நியூ­சி­லாந்து சரித்­தி­ரத்தில் இரத்­தக்­கறை படிந்­த ஓர் அத்தியாயம்

0 925
  • கல்ஹின்னை பஹ்மி ஹலீம்தீன்

அமை­தி­யுடன், நிம்­ம­தி­யாக வாழும் மக்கள். இயற்கை எழி­லுடன்  ஐக்­கியம் கலந்த சமா­தான சூழல். இது­வரை கறை­ப­டி­யாத பக்­கங்­களில் எழு­தப்­பட்ட நியூ­சி­லாந்து  சரித்­தி­ரத்தில் இரத்­தக்­கறை படிந்­து­விட்­டது.

துப்­பாக்கி ரவை­களால் துளைக்­கப்­பட்ட அந்த தினம் நியூ­சி­லாந்தின் வர­லாற்று அத்­தி­யா­யத்தில்  மிகவும் சோகங்கள் நிறைந்த கறுப்பு தின­மா­கி­யது. 2019 மார்ச் 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அன்று க்ரைஸ்ட்சேர்ச் என்­னு­மி­டத்தில் முஸ்லிம் மக்கள் தொழு­கைக்­காக இறை­யில்­லத்தில் ஒன்று கூடி­ய­வேளை  ஐம்­பது அப்­பாவி முஸ்­லிம்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். கொலை­யாளி தனது பயங்­க­ர­வாதச் செயலை நேர­டி­யாக வீடியோ கமெ­ராவில் காட்­சிப்­ப­டுத்­தி­ய­வாறே துப்­பாக்­கிச்­சூட்டை நடத்­தி­யதைப் பார்க்­கும்­போது அக்­காட்சி ஒரு­கணம் இதயத் துடிப்பை ஸ்தம்­பிக்கச் செய்­தது.

உல­கையே அதிர்­வ­டையச் செய்த இச்­செயல், அமை­தியை விரும்பும்  நாடான நியூ­சி­லாந்தில் நடந்­தது அதிர்ச்­சியைத் தரும் ஒரு சம்­ப­வ­மா­கவே உலக நாடு­களால் பார்க்­கப்­ப­டு­கின்றன. பெரும்­பா­லான உலக நாடு­களின் தலை­வர்­க­ளது இரங்கல் செய்­தி­களும் , கண்­ட­னங்­களும் வேக­மாகப் பதி­வா­கின. உலக மக்­களின் கவ­லை­ப­டிந்த எண்­ணங்­களும் சமூக வலைத்­த­ளங்­களில் கோடிக்­க­ணக்கில் பதி­வா­கின.  நியூ­சி­லாந்து அர­சாங்­கமும் பாது­காப்புப் பிரி­வி­னரும் உட­னேயே செயற்­பட்டுத் தேவை­யான துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டதால் கொலை­யா­ளி­களை உட­னேயே கைது­செய்ய முடி­யு­மாக இருந்­தது.

1990 இல் காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த  நூற்­றுக்கும் அதி­க­மான முஸ்­லிம்­களை சுட்டுக் கொன்ற சம்­பவம் இலங்கைத் தீவி­ர­வாத இயக்­க­மான விடு­தலைப் புலி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டதை இச்­சம்­பவம் நினை­வு­ப­டுத்­தி­யது . அதன்பின் நடந்த மற்­று­மொரு கோழைத்­த­ன­மான சம்­ப­வமே நியூ­சி­லாந்தில் தற்­போது நடந்­துள்­ளது. வணக்க வழி­பா­டுகள் என்­பது எல்லா மதத்­த­வரும் அவ­ர­வ­ரது இறை நம்­பிக்­கையின் பேரில் மேற்­கொள்ளும் செய­லாகும். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் நடத்­தப்­படும் இவ்­வா­றான கோழைத்­த­ன­மான சம்­ப­வங்கள் மிகவும் மோச­மான அல்­லது கீழ்த்­த­ர­மான  மனித செயற்­பா­டாகும். இதைச் செய்­வது எம்­ம­த­மாக இருப்­பினும் இது மிகவும் கேவ­ல­மான ஒரு தீவி­ர­வாத செயல் என்­பதை எவரும் மறுக்­க­மாட்­டார்கள். இவ்­வா­றான ஈனச் செயல்­க­ளுக்­கான பிர­தி­ப­லன்­களும் இறைவன் புறத்­தி­லி­ருந்து கிடைத்து முற்­றாக அழிந்து போன­வர்­களும் உண்டு என்­ப­தற்­கான  மிகத் தெளி­வான அத்­தாட்­சிகள் வர­லா­று­களில் அழ­காகப் பதி­யப்­பட்­டுள்­ளன.

