ஷரீஆ சட்டங்களை அமுல்படுத்தும் புரூணை சுல்தான்

0 840
  • எம்.ஐ.அப்துல் நஸார்

ஷரீஆ தண்­ட­னைகள் கடந்த புதன்­கி­ழமை (03) தொடக்கம் புரூ­ணையில் அமு­லுக்கு வந்­துள்ள நிலையில், ஆண் ஒருபால் உறவு, முறை­பி­றழ்­பு­ணர்ச்சி போன்­ற­வற்­றிற்கு கல்­லெ­றிற்து கொல்­லுதல் உள்­ளிட்ட கடு­மை­யான புதிய ஷரீஆ தண்­ட­னை­களை அமுல்­ப­டுத்தி நாட்டில் இஸ்­லா­மியப் போத­னை­களைப் பலப்­ப­டுத்த வேண்­டு­மென புரூணை சுல்தான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் கொண்ட சுல்தான் ஹஸனல் பொல்­கி­யா­வினால் ஆட்சி செய்­யப்­படும் சின்­னஞ்­சிறு சிறிய போர்­னியோ தீவில் நீண்ட கால தாம­தத்­திற்குப் பின்னர் இறுக்­க­மான குற்­ற­வியல் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

சவூதி அரே­பியா போன்று பெரும்­பா­லான மத்­திய கிழக்கு நாடு­களில் அமுல்­ப­டுத்­தப்­படும் திரு­டினால் கைகளை வெட்டி அகற்­றுதல் உள்­ள­டங்­க­லான இக் குற்­ற­வியல் சட்­டங்­களை தேசிய மட்­டத்தில் அமுல்­ப­டுத்தும் கிழக்கு மற்றும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் முத­லா­வது நாடாக புரூணை இடம்­பி­டித்­துள்­ளது.

பாலியல் வன்­பு­ணர்வு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்­க­ளுக்கு இக் குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் கீழ் மரண தண்­டனை விதிக்­கப்­படும் அதே­வேளை, இறைத் தூதர் நபிகள் நாய­கத்தை அவ­ம­தித்தல் உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்கு புதிய சட்­டத்தில் மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­வுள்­ளது. இச் சட்­டங்கள் முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்லிம் அல்­லா­தோ­ருக்கும் ஏற்­பு­டை­ய­தாகும்.

இத் தண்­ட­னை­களை அமு­லுக்கு கொண்டு வரு­வ­தென எடுக்­கப்­பட்ட தீர்­மானம் உலகம் முழு­வ­திலும் அதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபை ‘கொடூ­ர­மா­னதும் மனி­தா­பி­மா­ன­மற்­ற­து­மான’ தண்­ட­னை­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை, புரூ­ணைக்குச் சொந்­த­மான ஹோட்­டல்­களை புறக்­க­ணிக்­கு­மாறு நடிகர் ஜோர்ஜ் குலூனி மற்றும் பொப்­பிசைப் பாடகர் எல்டன் ஜோன் ஆகியோர் தலை­மை­யி­லான பிர­ப­லங்கள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

இஸ்­லா­மிய நாட்­காட்­டியின் விஷேட தின­மொன்றைக் குறிக்கும் விதத்தில் பொது­மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய சுல்தான் இஸ்­லா­மியப் போத­னைகள் பலப்­ப­டுத்த வேண்­டு­மென தெரி­வித்தார், எனினும் புதிய குற்­ற­வியல் சட்­டக்­கோவை பற்றி நேர­டி­யாக எத­னையும் குறிப்­பி­ட­வில்லை.

‘இந்த நாட்டில் இஸ்­லா­மியப் போத­னைகள் பல­மிக்­க­தாக வளர்­வதைக் காண விரும்­பு­கின்றேன்’ என தலை­நகர் பந்தர் சேரி பெகா­வா­னுக்கு அருகில் மாநாட்டு மத்­திய நிலை­ய­மொன்றில் தேசிய ரீதி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட தொலைக்­காட்சி உரையில் குறிப்­பிட்டார்.

