ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?

0 797

ஹஜ் கடமை முஸ்­லிம்­களின் இறுதிக் கட­மை­யாகும். பொரு­ளா­தார வச­தி­களும் உடல் நலமும் உள்ள ஒவ்­வொரு முஸ்­லி­முக்கும் ஹஜ் கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் அனை­வரும் தமது வாழ்­நாளில் ஒரு தட­வை­யேனும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே வாழ்க்­கையை நகர்த்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இலங்­கையில் தற்­போது முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென்று தனி­யான ஓர் அமைச்சு இயங்­கி­வ­ரு­வதால் இவ்­வ­மைச்சு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஊடாக ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு வரு­டாந்தம் ஆயி­ரக்­க­ணக்­கானோர் விண்­ணப்­பித்­தாலும் குறிப்­பிட்ட ஒரு தொகை­யி­ன­ருக்கே ஹஜ் வாய்ப்பு கிட்­டு­கி­றது. சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு, இலங்­கைக்கு வழங்­கு­கின்ற ஹஜ் கோட்­டாவின் அடிப்­ப­டை­யி­லேயே ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு சவூதி ஹஜ் அமைச்­சினால் 3500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டுள்­ளது என்ற மகிழ்ச்­சி­யான செய்தி கிட்­டி­யுள்­ளது. இதற்­கான ஒப்­பந்­தத்தில் சவூதி ஹஜ் அமைச்­சரும் இலங்­கையின் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் நேற்று முன்­தினம் திட்­கட்­கி­ழமை கைச்­சாத்­திட்­டி­ருக்­கி­றார்கள்.

கடந்த வருடம் இலங்­கைக்கு 2800 ஹஜ் கோட்­டாவே வழங்­கப்­பட்­டது. இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3000 கோட்­டாவை வழங்­கு­வ­தற்கே சவூதி ஹஜ் அமைச்சு தீர்­மா­னித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. என்­றாலும் நேற்று முன்­தினம் சவூதி அரே­பியா ஜித்­தாவில் அமைச்சர் ஹலீ­முக்கும் சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யினை அடுத்து ஹஜ் கோட்டா 500 ஆல் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்­கான ஹஜ் கோட்டா அதி­க­ரிக்­கப்­பட்­டாலும் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­த­வர்­களில் கணி­ச­மானோர் தமது பய­ணத்தை உறுதி செய்­வதில் தயக்கம் காட்­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அண்­மையில் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் 3000 பேருக்கு தங்கள் பய­ணத்தை மீள கைய­ளிக்­கப்­படும் பதிவுக் கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்­யு­மாறு அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் 3000 பேரில் 600 க்கும் குறை­வா­ன­வர்­களே தங்கள் பய­ணத்தை உறுதி செய்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­துள்ள அனை­வ­ருக்கும் தங்கள் பய­ணங்­களை எதிர்­வரும் 28 ஆம் திக­திக்கு முன் உறுதி செய்­யு­மாறு கடி­தங்­களை அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு சுமார் 4000 பேருக்கு கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவர்­களில் எத்­தனை பேர் தங்கள் பய­ணங்­களை உறுதி செய்யப் போகி­றார்கள் என்று பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும்.

யாத்­தி­ரிகர்கள் பய­ணத்தை உறுதி செய்­வதில் இவ்­வாறு தயக்கம் காட்­டு­வ­தற்­கான உண்­மை­யான காரணம் என்ன என்­பதை திணைக்­களம் கண்­ட­றிய வேண்டும். திணைக்­களம் தற்­போது யாத்­தி­ரி­கர்­களைத் தெரிவு செய்யும் முறை­மையில் ஏதேனும் குறை­பா­டுகள் உள்­ள­னவா என்றும் மீள்பரிசீலிக்க வேண்டும்.

ஹஜ் செய்­வ­தற்­கென ஆர்­வத்­துடன் விண்­ணப்­பத்த பல்­லா­யிரக் கணக்­கா­னோரில் மிகச் சிலரே இவ்­வ­ரு­டத்­திற்­கான தமது பய­ணத்தை இது­வரை உறுதி செய்­தி­ருக்­கார்கள் எனில் இதன் பின்­ன­ணியில் ஏதே­னு­மொரு தீர்க்­க­மான காரணம் இருக்க வேண்டும். முக­வர்கள் மீதான நம்­பிக்­கை­யீனம், 25 ஆயிரம் ரூபாவை வைப்­பி­லி­டு­வது தொடர்­பான தயக்கம், இறுதி நேரத்தில் பய­ணத்­துக்­கான வாய்ப்பு மறுக்­கப்­ப­டலாம் எனும் அச்சம், திணைக்­க­ளத்­திற்கு நேரில் சென்று பய­ணத்தை உறுதி செய்ய வேண்டும் எனும் நிபந்­தனை,  கோட்டா பகிர்வில் உள்ள அர­சியல் தலை­யீ­டுகள் போன்­றன இதற்­கான பின்­னணிக் கார­ணங்­க­ளாக இருக்கக் கூடும். இது தொடர்பில் திணைக்­களம் முறை­யான ஆய்­வொன்றைச் செய்யக் கட­மைப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளினால் போலி­யாக விண்­ணப்­பங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது. முக­வர்­களின் பணத்­தாசை பிடித்த இவ்­வா­றான செயற்­பா­டுகள் தவிர்க்­கப்­பட வேண்டும். இலங்­கையில் ஹஜ் யாத்­தி­ரையை ஒழுங்­குக்குள் கொண்­டு­வ­ரு­வதில் முக­வர்­களே பாரிய தடை­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள் என்ற கசப்­பான உண்­மை­யையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

எனவேதான், ஹஜ் கோட்டாக்கள் அதிகரிக்கப்படுவது ஒருபுறமிருக்க, விண்ணப்பித்த யாத்திரிகர்களில் ஆர்வமுடை யோரை கண்டறியவும் பொருத்தமானவர்களுக்கு வாய்ப்பளிக்க வும் கூடிய முறை ஒன்று தொடர்பில் உடனடியாக முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஹஜ் குழுவும் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும். நாம் மேற்சொன்னவாறு மக்களின் தயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிய முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.