தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: சிறுவர்களின் உளவியல் பாதிப்புகள் குறித்து கவனம்

காத்திரமான தீர்மானம் எடுக்கப்படும் என்கிறார் கல்வியமைச்சர்

0 776

சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் உள­வியல் தாக்­கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்­பாக காத்­தி­ர­மான தீர்­மா­ன­மொன்று எடுப்­பது அத்­தி­யா­வ­சி­ய­மாகும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்ல இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடை­பெற்ற புல­மைப்­ப­ரிசில் பரீட்சை தொடர்­பான ஆய்­வுக்­குழுக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இருந்த போதிலும் குறைந்த வரு­மானம் பெறும் சிறார்­க­ளுக்கு புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாட­சா­லை­க­ளுக்கு அனு­மதி வழங்கல் ஆகிய விட­யங்­களில் உரிய கவனம் செலுத்­தியே இத் தீர்­மானம் எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். இந்த ஆய்வுக் குழுக்­கூட்­டத்தில் கல்வி அமைச்சின் செய­லாளர், தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள், சிறு­வர்கள் தொடர்­பான விசேட மருத்­துவ நிபு­ணர்கள்,  பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள், பரீட்சை ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.