‘எப்­போதும் அல்­லாஹ்வை மாத்­திரம் வணங்­கு­கின்ற ஒரு நாடே புரூணை என சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­க­ளுக்கு அவர்­க­ளது மார்க்கக் கட­மையை நினை­வூட்­டு­வ­தற்­காக தொழு­கைக்­கான அழைப்பு வெறு­மனே பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மல்­லாது அனைத்து இடங்­க­ளிலும் ஒலிக்க வேண்டும் என தான் விரும்­பு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

ஐந்து தசாப்­தங்­க­ளாக பதவி வகித்­து­வரும் சுல்தான் ‘புரூணை நீதி­யா­னதும் மகிழ்ச்­சி­க­ர­மா­ன­து­மான நாடாகும்’ எனவும் தெரி­வித்தார். யாரா­வது இந்த நாட்­டிற்கு விஜயம் செய்தால், இனி­மை­யான அனு­ப­வங்­களை பெற்­றுக்­கொள்­வ­தோடு பாது­காப்­பா­னதும் அமை­தி­யானதுமான சூழ்­நி­லை­யையும் அனு­ப­விக்க முடியும் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஷரீஆ குற்­ற­வியல் சட்­டக்­கோவை அமு­லுக்கு வந்­து­விட்­டதா இல்­லையா என்­பதை அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக உறு­திப்­ப­டுத்­த­வில்லை. எதிர்­வரும் புதன்­கி­ழமை புதிய தண்­ட­னைகள் அமு­லுக்கு வரும் என கடந்­த­வார இறு­தியில் புரூணை அர­சாங்கம் விடுத்­தி­ருந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த இறுக்­க­மான தண்­ட­னைகள் உல­க­ளா­வி­ய­ரீ­தியில் கண்­ட­னங்­களை உரு­வாக்­கி­யுள்­ளன.

இந்த சட்­டக்­கோவை,  குற்­ற­மாகக் கரு­தப்­ப­டக்­கூ­டாத செயற்­பா­டு­க­ளுக்கும் புரா­த­ன­கால தண்­ட­னை­களை அமுல்­ப­டுத்­து­வது காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தின் அடிப்­ப­டை­யாகும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் பிரதி ஆசியப் பணிப்­பாளர் பில் ரொபட்சன் தெரி­வித்­துள்ளார்.

உலகின் முதல்­நிலை செல்­வந்­தர்­களில் ஒரு­வரும் தங்கக் குவி­மாடம் கொண்ட மிகப்­பெரும் அரண்­ம­னையில் வசித்து வரு­ப­வ­ரு­மான சுல்­தா­னினால் 2013 ஆம் ஆண்டு இந்த சட்­டக்­கோவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இரு ஆண்கள் ஒருபால் உறவில் ஈடு­ப­டு­மி­டத்து அவர்­க­ளுக்கு கல்­லெ­றிந்து கொல்­லு­வதைத் தண்­ட­னை­யாக விதித்­துள்ள இச் சட்டம் பெண்கள் இருவர் பாலியல் உற­வினைக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் அவர்­க­ளுக்­கான அதி­க­பட்ச தண்­ட­னை­யாக 40 பிரம்­ப­டிகள் அல்­லது 10 வருட சிறைத் தண்­டனை விதிக்­க­வுள்­ளது.

2014 ஆம் ஆண்டு இச் சட்­டக்­கோ­வையின் முத­லா­வது பகுதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தோடு ஒழுங்­கீ­ன­மான நடத்தை மற்றும் வெள்­ளிக்­கி­ழமை தொழு­கை­யினைத் தவ­ற­வி­டுதல் உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்கு தண்­டப்­பணம் அல்­லது சிறைத் தண்­டனை போன்ற இறுக்கம் குறைந்த தண்­ட­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

கடந்த வாரம் ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஒன்­பது புரூ­ணைக்குச் சொந்­த­மான ஹோட்­டல்­களை புறக்­க­ணிக்­கு­மாறு நடிகர் ஜோர்ஜ் குலூனி விடுத்­தி­ருந்த வேண்­டுகோள் சர்­வ­தே­ச­ரீ­தி­யாக தலைப்புச் செய்­தி­யாக இடம்­பி­டித்­தி­ருந்­தது.

இதனைத் தொடர்ந்து, கண்­டனக் கூக்­கு­ரலில் தமது பெயர்­க­ளையும் பதிவு செய்து கொள்­வ­தற்­காக முன்னாள் அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி ஜோ பைடன் மற்றும் நடிகை ஜாமி லீ கேர்டிஸ் உள்­ளிட்ட பிர­பல பிர­மு­கர்­களும் வரி­சை­யாக வந்து இணைந்­து­கொண்­டுள்­ளனர்.

அர­சாங்கம் இது தொடர்பில் மதிப்­பீடு செய்து வரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள அமெ­ரிக்கா இந்தத் தண்­ட­னைகள் புரூ­ணையின் சர்­வ­தேச மனித உரி­மைகள் கடப்­பா­டு­க­ளுக்கு முர­ணா­ன­தாகக் காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்­துள்­ளது.

ஆபத்­திற்கு இலக்­காகக் கூடிய குழுக்­களை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற வன்­மு­றைகள், குற்­ற­மா­க­மாற்­றுதல் மற்றும் பாகு­பா­டு­களை அமெ­ரிக்கா கடு­மை­யாக எதிர்ப்­ப­தாக இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பேச்­சாளர் ரொபேட்டோ பல்­லா­டினோ தெரி­வித்­துள்ளார்.

உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்­வதில் இரண்­டா­வது இடத்­தி­லுள்ள சுல்தான் 1990களின் பிற்­ப­கு­தியில் குறித்த தண்­ட­னைக்­கோவை தொடர்பில் முதன் முதலில் பிரஸ்­தா­பித்தார். அதனைத் தொடர்ந்து பிரித்­தா­னி­யாவின் முன்னாள் ஆள்­புலப் பிர­தே­ச­மாக இருந்த புரூ­ணையின் சுமார் 400,000 பேர் அதற்கு ஆத­ர­வ­ளித்­தனர்.

அண்­மைய ஆண்­டு­களில் எண்­ணெய் வ­ளத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யினால் பொரு­ளா­தாரப் பின்­ன­டைவு ஏற்­பட்டு வரு­வதால் இஸ்லாம் தொடர்­பான தனது அடை­யா­ளத்­தினை புதுப்­பிப்­ப­தோடு நாட்­டி­லுள்ள பழை­மை­வா­தி­களின் ஆத­ரவை பெருக்­கிக்­கொள்ள வேண்­டிய தேவை அவ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கல்­லெ­றிந்து கொல்லும் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டுமா என்­பது தெளி­வற்ற ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்­றது. ஏனெனில் அவ்­வா­றான தண்­டனை வழங்­கப்­ப­டு­வ­தற்கு மிகவும் பல­மான ஆதா­ரங்கள் அவ­சி­ய­மாகும். பல தசாப்­தங்­க­ளாக எவ­ருக்கும் இது­வரை அவ்­வா­றான தண்­டனை விதிக்­கப்­ப­ட­வில்லை.

புரூணை

கணி­ச­மான எண்ணெய் வளமும் எரி­வாயு சேமிப்­பையும் கொண்­டுள்ள உலகின் உயர்ந்த வாழ்க்­கைத்­த­ரத்தைக் கொண்­டுள்ள சிறிய தேசமே புரூ­ணை­யாகும்.

தேசத்தின் தலை­வ­ரான சுல்தான் ஹஸனல் பொல்­கி­யாவின் தலை­மை­யி­லான ஆளும் அரச குடும்­பத்­தி­ன­ருக்கு பெரு­ம­ள­வான சொத்­துக்கள் இருப்­ப­தோடு அதில் பெரும்­பான்­மை­யாகக் காணப்­படும் மலா­யர்கள் அப­ரி­மி­த­மான அரச உத­வி­களைப் பெறு­வ­தோடு வரி விலக்­கி­னையும் பெற்­றுள்­ளனர்.

1888 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்­தா­னி­யாவின் ஆள்­புலப் பிர­தே­ச­மாக இருந்த புரூணை 1963 ஆம் ஆண்டு தொடக்கம் மலே­சி­யா­வுடன் இணைந்­தி­ருந்­தது. பின்னர் 1984 ஆம் ஆண்டு முழு­மை­யான சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொண்­டது.

குறிப்­பி­டத்­தக்க முஸ்­லி­மல்­லாத சிறு­பான்­மை­யினர் புரூ­ணையில் வாழ்ந்­து­வரும் நிலையில், மனித உரி­மைகள் அமைப்பின் கடு­மை­யான எதிர்ப்­புக்கும் மத்­தியில் 2014 ஆம் ஆண்டு முறை­பி­றழ்­பு­ணர்ச்சி குற்­றத்­திற்கு கல்­லெ­றிற்து கொல்­லுதல் மற்றும் திரு­டினால் கைக­ளை வெட்டி அகற்­றுதல் உள்­ள­டங்­க­லான தண்­ட­னை­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்கும் கடு­மை­யான இஸ்­லா­மிய சட்­டத்­திற்கு அங்­கீ­காரம் வழங்­கிய முத­லா­வது கிழக்­கா­சிய நாடாக புரூணை மாறி­யது.

புரூணை சுல்தான் ஹஸனல் பொல்­கியா பற்­றிய உண்­மைகள்

உலகின் மிக நீண்­ட­காலம் பதவி வகிக்கும் மன்­னர்­களுள் ஒரு­வ­ரான சுல்தான் ஹஸனல் பொல்­கியா 1969 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் மன்­ன­ரானார். அவ­ரது தந்தை சேர் ஹாஜி ஒமர் அலி சைபுதீன் பதவி வில­கி­யதைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டம் சூட்­டப்­பட்டார்.

