ரிஷாட், அசாத், ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக மொத்தம் 27 முறைப்­பா­டுகள்

சி.ஐ.டி. விசா­ர­ணைகள் விரைவில் ஆரம்­ப­மாகும்

0 658

பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகிய மூவ­ருக்கும் எதி­ராக பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு மொத்­த­மாக  27 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­ற­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

கடந்த நான்காம் திகதி முதல் நேற்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவ­ருக்கும் எதி­ராக முறைப்­பா­டு­களை பதிவு செய்ய பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஒரு­வரின் கீழ் இரு பொலிஸ் அத்­தி­யட்­சகர்கள் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்தக் குழு­வுக்கே இந்த 27 முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­ற­தாக அவர் மேலும் கூறினார்.

இந்த 27 முறைப்­பா­டு­களில் அதி­க­மா­னவை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீ­னுக்கு எதி­ரா­கவே கிடைக்கப் பெற்­றுள்­ளன. அவ­ருக்கு எதி­ராக 12 முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் முன்னாள் ஆளு­நர்­க­ளான அசாத் சாலிக்கு எதி­ராக 5 முறைப்­பா­டு­களும் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக இரு முறைப்­பா­டு­களும்  பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. முன்னாள் அமைச்சர் ரிஷாத்­ பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்­புல்லாஹ் ஆகிய மூவரின் பெய­ரையும் உள்­ள­டக்கி 8 முறைப்­பா­டு­களும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிறப்பு பொலிஸ் குழு­வுக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன.

இந் நிலையில் இந்த முறைப்­பா­டுகள் தொடர்­பி­லான  மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கைய­ளிக்­கப்­பட ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விரைவில் சிறப்பு குழுவொன்றூடாக  இந்த 27 முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.