அமைச்சுப் பதவிகளை மீள் ஏற்பதா? இல்லையா?

முஸ்லிம் எம்.பி.க்கள் நாளை இறுதித் தீர்மானம்

0 635

‘அர­சாங்­கத்தில் முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி வகிக்­கா­மையின் பாதகம் இப்­போது உண­ரப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்தும் முஸ்­லிம்கள் ஒதுக்­கப்­படும் நிலை ஏற்­ப­டலாம். இவ்­வா­றான நிலையில் பத­வி­களை இரா­ஜி­னாமா  செய்து கொண்ட முன்னாள் முஸ்லிம் அமைச்­சர்களாகிய நாம் தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்ள வேண்­டிய நிலை­யி­லுள்ளோம். அதற்­காக இறுதித் தீர்­மானம் ஒன்­றினை எட்­டு­வ­தற்­காக பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களும் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஒன்­று­கூடி ஆலோ­சிக்­க­வுள்ளோம்’ என முன்னாள் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.ஏ. ஹலீம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். பதவி வில­கி­யுள்ள முஸ்லிம் அமைச்­சர்­களின் எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்கைள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘சமூ­கத்தின் பாது­காப்பு கரு­தியும் நலன்­க­ரு­தியும் குறு­கிய காலத்தில் நாம் கலந்­து­பேசி கூட்­டா­கவே அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்தோம். இப்­போது கூட்­டா­கவே நாம் அடுத்த கட்ட தீர்­மா­னத்­தையும் மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் எங்­க­ளுக்கு பெரும்­பான்மை யினத்­த­வர்­களின் வாக்­குகள் அவ­சி­யப்­ப­டு­கி­றது. மகா­நா­யக்க தேரர்கள் நாங்கள் மீண்டும் எங்கள் பத­வி­களைப் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்­ளார்கள். கட்­சியின் தலைமைப் பீடமும் எங்­களை மீண்டும் பத­வியில் அம­ரு­மாறு வலி­யு­றுத்தி வரு­கி­றது.

நாங்கள் கூட்­டா­கவே இரா­ஜி­னாமா செய்தோம். எனவே கூட்­டா­கவே தீர்­மா­னங்­க­ளையும் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அமைச்சுப் பத­வி­களில் முஸ்­லிம்கள் இல்­லா­தி­ருந்தால் முஸ்லிம் சமூ­கத்­துக்கே பாதிப்­புகள் ஏற்­படும். இந்­நி­லைமை தொடர்­வது ஆபத்­தா­ன­தாகும்.

சாகும்­வரை உண்­ணா­வி­ர­தத்தை மேற்­கொண்டு அதன் மூலம் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாரிய ஆபத்­து­களை ஏற்­ப­டுத்­த­வி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் தற்­போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பொய்ப்­பி­ர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கிறார். தமிழ் சமூகம் சிங்­கள சமூ­கத்­துடன் ஒன்று சேர வேண்­டு­மெ­னவும் முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்கப்­ப­ட­வேண்டும் எனவும் கூறி வரு­கிறார்.

குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தொடர்­பான விசா­ர­ணைகள் நடை­பெ­ற­வுள்­ளன. விசா­ர­ணைகள் நடை­பெறும் நிலையில் எந்­தவோர் குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­ப­டாத முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி விலகி தொடர்ந்தும் செய­லற்று இருக்­கக்­கூ­டாது. அவர்கள் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுப்பெற்று வருகின்றன. மகாநாயக்க தேரர்களும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் உலமா சபையும் மௌனியாக இருக்கிறது.

எனவே நாங்கள் விரைவில் தீர்மானமொன்றினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.