அடிப்படைவாதத்தை தடுக்க விசேட இராணுவப்பிரிவு

மத அமைப்புக்களை கண்காணிக்கவும் திட்டம்

0 796

சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் அச்­சு­றுத்­தல்கள் மற்றும் உள்நாட்டு வெளி­நாட்டு இன, மத­வாத அடிப்­படை அமைப்­புக்­களைக் கண்­கா­ணிக்­கவும், அது தொடர்பில் செயற்­ப­டவும் இரா­ணு­வத்தில் விசேட பிரி­வொன்றை அமைத்து செயற்­பட விசேட திட்­ட­மொன்று வகுக்­கப்­பட்­டுள்­ளது.
யாழ். கட்­டளைத் தள­ப­தி­யாக செயற்­பட்ட மேஜர் ஜெனரல் தர்­ஷண ஹெட்­டி­யா­ராச்­சியின் கீழ் இந்த சிறப்புப் பிரிவை நிறுவத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு உயர் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆலோ­ச­னைக்­க­மைய இந்தப் புதிய திட்டம் நடை முறைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும், மேஜர் ஜெனரல் தர்­ஷண ஹெட்­டி­யா­ராச்­சியின் கீழ், இரா­ணுவம், கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டையை சேர்ந்த சுமார் 250 பேர் வரை இந்தப் பிரிவில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

இது­தொ­டர்பில், குறித்த பிரி­வுக்கு, அதன் கட்­டளைத் தள­ப­திக்­குள்ள அதி­கா­ரங்கள், பொறுப்­புக்கள் தொடர்பில் மிக விரைவில் ஜனா­தி­பதி, பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

கடந்த 4/21 உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, இவ்­வா­றான ஒரு சிறப்பு கண்­கா­ணிப்பு, நட­வ­டிக்கை பிரி­வொன்றின் அவ­சி­ய­மேற்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அதனை நிறு­வு­வ­தற்­கான அனைத்துப் பணி­களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெட்டி யாராச்சி கொழும்புக்கு அழைக்கப்பட்டு அது சார்ந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.