கிண்­ணி­யாவில் கிறீஸ் மனிதன்?

0 771

கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த ஒரு மாத கால­மாக இடம் பெற்று வரும் இரவு நேர  திருட்டுச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் கிரீஸ் மனி­தர்­க­ளாக இருக்­கலாம் என்ற சந்­தேகம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக பொது மக்கள் அச்சம் தெரி­விக்­கின்­றனர். கடந்த ஒரு மாத கால­மாக பெரி­யாற்­று­முனை, கட்­டை­யாறு, மாலிந்­துறை, றஹ்­மா­னியா நகர் மற்றும் அடப்­பனார் வயல் ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள 25 ற்கும் மேற்­பட்ட வீடு­களில் ஓட்டைக் கழற்றி வீட்­டுக்குள் இந்த மர்ம மனி­தர்கள் இறங்­கி­யி­ருக்­கி­றர்கள். இது குறித்து  பொலிஸில் முறைப்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு வீட்­டுக்குள் இறங்கும் இந்த நபர்கள் பணத்தை மாத்­தி­ரமே எடுத்துச் செல்­வ­தா­கவும் சில இடங்­களில் ஓட்டைக் கழற்றி விட்டு, அருகில் உள்ள இன்­னு­மொரு வீட்­டுக்குச் சென்று அங்­கேயும் ஓட்டைக் கழற்றி விட்டுச் செல்­வ­தா­கவும் பொது மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

நேற்­று­முன்­தினம் இரவு மாத்­திரம் பெரி­யாற்­று­முனை  பிர­தே­சத்தில் உள்ள மூன்று  ஆசி­ரி­யர்­களின் வீடு­க­ளுக்குள் இறங்கி, அங்கு பதற்ற நிலை ஒன்றை ஏற்­ப­டுத்­தி­விட்டு தப்பிச் சென்­றி­ருக்­கி­றார்கள்.

இந்த விடயம் தொடர்ந்து ஒவ்­வொரு இரவும் நடை­பெற்று வரு­வதால் இவர்கள் திரு­டர்­க­ளாக இருக்க முடி­யாது என்றும் இவர்கள் பதற்­றத்­தையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்தி, சமூ­கத்தில் அமை­தியை சீர்­கு­லைக்­கின்ற கிரீஸ் மனி­தர்­க­ளா­கவும் இருக்­கலாம் என்ற சந்­தேகம் இப்­போது பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது .

இது குறித்து, கிண்­ணியா மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஏ.ஆர்.எம். பரீட் கருத்துத் தெரி­விக்­கையில்,

இந்த சம்­ப­வங்­களால் பிர­தே­சத்தில் ஓர் அச்­ச­மான சூழ்­நிலை ஒன்று உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இவற்றைத் கட்­டுப்­ப­டுத்­து­வது சம்­பந்­த­மாக பொலி­ஸா­ருடன் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி வரு­கின்றோம்.

இதன் பய­னாக, இன்­றி­லி­ருந்து பெரி­யாற்­று­முனை, மாலிந்­துறை மற்றும் கட்­டை­யாறு ஆகிய பிர­தே­சங்­களில்  இரவு 10.30 மணிக்குப் பின்னர் பொலிஸ் ரோந்து  நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு பொலிஸார் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

அத்­தோடு, பிர­தே­ச­வா­சி­களும் இந்த மர்ம நபர்­களைப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 2012 ஆம் ஆண்டு நோன்பு காலத்தில் இங்கு கிரீஸ் மனிதன் என்ற போர்­வையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பதற்­ற­மான சூழ்­நி­லையைப் போன்­ற­தொரு  அசா­தா­ரண நிலையை தோற்­று­விப்­ப­தற்­கான ஆரம்ப நிலையாக இது இருக்கலாம். ஏனெனில், இன்னும் சுமார் ஒரு மாத காலமே புனித நோன்புக்கு இருக்கின்ற படியாலும் அந்த மர்ம நபர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கின்ற போதும் இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.