நியூ­சி­லாந்தில் நடந்த இந்தப் பயங்­க­ர­வாத துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவம் வித்­தி­யா­ச­மான முறையில் நீண்­ட­காலம் திட்­ட­மி­டப்­பட்டு நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவே அறி­ய­மு­டி­கி­றது. தீவி­ர­வா­தியின் மனதில் பதிந்­தி­ருந்த வக்­கிரம், கோபம், பகையை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அவர் வைத்­தி­ருந்த துப்­பாக்­கியில் எழுதப் பட்­டி­ருந்த பல வாச­கங்­களும் உறுதி செய்­தது .

அவ்­வா­ச­கங்­களில் சில, “refugees welcome to the Hell” என அக­தி­க­ளுக்­கெ­தி­ரான வெறுப்­பு­ணர்வை உணர்த்­து­வ­தாக ஒரு வாசகம் இருந்­தது. அத்­துடன் உஸ்­மா­னிய கிலாஃ­பத்­துக்கு எதி­ராக கிறிஸ்­தவ உலகம் பெற்ற வெற்­றியின் குறி­யீ­டு­க­ளா­கவும் சில வாச­கங்கள் காணப்­பட்­டன.

“Turkofagos” எனும் கிரேக்க மொழிச் சொல் “துருக்கி கொலை­கா­ரர்கள்” என்­ப­தாகும் .

“John Hunyadi” இது கொன்ஸ்­டாந்­தி­நோபில் வெற்­றியின் பின் 1456 ஆம் ஆண்டு நடை பெற்ற யுத்­தத்தில் சுல்தான் மஹ்­மூதின்  படைக்கெதி­ராகப் போராடி வென்ற ஹங்­கேரி நாட்டு இரா­ணுவத் தள­ப­தியின் பெய­ராகும்.

“Vienna – 1683 இது உஸ்­மா­னியப் படை வியன்னா போரில் தோல்­வி­யுற்ற ஆண்டு.

“Milos – Obilic” இது 1389 ஆம் ஆண்டு உஸ்­மா­னிய சுல்தான் முராத் –-1 அவர்­களை படு­கொலை செய்த செர்­பியத் தள­ப­தியின் பெயர்.

இவ்­வா­றான வாச­கங்கள் முஸ்­லிம்கள் மீது வர­லாற்று ரீதி­யான பகை­யையும் வெறுப்­பு­ணர்­வையும்  பிர­தி­ப­லிப்­ப­தாக இருப்­ப­துடன் பாஸிஸ தீவி­ர­வா­தி­களின் திட்­ட­மி­டப்­பட்ட சதி­யையே உணர்த்தி நிற்­கின்­றன. வர­லாற்றை நாம் மறந்­தாலும் அவர்கள் மறக்­க­வில்லை என்­ப­தற்­கான சிறந்த ஒரு சான்று இது.

