இனவாதத்துக்கு பலியான சதகத்துல்லாஹ் மௌலவி நீதி நிலைநாட்டப்படுமா?

0 1,569

முஸ்­லிம்கள் பஸ் வண்­டிக்குள் இருக்­கி­றார்­களா அவர்­களைக் கொல்ல வேண்டும் என்று பொல்­லு­க­ளு­டனும், இரும்­புக்­கம்­பி­க­ளு­டனும் பஸ்­ஸுக்குள் அன்று ஏறி­ய­வர்கள்  சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை தலையில் பலம்­கொண்ட மட்டும் தாக்­கி­னார்கள்.

கண்டி, திகன பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள்  பர­விக்­கொண்­டி­ருந்த கால­மது. கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி அன்று இன­வா­தி­களால் தாக்­கப்­பட்ட சத­கத்­துல்லாஹ் மெள­லவி 9 மாதங்கள் 19 நாட்­களின்  பின்பு வபாத்­தானர். இன­வா­தி­களின் இலக்கு நிறை­வே­றி­யது.

தாக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து அவர் வபாத்­தாகும் வரை உணர்­வற்று வைத்­தி­ய­சாலை கட்­டில்­க­ளிலும், வீட்­டிலும் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை உயி­ருக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்தார். டிசம்பர் 26 ஆம் திகதி இரவு 11 மணிக்கு கண்டி வைத்­திய சாலையில் உயிர்­நீத்தார்.

எனது வாப்­பா­வினால் பேச முடி­யா­தி­ருந்­தாலும், அவர் மோச­மாகத் தாக்­கப்­பட்டு உணர்­வுகள் இழந்­தி­ருந்­தாலும் அடிக்­கடி ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்று கூறிக்­கொண்­டி­ருந்தார். தொழ­வேண்டும் என்று கூறிக்­கொண்­டி­ருந்தார் என்று அவ­ரது மகள் டாக்டர் பாத்­திமா சக்­கூரா எம்­மிடம்  தெரி­வித்­த­தி­லி­ருந்து இஸ்­லாத்தின் மீது அவ­ருக்கு  இருந்த பற்று நிரூ­ப­ண­மா­கி­றது

கடந்த டிசம்பர் மாதம் 26 ஆந் திகதி அன்னார் வபாத்­தா­னதும் கண்டி ஹீரஸ்­ஸ­க­ல­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்கு உற­வி­னர்கள், நலன்­வி­ரும்­பிகள், நண்­பர்கள், உல­மாக்கள் என்று படை­யெ­டுத்­தனர். அடுத்த இரு தினங்­க­ளிலும் ஊட­கங்­களில் அனு­தாபச் செய்­திகள் பத்திரிகைகளின் பக்­கங்­களை நிறைத்­தன.

அவர் தாக்­கப்­பட்டு ஒன்­பது மாதங்­க­ளுக்கும் மேலாக படுத்­த­ப­டுக்­கையாய் சிகிச்சை பெற்று வந்த காலப்­ப­கு­தியில் அவர் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­காத முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், சிவில் சமூக அமைப்­புகள் அனு­தாப செய்­தி­வெளியிடுவதில் மாத்திரம் தீவிரம் காட்டின.

அவ­ருக்கு நடந்­தது என்ன?

சத­கத்­துல்லாஹ் மெள­லவி கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணிக்கு கண்டி ஹீரஸ்­ஸ­க­ல­யி­லுள்ள தனது வீட்­டி­லி­ருந்து அக்­கு­ற­ணைக்கு ஒரு தேவையின் நிமித்தம் புறப்­பட்டுச் சென்றார்

மோட்டார் சைக்­கிளில் புறப்­பட்ட அவர் மோட்டார் சைக்­கிளை கண்டி லைன் பள்­ளி­வா­சலில் நிறுத்­தி­விட்டு கண்­டி­யி­லி­ருந்து அக்­கு­ற­ணைக்கு பஸ் வண்­டி­யிலே சென்றார்.

அக்­கு­ற­ணையில் தனது தேவை­களை நிறை­வேற்­றி­விட்டு கண்­டிக்குத் திரும்­பு­வ­தற்­காக அக்­கு­றணை 6ஆம் மைல்­கல்லில் பஸ்ஸில் ஏறி­யுள்ளார். அவர் பஸ் ஏறி பத்து நிமி­டங்­களில் பஸ் அம்­பத்­தென்ன என்ற இடத்தில் அடைந்­ததும் இச்­சம்­பவம் நடத்­தி­ருக்­கி­றது. அப்­போது நேரம் மு.ப. 11 மணி.

அந்­நே­ரத்தில் அம்­பத்­தென்ன பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்கள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தன. பள்­ளி­வா­சல்­க­ளையும் , முஸ்­லிம்­களின் வீடு­க­ளையும் தாக்­கு­வ­தற்­காக அப்­ப­கு­தியைச் சேர்ந்த  பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைக்­குண்­டுடன் சென்­ற­போது அக்­குண்டு தானாக வெடித்­ததால் பலி­யா­கி­யி­ருந்தான். அப்­போது முஸ்­லிம்கள் குண்­டு­வீசி இளை­ஞனைக் கொன்­ற­தாக செய்தி பரப்­பப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் பெரும்­பான்மை இன­வா­திகள் வாக­னங்ளை  நிறுத்தி தாக்­கு­தல்­களை நடத்­திக்­கொண்­டி­ருந்­தனர். அப்­போது இன­வாத கும்பல் சத­கத்­துல்லாஹ் மெள­லவி பய­ணித்த பஸ்­வண்­டியில் ஏறி அவரைத் தாக்­கி­யுள்­ளது.