தற்­போது உல­கி­லுள்ள முழு­மை­யான ஆட்சி அதி­காரம் கொண்ட மன்­னர்­களுள் ஒரு­வ­ரான சுல்தான் ஹஸனல் பொல்­கியா பெரு­ம­ள­வான எண்ணெய் மற்றும் இயற்கை எரி­வா­யு­வி­லி­ருந்து கிடைக்கும் ஏரா­ள­மான வரு­மா­னத்தைக் கொண்டு தனது சின்­னஞ்­சிறு நாட்டை உலகின் மிகப் பொரு­ளா­தாரச் செழிப்­பு­மிக்க நாடா­கவும் சமூகப் பாது­காப்­பு­மிக்க சமூ­க­மா­கவும் மாற்­றி­யுள்ளார். உலகின் மிகப் பெரும் செல்­வந்­தர்­களுள் ஒரு­வ­ரான சுல்தான் ஹஸனல் பொல்­கியா, ஆடம்­பர வாழ்க்கை முறைக்கும் சாத­னை­யாகக் கரு­தப்­படும் வசதி வாய்ப்­புக்­க­ளுக்கும் பிர­ப­ல­மா­ன­வ­ராகக் காணப்­ப­டு­கின்றார்.

உத்­தி­யோ­க­பூர்வ பட்­ட­மாக சுல்தான் ஹஸனல் பொல்­கியா முஇஸ்­ஸதீன் வதா­உல்லாஹ் என்­ப­தனைக் கொண்­டுள்ள புரூணை சுல்தான், வட கிழக்குக் கரையில் அமைந்­துள்ள பொர்­னியோ தீவினை ஆட்சி செய்­து­வரும் பாரம்­ப­ரிய இஸ்­லா­மிய ஆட்­சி­யாளர் 25 பில்­லி­ய­ன் அமெ­ரிக்க டொட­ருக்கும் அதி­க­மான செல்­வத்தை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கின்றார் என நிதித்­துறை ஊடகம் தெரி­வித்­த­தை­ய­டுத்தே உலகின் கவ­னத்தை தன் பக்கம் திருப்­பினார்.

அக் காலத்தில் உலகில் முத­லா­வது பணக்­கா­ர­ராக கரு­தப்­பட்டார். 1990 களில் அந்தப் பட்­டத்­தினை அமெ­ரிக்க வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் பறி­கொ­டுத்தார். தற்­போது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அர­சாங்­கத்தின் சொத்­துக்­க­ளாகக் கரு­தப்­படும் சுல்தான் ஹஸனல் பொல்­கி­யாவின் சொத்­துக்­களின் பெறு­மதி 40 பில்­லி­ய­ன் அமெ­ரிக்க டொட­ருக்கும் அதி­க­மா­ன­தென நம்­பப்­ப­டு­கின்­றது. இந்த சொத்­துக்கள் இதே வீதத்தில் அதி­க­ரித்துச் செல்­லு­மாயின் சுல்­தானின் மூத்த மகன் உலகின் முத­லா­வது கோடீஸ்­வ­ர­னாக (ரில்­லி­ய­ன­ராக) மாறு­வ­தற்கு பெரும்­பாலும் வாய்ப்­புக்கள் உள்­ளன.

1991 ஆம் ஆண்டு மலாய் இன முஸ்லிம் ஆட்­சி­யாளர் ‘நம்­பிக்­கை­யா­ளர்­களின் பாது­கா­வலர்’ என அழைக்­கப்­படும் பழை­மை­வாத சிந்­த­னை­யினை சுல்தான் அறி­முகம் செய்தார்.

இந்தக் கருத்து ஜன­நா­யகக் கோரிக்­கை­யினை மழுங்­க­டிப்­ப­த­னையும் புரூ­ணையில் அதிக எண்­ணிக்­கையில் வாழும் சீனர்கள் மற்றும் வெளி­நாட்­ட­வர்­களை ஓரம்­கட்­டு­வ­தனை நோக்­க­மாகக் கொண்­டது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

20 ஆண்­டு­க­ளாக மூடப்­பட்­டி­ருந்த புரூணை பாரா­ளு­மன்­றத்தை 2004 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் சுல்தான் மீளத் திறந்தார். இது நாட்டின் குடி­மக்­க­ளுக்கு சில அர­சியல் அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்­கான உத்­தேச நட­வ­டிக்கை என அவ­தா­னிகள் கரு­து­கின்­றனர்.

1946 ஆம் ஆண்டு பிறந்த சுல்தான் மலே­சி­யா­விலும் பிரித்­தா­னி­யா­விலும் கல்வி கற்றார். சுல்­தா­னுக்கு இரண்டு மனை­வி­யர்கள் உள்ளனர். அவர்களுள் ஒரு மனைவி உலகின் செல்வந்தப் பெண்களுள் ஒருவராவார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.