தாக்­கு­தலில் ஈடு­பட்டு கைதா­கி­யி­ருக்கும் பிர­தான குற்­ற­வா­ளி­யாக சந்­தே­கிக்­க­ப்படும் 28 வய­து­டைய பிரென்டன் டெரன்ட் என்­பவர் நீதி மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். அப்­போது சிறைக் கைதிகள் அணியும் வெள்­ளை­நிற ஆடை­யுடன் விலங்­கி­டப்­பட்ட நிலையில் அவர் காணப்­பட்­ட­தா­கவும் அவர் அழைத்து வரப்­ப­டும்­போது அவ­ரது கை விரல்­க­ளினால் வெள்­ளை­யர்­களின் சின்­னத்தை அடை­யா­ளப்­ப­டுத்தி ஊட­கங்­க­ளுக்குக் காட்­சிப்­ப­டுத்­தி­ய­தா­கவும் காணொ­லிகள் வெளி­யாகி இருந்­தன. இவர்­மீது படு­கொலைக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தப்பட்­ட­போதும் இவர்  தனக்குப் பிணை வழங்­கு­மாறோ அல்­லது தன்னை விடு­தலை செய்­யு­மாறோ எந்­த­வித வேண்­டு­கோள்­க­ளையும் முன்­வைக்­க­வில்­லை­யெனக் குறிப்­பிடப்படு­கி­றது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்த இவர் உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றில் ஆலோ­ச­க­ராகக் கடை­மை­யாற்­றி­ய­தாக ஊடக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தாக்­கு­த­லுக்கு ஒரு சில மணி நேரத்­துக்கு முன் இப்­ப­யங்­க­ர­வாதி இணை­யத்­தள பதி­வொன்றில் 74 பக்­கங்­களைக் கொண்ட பல தக­வல்­களும் அடங்­கிய அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­த­தாக செய்­திகள் கூறு­கின்­றன. அதில் முக்­கி­ய­மான ஒரு விட­ய­மாக,  கடந்த 2011 ஆம் ஆண்டு நோர்­வேயில் 77 பேரைக் கொலை செய்த “அன்டர்ஸ் பிரேய்விக்” என்­ப­வரைத் தான் முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு இத்­தாக்­கு­தலை நடத்தப் போவ­தாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான பல தக­வல்­க­ளையும் நோக்­கும்­போது இவ­ருக்­குப்பின் பல உண்­மை­களும் மறைந்­தி­ருப்­பதை உணர முடி­கி­றது. அந்த உண்­மைகள், தீவிர விசா­ர­ணை­களின் பின் உலக மக்கள் முன் வெளிச்­சத்­திற்கு வரத்தான் போகி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சதி­மு­யற்­சி­களில் இதுவும் ஒன்­றாகக் கரு­தப்­பட்­டாலும் இஸ்­லாத்தை அழிக்க பல சதித்­திட்­டங்கள் தீட்­டப்­பட்­டாலும் அவை அனைத்தும் இறு­தியில் பகல் கன­வா­கவே முடிந்து விடு­கின்­றன.

க்ரைஸ்ட்­சேர்ச்சில் நடந்த இப்­ப­யங்­க­ர­வாதத் தாக்­குதல் உலக மக்­களை இஸ்­லாத்தின் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது. அமெ­ரிக்­காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்­கு­தலின் போது உலகில் அதி­க­மாகப் பேசப்­பட்ட மதம் இஸ்லாம் என்­றாலும் அத்­தாக்­கு­தலில்  மறைக்­கப்­பட்ட உண்­மை­களும் , சதி­களும் பின்னர் மெது­வாக அம்­ப­ல­மா­கின. அதன்பின் அமெ­ரிக்­கர்கள் மட்­டு­மன்றி ஏனைய மேற்­கத்­திய ஐரோப்­பிய நாடு­களில் வாழும் மக்­களும் இஸ்­லாத்தை பற்றி ஆராய ஆரம்­பித்­தனர். அதன் விளைவு இஸ்­லா­மிய மார்க்­கத்தின் உண்மைத் தன்­மை­யுடன் ஒரிறைக் கொள்­கையின் பால் ஈர்க்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் அப்­போது புனித இஸ்­லா­மிய மார்க்­கத்தை ஏற்றுக் கொண்­டது மட்­டு­மன்றி, தொடர்ச்­சி­யாக இஸ்­லாத்தை ஏற்றுக் கொள்­ப­வர்கள் அதி­க­மாகிக் கொண்டே போவதால், உலகில்  இஸ்­லாத்தின் வளர்ச்­சியின் வேகம் துரி­த­மாகிக் கொண்டே போவ­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன. இன்று உலகில்  மிகவும் வேக­மாகப் பரவும் மத­மாக இஸ்லாம் மாறி­விட்­டது. அதே­போன்­றுதான் க்ரைஸ்ட்சேர்ச் தாக்­கு­தலின் பின்­னரும் நியூ­சி­லாந்தில் இஸ்­லாத்தின் பால் ஈர்க்­கப்­பட்டு ஓரிறைக் கொள்­கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஊடக செய்­தி­களில் காண முடி­கி­றது. இன்னும் ஏரா­ள­மான நாடு­களில் வாழும் மக்கள் இஸ்­லாத்தின் கொள்­கை­களை ஆராய ஆரம்­பித்­தி­ருப்­பது இஸ்­லா­மிய எதிர்ப்­பா­ளர்­க­ளுக்கு பேரிடி தரும் செய்­தி­யாக இருக்கும் என்­பதில் எந்த ஐய­மு­மில்லை.

