மத தலைவர்களுக்கு அப்பாலான சிவில் சமூக பங்களிப்பே தேவை

உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர்

0 880

Qஆய்வு நிறு­வ­ன­மான உங்கள் அமைப்பு எதற்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது ?

முஸ்லிம் சமூ­கத்தைப் பல­மா­ன­தொரு முஸ்லிம் சிவில் சமூ­க­மாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவே நாம் இதைத் தொடங்­கினோம்.

புனித திருக்­குர்­ஆனின் உண்­மை­யான நிலை­மை­களை காலத்­துக்­கேற்ற நவீன முறை­க­ளி­னூ­டாக முஸ்­லிம்­க­ளுக்கு விளங்­க­வைப்­பதே எமது நோக்­க­மாகும். மத்­ர­ஸாக்­களைப் பற்றி உங்­க­ளுக்கும் தெரிந்­தி­ருக்கும். இப்­போது மத்­ர­ஸாக்கள் பற்­றிய அச்­சங்கள் எழுந்­துள்­ளன. ஆனால் உண்­மை­யான நிலைமை அது­வல்ல.

இஸ்­லா­மிய மார்க்­கதைக் கற்­பிக்கும் மத்­ர­ஸாக்கள் இரு வகை­யாகும். ஒன்று எங்கள் குர்­ஆனை ஓதக் கற்­பிக்கும் இடம். உதா­ர­ண­மாக பெளத்­தர்கள் பாளி மொழி­யி­லான சுலோ­கங்­களைக் கற்றுக் கொள்­வ­தற்கு உள்ள இடத்தைப் போன்­ற­தாகும். குர்­ஆனை ஆய்­வு­ரீ­தி­யாக, விப­ர­மாகக் கற்­பிக்கும் பாட­சா­லைகள் இரண்­டா­வது வகை­யாகும். தடை­செய்­யப்­பட வேண்­டிய அள­வுக்கு எது­வுமே மத்­ர­ஸாக்­களில் இல்லை என்­பதே உண்மை. இது வேறாக, விரி­வாகப் பேசப்­பட வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும்.

எப்­ப­டியோ, இவ்­விரு முறை­க­ளுக்கும் புறம்­பான முற்­றிலும் நவீன, முற்­போக்­கான முறை­மையில் இன்­றைய நவீன சமூ­கத்­திற்குக் குர்­ஆனைக் கற்­பிக்கும் முயற்­சியில் நீண்ட கால­மாக நான் ஈடு­பட்டு வரு­கிறேன். அதன் தொட­ரா­கத்தான் இவ் ஆய்வு நிறு­வ­னமும் தொடங்­கப்­பட்­டது.

Qபொது­வா­கவே, அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூ­க­மா­னது படிப்­ப­டி­யாகப் பொதுப் பெரும் சமூ­கத்­தி­லி­ருந்து அந்­நி­யப்­பட்டுச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது, இந்த அழி­வு­க­ளுக்­கெல்லாம் அதுவும் ஒரு கார­ண­மென்ற குற்­றச்­சாட்டு முஸ்­லிம்கள் மீது தொடுக்­கப்­ப­டு­கி­றதே..?

நீங்கள் சொன்­னது போல, பொதுச் சமூக வெளியில் இயல்­பாக – சுமு­க­மாக வாழ்­வது எப்­படி என்­பது மத்­ர­ஸாக்­களில் கற்­பிக்­கப்­ப­டு­வது போதாது என்­பதும் ஒரு பிரச்­சி­னையே. அத்­துடன் மத்­ர­ஸாக்­களில் கற்போர் அதி­க­மாக அரபு நாடு­க­ளுடன் ஏற்­படும் தொடர்­புகள் கார­ண­மாக அவர்கள் தம்மை முற்­றிலும் வேறா­ன­வர்­க­ளாகத் தமது உடை, நடை, பாவ­னை­களில் வெளிப்­புற மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தித் தம்­மையும் அர­பி­க­ளா­கவே காட்டிக் கொள்ளத் தொடங்­கினர். அத­னா­லேயே இத்­த­கையோர் கடும்­போக்­கு­வா­தி­க­ளாகப் பிற­ருக்குத் தோன்­றினர். இத­னா­லேயே இலங்­கையின் பொதுப்­பெரும் சமூ­கத்­தி­லி­ருந்து தூரப்­படத் தொடங்­கினர். இதன் கார­ண­மாக அவர்­க­ளது வாழ்­வொ­ழுங்கு உள்­ள­ப­டி­யா­கவே பாகிஸ்­தா­னியர், இந்­தியர், அரே­பியர் போன்று மாறத்­தொ­டங்­கிற்று.

இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­களில் 2% ஆனவர்­க­ளுக்­குக்­கூட அரபு மொழி தெரி­யாது என்­பதை நீங்கள் நம்­பு­கி­றீர்­களா ? அவர்­க­ளுக்­கும்­கூட மிகச்­சி­றந்த அரபு மொழிப் பரிச்­சயம் கிடை­யாது. அரபு மொழியில் வெளி­யாகும் ஒரு சஞ்­சி­கை­யேனும் இலங்­கையில் இல்லை என்­பது உங்­க­ளுக்குத் தெரி­யுமா ? உண்­மை­யி­லேயே பெளத்­தர்­க­ளுக்குப் பாளி மொழி எப்­ப­டியோ அப்­ப­டித்தான் இந்­நாட்டில் அரபு மொழி முஸ்­லிம்­க­ளுக்கும் உள்­ளது. வணக்க வழி­பா­டு­க­ளுக்­கான மொழி­யாக மட்­டுமே அரபு உள்­ளது.

Qநீங்கள் என்­னதான் சொன்­னாலும் ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் ஏதோ ஓர­ள­வுக்குத் தெரிந்­தி­ருந்­தார்கள் என்றே முஸ்­லிம்கள் தவிர்ந்த ஏனைய சமூ­கங்கள் கரு­து­கின்­றன..?

நாம் என்­னதான் சொன்ன போதிலும் விளக்கம் கொடுத்த போதிலும் இன்னும் உங்­க­ளுக்கு எங்கள் மீதான சந்­தே­கங்கள் உள்­ளன என்று எங்­க­ளுக்கும் தெரியும். அவ்­வாறு நீங்கள் ஐயம்­கொள்­வ­தற்கு உங்­க­ளுக்கு உள்ள உரி­மையை நாம் ஏற்றுக் கொள்­கிறோம்.

இலங்கை முஸ்லிம் சமூகம் அடிப்­ப­டையில் மூன்று பகு­தி­க­ளாக உள்­ளன. 1. மத்­ர­ஸாக்­களில் கல்வி கற்ற மெள­ல­வி­களின் சமூகம். 2. சாதா­ரண பொது­மக்கள். அவர்கள் மெள­ல­விகள் அள­வுக்கு இஸ்­லா­மிய அறிவு கொண்­ட­வர்கள் அல்லர்.

3. தொழில்­வாண்­மை­யா­ளர்கள் (Professionals) இத்­த­கை­ய­வர்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் இடை­யி­லான தொடர்­புகள் மிகவும் குறைந்­தவை.

இம்­மூன்று பிரி­வு­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்டுத் தனி­யாக வாழ்ந்த சொற்­ப­மான குழு­வி­னரே ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள். அவர்­களைப் பற்றி முஸ்­லிம்கள் சமூ­கத்தில் பெரும்­பான்­மை­யி­ன­ருக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை. ஒரு­சிலர் இக்­கு­ழுவைப் பற்றி ஓர­ளவு தெரிந்­தி­ருந்த போதிலும் இவ்­வ­ளவு பாரிய தாக்­கு­தல்­களை நடத்­தக்­கூ­டி­ய­தாக இக்­கு­ழு­வி­னரை அவர்­களும் மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை. அதே­வேளை, இக்­குழு குறித்து ஓர­ளவு நன்­றாகத் தெரிந்­தி­ருந்தோர் இவர்­களைப் பற்றி பொலி­ஸுக்கும் இராணு­வத்­தி­ன­ருக்கும் தெரி­யப்­ப­டுத்தி இருக்­கி­றார்கள் என்று இப்­போது நாமும் தெரிந்து கொள்­கிறோம்.

