காஸா பள்­ளத்­தாக்கில் பதாஹ் இயக்க பேச்­சாளர் மீது தாக்­குதல்

0 477

காஸா பள்­ளத்­தாக்கில் பதாஹ் இயக்­கத்தின் பேச்­சாளர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை எதிர்­நிலை அமைப்­பான ஹமாஸ் கண்­டித்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை காஸாவில் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் அதீப் அபூ சயிப் என்ற பேச்­சாளர் தாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து. தனது உறுப்­பி­னரை கொல்­வ­தற்கு எடுக்கப்­பட்ட முயற்­சி­யா­கவும் இதற்கு ஹமாஸ் அமைப்பே காரணம் என பதாஹ் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஹமாஸ் பேச்­சாளர் கஹாலில் அல்-­ஹைய்யா வெளி­யிட்ட அறிக்­கையில் இத் தாக்­கு­தலைக் கண்­டித்­துள்­ள­தோடு, தாக்­கு­தலில் ஈடு­பட்­டோரை கண்­ட­றிந்து அவர்­களைத் தண்­டிக்க உள்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி­யுள்ளார்.

திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற தாக்­கு­த­லுக்கு ஹமாஸ் மீது குற்றம் சுமத்தும் அறிக்­கை­களை அவர் நிரா­க­ரித்தார்.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் பலஸ்­தீன பிர­தே­சத்தை ஆட்சி செய்­து­வரும் ஹமா­ஸுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­று­வரும் நிலையில் கடந்த வாரம் தொடக்கம் காஸா பள்­ளத்­தாக்கில் பதற்­ற­நிலை அதி­க­ரித்து வரு­கின்­றது.

முற்­று­கைக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் பிர­தே­சத்தில் குழப்ப நிலை­யினைத் தேற்­று­விப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மஹ்மூட் அப்பாஸ் தலை­மை­யி­லான பத்தாஹ் அமைப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு பின்­ன­ணி­யி­லி­ருந்து செயற்­ப­டு­வ­தாக ஹமாஸ் குற்றம் சாட்டி வரு­கின்­றது.

ஹமாஸ் மற்றும் பத்தாஹ் அமைப்­பி­ன­ரி­டையே இடம்­பெற்ற தெருச் சண்­டை­யினைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு காஸாவின் கட்­டுப்­பாட்டை ஹமாஸ் கைய­கப்­ப­டுத்­தி­ய­தி­லி­ருந்து இரு அமைப்­புக்­களும் எதிரும் புதி­ரு­மாக செயற்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.