உலகில் அன்­றாடம்  நடக்கும் பல தீவி­ர­வாதச் செயல்­க­ளையும் யூத ஸியோ­னிஸ சக்­தி­கள்தான் திரைக்குப் பின்­னா­லி­ருந்து இயக்­கு­கின்­றன என்ற உண்மை இன்னும் மறைக்­கப்­பட்ட இர­க­சி­ய­மா­கவே இருந்து வரு­கி­றது. எது நடந்­தாலும் அது இஸ்­லா­மியத் தீவி­ர­வாதம் என உல­குக்குக் காட்டிக் காட்­டியே உண்­மைகள் மூடி மறைக்­கப்­ப­டு­கின்­றன. உலக ஊட­கங்­களும் அவற்றை ஊதிப் பெரி­து­ப­டுத்தி இஸ்­லாத்­திற்கு களங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தையே வழக்­க­மாக்கி செயற்­ப­டு­கின்­றன. ஆனால்  நியூ­சி­லாந்து தாக்­குதல், பள்­ளி­வா­ச­லுக்­குள்­ளேயே முஸ்­லிம்கள் அநி­யா­ய­மாக சுட்­டுக்­கொல்­லப்­பட்­டது உலக நாடு­களின் கண்­ட­னத்­தையும் முஸ்­லிம்கள் மீது அனு­தாப உணர்­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. க்ரைஸ்சேர்ச் தாக்­கு­த­லின்பின் நியூ­சி­லாந்து மக்­களின் மனி­தா­பி­மானம், மலர் வளை­யங்­க­ளாக பள்­ளி­வா­சலின் முன் குவிந்து காணப்­பட்­டன. நியூ­சி­லாந்தில் 1.5 சத­வி­கித முஸ்­லிம்­களே வாழ்ந்­தாலும் வீர­ம­ர­ண­ம­டைந்த முஸ்லிம் சகோ­த­ரர்­களை முஸ்லிம் மக்கள் மட்­டு­மன்றி 100 சத­வி­கித நியூ­சி­லாந்து மக்­களும் ஒன்­று­சேர்ந்து சகோ­தர வாஞ்­சை­யுடன் அஞ்­சலி செலுத்தி வரு­கின்­றனர். பாதை­யோ­ரங்­களில் “நாம் முஸ்­லிம்­களின் விரோ­தி­க­ளல்ல” என்றும் “முஸ்­லிம்கள் நம் சகோ­தர்கள்” என்றும்  பதா­தை­களைச் சுமந்து இறந்­தவர் குடும்­பங்­க­ளுக்கும் உலக முஸ்­லிக்­க­ளுக்கும்  நட்பு கலந்த அனு­தா­பங்­க­ளையும், ஆத­ர­வையும் தெரி­விக்­கின்­றனர். இது நியூ­சி­லாந்தில் மட்­டு­மன்றி ஏனைய பல நாடு­க­ளிலும் நடக்கும் ஒரு சிறந்த பண்­புள்ள மனித நேய நிகழ்­வாகக் காணக் கூடி­ய­தாக உள்­ளது. நியூ­சி­லாந்தில்  ஏனைய பள்­ளி­வா­சல்­க­ளிலும்  அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து போன்ற நாடு­க­ளிலும்,  பிற மதத்­த­வர்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வெளியே ஒன்­று­கூடி  தொழுகை நேரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்­பாக இருந்து தமது உயர்ந்த பண்­பு­களை காட்டி வரு­கின்­றனர். எத்­தனை தீய சக்­திகள் சதி­களைச் செய்­தாலும், இனத் துவே­ஷமும் , மத­வெ­றி­யு­மற்ற மனி­தர்கள் உலகில் அதி­க­மாக வாழ்­கி­றார்கள் என்­ப­தற்கு இதுவே  நல்­லதோர் சான்று.