Qநீங்கள் இப்­படிச் சொன்­னாலும், யார், எப்­படி இதை நம்ப முடியும்? முஸ்­லிம்கள் மத்­தி­யி­லேயே அவர்கள் பிர­சா­ரங்கள் செய்­தனர். பயிற்சிப் பட்­ட­றைகள் செய்­துள்­ளார்கள். ஆயுதப் பயிற்சி பெற்­றுள்­ளனர். இவை­யெல்­லா­வற்­றையும் அவர்கள் முஸ்­லிம்கள் எவ­ருக்­குமே தெரி­யாமல் கள்­ளத்­த­ன­மா­கவா செய்­தார்கள் ?

நான் உங்­க­ளிடம் சிறி­ய­தொரு கேள்வி கேட்­கிறேன். 88/89 காலப்­ப­கு­தியில் தெற்­கிலே ஓர் ஆயுதக் கிளர்ச்சி நடந்­தது நமக்குத் தெரியும். அக்­கி­ளர்ச்சி பற்றி ஒவ்­வொரு சாதா­ரண சிங்­களப் பொது­ம­கனும் தெரிந்­தி­ருந்­த­னரா? அக்­கி­ளர்ச்­சி­யோடு தொடர்­புகள் கொண்­டி­ருந்­த­வர்­களின் பெற்­றோர்­க­ளா­வது கிளர்ச்சி குறித்து அறிந்­தி­ருந்­தார்­களா? தென்­ப­கு­தியின் சமயத் தலை­வர்கள் அந்த ஆயுதப் பயிற்­சிகள், ஆயுதக் கிடங்­குகள் குறித்­தெல்லாம் தெரிந்­தி­ருந்­தார்­களா? இவர்கள் எவ­ருமே அப்­படித் தெரிந்­தி­ருக்­க­வில்லை என்றே நான் நினைக்­கிறேன். இத்­த­கைய எந்தக் குழுக்­களும் இர­க­சி­ய­மா­கத்தான் இயங்­கு­கின்­றன. இந்தக் குழுவும் அப்­ப­டித்தான் இயங்கி இருக்க முடியும். ஆனால் ஒரு­சிலர் தெரிந்­தி­ருந்­தார்கள் என்­பது பொய்­யில்லை. எனினும் மொத்த முஸ்லிம் சமூ­கமும் தெரிந்தே இருந்­தது என்­பது நியா­ய­மற்ற, ஏற்க முடி­யாத ஒரு வாத­மாகும்.

ஆனாலும், அக்­கு­ழு­வி­னரைப் பற்­றிய சரி­யான ஒரு மதிப்­பீடு எங்­க­ளுக்குள் இருக்­க­வில்லை என்­பதை ஏற்­றுத்தானாக வேண்டும்.

Qஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பின்­ன­ரும்­கூட முஸ்லிம் சமூ­கத்­திற்குள் போது­மான பிர­தி­ப­லிப்­பு­களோ எதிர்­வி­னை­களோ காணப்­ப­ட­வில்லை எனும் பொது­வான குற்­றச்­சாட்டுக் குறித்து நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள் ?

இதைப் பற்றித் தெரிந்­தி­ருந்த காத்­தான்­குடி முஸ்­லிம்கள் இராணு­வத்­திற்குத் தக­வல்­களைக் கொடுத்­தி­ருப்­பதைப் பற்றி நீங்கள் என்ன சொல்­கி­றீர்கள்? நான் வாழும் அக்­கு­றணை மக்கள் இது பற்றி அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பது உண்­மைதான். ஆனாலும் அறிந்­தி­ருந்தோர் ஏற்­க­னவே தக­வல்­களைக் கொடுத்­துள்­ளனர். அவை பிர­தி­ப­லிப்­புகள் இல்­லையா? வெளி­யா­ருக்கு, வெளிப்­ப­டை­யாகத் தெரி­யா­விட்­டாலும் இத்­தாக்­கு­தல்கள் குறித்து முஸ்லிம் சமூ­கத்­திற்குள் சீரி­ய­ஸான கருத்­தா­டல்கள் நடந்தே வரு­கின்­றன.

