ளி­ன­டி­யாக எட்­டப்­பட்ட உடன்­பா­டு­க­ளுக்­க­மை­யவே கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அதி­ர­டி­யான நகர்­வு­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுத்தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை ஜனா­தி­பதி, தனது சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய எம்.பி.க்கள் சிலரை தனது வாசஸ்­த­லத்தில் சந்­தித்தார். இதன்­போது ”நான் புதிய அர­சாங்கம் ஒன்றை அமைக்கப் போகிறேன். அதன் பிறகு உங்கள் அனை­வ­ருக்கும் தேவை­யா­னதை செய்து தருவேன். புதிய அமைச்­ச­ர­வை­யிலும் நீங்கள் இப்­போது வகிக்கும் பத­வி­களைத் தொட­ரலாம். சில­ருக்கு அதை­விட மேல­திக பொறுப்­பு­களும் தரப்­படும்” என ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். இதற்கு அங்­கி­ருந்த சுமார் 24 எம்.பி.க்களும் தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தினர்.

எனினும் புதிய அர­சாங்கம் எவ்­வாறு அமையும்? அதன் பிர­தமர் யார்? என்­பது பற்றி எந்­த­வித தக­வல்­க­ளையும் ஜனா­தி­பதி அச்­ச­மயம் வெளி­யி­ட­வில்லை. மாலை  5 மணிக்கு தொடங்­கிய அக் கூட்டம் இரவு 7.30 மணி வரை நீடித்­தது.

இக் கூட்டம் முடிந்த மறு­க­ணமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத­வி­யா­ளர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மாளி­கைக்கு வரு­மாறு அழைப்­பு­வி­டுத்­தனர்.  அச் சமயம் மஹிந்த, ஜனா­தி­பதி மாளி­கைக்கு அரு­கி­லுள்ள ‘ஷங்­கிரி லா’ ஹோட்­டலில் திரு­மண நிகழ்­வொன்றில் பங்­கேற்­றி­ருந்தார். அங்­கி­ருந்து அவர் ஜனா­தி­பதி மாளி­கையை வந்­த­டைந்­த­வு­ட­னேயே அவர் இலங்­கையின் பிர­த­ம­ராக ஜனா­தி­பதி முன்­னி­லையில் பத­வி­யேற்றார். அத் தருணம் வரை சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.க்கள் பல­ருக்கு பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­க­வி­ருப்­பவர் யார் என்­பது தெரிந்­தி­ருக்­க­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் பார்­வையில் மிகுந்த சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக கரு­த

Leave A Reply

Your email address will not be published.