நியூ­சி­லாந்து பிர­தமர் ஜெசின்டா ஆர்டன் ஸ்தலத்­திற்கு சமு­க­ம­ளித்து இறந்­த­வர்­களின் குடும்­பத்­த­வர்­களைக் கட்­டித்­த­ழுவி தனது அனு­தா­பங்­களை தெரி­வித்து ஆறு­தலும் கூறினார். முஸ்லிம் பெண்­களைப் போல் தலையை மறைத்­த­வ­ராக அவர் அவ்­வி­டத்­திற்கு வந்­தது பல­ரையும் ஈர்த்­தது. இறுதி அஞ்­ச­லிக்­கான செல­வு­க­ளுக்­காக தலா பத்­தா­யிரம் டாலர்­களை வழங்­கி­யதும் தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் செய்­வ­தாக உறுதி கூறி­யதும் மனி­தா­பி­மா­ன­முள்ள ஒரு நல்ல தலை­வ­ருக்­கான உதா­ரணம். அது மட்­டு­மன்றி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பயங்­க­ர­வாதத் தாக்­குதல் சம்­பந்­த­மான சிறப்பு அமர்வு பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது.  சபா­நா­ய­கரும் பிர­த­மரும் தமது உரை­களை ஆரம்­பிக்கும் போது அரபு மொழியில்  “அஸ்­ஸ­லாமு அலைக்கும்”  என்று கூறி ஆரம்­பித்­ததும், அதன் பின் முஸ்லிம் மத­போ­தகர் ஒரு­வரால் புனித குர்­ஆனின் சில வச­னங்கள் ஓதப்­பட்டு அதன் மொழி பெயர்ப்­பையும் கேட்க முடிந்­தது. பிர­தமர் ஜெசின்டா ஆர்­டனின் உரையில் “பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் பல உயிர்­க­ளையும் அவன் பலி வாங்­கி­யுள்ளான், சட்டம் அவன்­மீது முழு­வீச்சில் பாயும். அவன் ஒரு பயங்­க­ர­வாதி, குற்­ற­வாளி, ஒரு போதும் நான் அவ­னது பெயரை உச்­ச­ரிக்­க­மாட்டேன். நீங்­களும் அவ­னது பெயரை உச்­ச­ரிப்­பதை விடுத்து, அவனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் குறித்துப் பேசுங்கள் என அனை­வ­ரி­டத்­திலும் வேண்­டுகோள் விடுக்­கிறேன்” என  தாக்­குதல் மீதான தமது மிகுந்த வெறுப்­பு­ணர்­வையும், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீதான தனது பொறுப்­பு­ணர்­வையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இது, ஒரு நாட்டுத் தலைவர் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் உரை­யாகும்.

கன­டாவின் பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் போன்­ற­வர்­க­ளோடு நியூசிலாந்துப் பிர­தமர் ஜெசின்டா ஆர்­டனும் உலக மக்­களை ஈர்த்த தலை­வ­ரா­கி­விட்டார். இவ்­வா­றான தலை­வர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது  ஏனைய தலைவர்களுக்கு சிறந்த ஒரு முன்மாதிரி. இன அழிப்புக்களுக்குத் துணைபோகும் தலைவர்களும், துவேஷங்களைத் தூண்டும் தலைவர்களும், தம்மை நம்பிய மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தலைவர்களையும் பார்த்துப் பழகிப் போன எமக்கு இதுபோன்ற நற்குணமுள்ள தலைவர்கள் கண் குளிர்ச்சியை தருகிறார்கள். இப்படிப்பட்ட நல்லவர்களால் உலகம் ஒருநாள் அமைதிபெறும் என்ற நம்பிக்கையைத் தருகிறார்கள். இறைவன் அவர்களது நற் செயல்களை ஏற்று மேலும் அவனது நேரான வழியை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.

அண்மையில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் மற்றும் க்ரைஸ்ட்சேர்ச் தாக்குதல் என்பனவற்றை நோக்கும்போது இஸ்லாம், தீவிரவாதத்திற்கு எதிரான மதம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் நாள் வெகு தூரத்திலில்லை என்பதை உணர முடிகிறது.

படிப்படியாக ஸியோனிஸத் தீவிரவாதம் உலகில் வெளிப்படையாகவே தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.   இலுமினாட்டிகளின் முகத்திரை கிழிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தோல்விகளை மெதுவாகச் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் சதிமுயற்சிகளும் பெரும்பாலும் தோல்வியில் முடிவது மட்டுமன்றி அவை இஸ்லாத்தின் மீது பிற மதத்தவர்களை ஈர்க்கச் செய்வதைக் காண முடிகின்றது. சாந்தியும் சமாதானமும் தழைத்தோங்கி யுத்தமற்ற சுத்தமான காற்றை சுவாசிக்கும் நாள் வருமா…?
-Vidiveli

 

Leave A Reply

Your email address will not be published.