முஸ்லிம் தொழில்­வாண்­மை­யா­ளர்கள் இஸ்­லாத்­து­ட­னான மிகக்­கு­றைந்த தொடர்­பு­க­ளையே கொண்­டி­ருந்­தனர். அவர்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வந்­தார்கள், தொழு­தார்கள், மீண்டும் வீடு­க­ளுக்குச் சென்­றார்கள் அவ்­வ­ள­வுதான். ஆனாலும் இந்த நிகழ்­வு­களின் பிறகு, நடந்­தி­ருப்­பது என்ன? ஏன் இப்­படி நடந்­தது என்­றெல்லாம் சிந்­திக்கத் தொடங்கி உள்­ளனர். ஆரம்­பத்தில் அவர்கள் மேம்­போக்­கான உரை­யா­டல்­களைத் தொடங்­கினர். ஆயினும் மிகவும் விரை­வா­கவே அவ்­வு­ரை­யா­டல்கள் செவ்­வை­யுறத் தொடங்கி, இக்­கு­ழு­வி­னரின் பேர­ழிவு குறித்த விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். எங்­க­ளு­டைய மிஷ்காத் ஆய்வு நிறு­வனம் இவ்­வா­றான ஆய்­வு­களில் இறங்­கு­வ­தற்கும் அத்­த­கைய சிலரின் தூண்­டு­தல்­களும் கார­ணி­க­ளாகும்.

Qஇத்­தாக்­கு­தல்கள் குறித்து உலமா சபைக்கும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் எதி­ராகக் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்­ளன. இது குறித்து நீங்கள்..?

இதில் இரண்டு விட­யங்கள் உள்­ளன. உல­மாக்கள் எங்கள் சமூ­கத்தை நல்ல நிலைக்கு இட்டுச் செல்­வார்கள் என்று எங்கள் மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்கள். ஆனாலும், அது அந்­த­ள­வுக்கு நடை­பெ­ற­வில்லை என்­பது இப்­போது தெளி­வாகி உள்­ளது. அதனால் நாமெல்­லோரும் இப்­போது மதத் தலை­வர்­க­ளுக்கு அப்­பா­லான வெளிச் சிவில் சமூ­கத்தின் பங்­க­ளிப்பைப் பெற்­றுக்­கொண்டு நல்­ல­தொரு மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான தீவிர முயற்­சியில் இறங்­கி­யுள்ளோம்.

Qமுஸ்­லிம்கள் என்போர் ஓர் இனம். ஏனைய இனத்தார் பல்­வேறு மதங்­களை அனுஷ்­டிக்­கின்­றனர். சிங்­க­ளவர் – பெளத்த, கத்­தோ­லிக்க மதங்­களை அனுஷ்­டிக்­கின்­றனர். தமி­ழர்கள் – இந்து மதத்தைப் போல கத்­தோ­லிக்க, பெளத்த மதங்­க­ளையும் பின்­பற்­று­கின்­றனர். ஆயினும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை மட்டுமே பின்பற்றுகின்றனர்?

நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். இப் பேரவலத்தின் பிறகு, முஸ்லிம்களுக்கு இருண்டதொரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைப் போலவே சிலவேளை சில மாற்றங்களை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது. அளவுக்கதிகமாக இஸ்லாத்தின் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாலேயே இவையெல்லாம் நிகழ்ந்துள்ளன என்றே நாம் நினைக்கிறோம். தீவிரமாக மதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை அதிலிருந்து சற்று விடுவித்து, பலமான, நடுநிலையான ஒரு முஸ்லிம் சிவில் சமூகமாக மாற்றியமைப்பதற்கான ஒரு குழு முயற்சியிலேயே நாம் இறங்கியுள்ளோம்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவன் எங்களுக்கு அருளியுள்ள இறை அறிவாகவே ‘வஹீ’யை நாம் கருதுகிறோம். அதைப் போலவே இறைவன் மனிதனுக்கு சுய அறிவையும் வழங்கியுள்ளான். மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள இந்த அறிவைச் சூழ்நிலைகளுக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் நாட்டமாகும்.

நேர்காணல்: சிசிர யாப்பா
தமிழில்: அஜாஸ் மொஹம்மத்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.