அன்று என்ன நடந்­தது என சத­கத்­துல்லாஹ் மௌலவி தாக்­கப்­பட்ட பின்பு  அவ­ருக்கு உத­வி­யாக இருந்த முருத்­த­லா­வையைச் சேர்ந்த  மொஹமட் ஐயூப் (57) விளக்­கினார்.

பஸ் வண்டி அநு­ரா­த­புரம் இ.போ.ச டிப்­போ­வுக்குச் சொந்­த­மா­ன­தாகும். நானும் அந்த பஸ்­ஸிலே பய­ண­மானேன். சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை எனக்கு 20 வரு­டங்­க­ளாகத் தெரியும்.  அம்­பத்­தென்ன என்ற இடத்தில் பஸ்­ஸுக்குள் ஏறிய நால்வர் முஸ்­லிம்கள் இருக்­கி­றார்­களா ? அவர்­களைக் கொல்ல வேண்டும் என்­றார்கள்.

அப்­படி ஒரு­வ­ரு­மில்லை என்று பஸ்ஸில் பய­ணித்­த­வர்கள் கூறி­னார்கள். அப்­போது தலையில் தொப்­பி­யு­டனே சத­கத்­துல்லாஹ் மெள­லவி இருந்தார். அவரை இனம் கண்டு பொல்­லு­களால் தலையில் தாக்­கி­னார்கள். அவர் மயக்­க­முற்று அமர்ந்­தி­ருந்த ஆச­னத்­தி­லி­ருந்தும் கீழே சரிந்தார். தலை வெடித்­தி­ருந்­தது. இரத்தம் வேக­மாக வெளி­யே­றி­யது.

பஸ் நடத்­துநர் சாரம் ஒன்­றினைத் தந்தார். சாரத்­தினால் நான் இரத்­தத்தைத் துடைத்தேன். பஸ் வண்­டியை சாரதி பொலிஸ் நிலையம் கொண்டு செல்­ல­வில்லை. கண்டி நக­ரிலே பஸ்­சா­ரதி எங்­களை இறக்கி விட்டார். நான் சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை கண்டி லைன் பள்­ளி­வா­சலில் ஒப்­ப­டைத்து விட்டு திரும்­பினேன். அங்­கி­ருந்து அவர் ஹீரஸ்­ஸ­க­ல­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

பின்பு அவரின் உற­வினர் ஒரு­வரை நான் தொடர்பு கொண்டபோது அவர்­வைத்­திய சாலைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது என்றார்.

சமூ­கத்தின் மெளனம்

ஆளு­மைகள் நிறைந்த சமூ­கத்தின் விடி­ய­லுக்காய் பணிகள் புரிந்த ஓர் புத்­தி­ஜீ­வி­யான சத­கத்­துல்லாஹ் மௌலவி குண்­டர்­களால், இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு 9 மாதங்­க­ளுக்கும் மேலாக குன்­று­யி­ராகக் கிடந்து உயிர்­து­றந்தார். இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் ஏன் சமூகம் மௌனம் காத்­தது என்­ப­துதான் புதி­ராக இருக்கி­றது.

மாவ­னெல்லை சம்­ப­வங்­க­ளி­னை­ய­டுத்து விரைந்து செயற்­பட்­டுள்ள உள­வுப்­பி­ரிவும் பாது­காப்புப் பிரிவும் சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியின் கொலைக்­குப்­பின்பும் மௌனம் காப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

சர்­வ­மத தலை­வர்­களின் அமைப்பில்  ஏனைய மதத்தலைவர்களுடன் ஒன்­றாக அமர்ந்து இன ஐக்­கி­யத்­துக்­காக தனது காலத்தைச் செல­விட்ட சத­கத்­துல்லாஹ் மௌலவி கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள், இந்தக் கொலையைச் செய்­த­வர்கள் இனம் காணப்­பட்டு சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­பட வேண்டும்.

அர­சுக்குச் சொந்­த­மான இ.போ.ச பஸ்­வண்­டி­யினுள் வைத்தே அவர் தாக்கப் பட்­டி­ருக்­கிறார். இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றால் பஸ் சாரதி பஸ்ஸை நேர­டி­யாக பொலிஸ்­நி­லை­யத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­க­வேண்டும். கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலையம் தாக்­குதல் நடாத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்தும் இரண்டு மூன்று கிலோ மீற்­றர்­க­ளிலே அமைந்­துள்­ளது. சாரதி கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலை­யத்­தையும் கடந்து நேராக கண்­டிக்கே பஸ்ஸை கொண்டு சென்று கண்­டியில் சக­த­கத்­துல்லாஹ் மௌல­வியை இறக்­கி­விட்­டி­ருக்­கிறார்.

பொலிஸில் வாக்­கு­மூலம்

சம்­பவம் நடந்து மூன்று தினங்­களின் பின்பே கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலை­யத்­துக்கு சம்­பந்­தப்­பட்ட பஸ்­வண்டி கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. சத­கத்­துல்லாஹ் மௌலவி தாக்­கப்­பட்ட பின்பு அவ­ருக்கு உத­வி­யாக இருந்த மொஹமட் ஐயூபும் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். பொலிஸார் அவ­ரது வாக்கு மூலத்தைப் பதிவு செய்­துள்­ளனர். பஸ் வண்­டியின் சாரதி மற்றும் நடத்­து­நரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டன.

வாக்­கு­மூ­ல­ம­ளித்த மொஹமட் ஐயூப் இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலை­யத்­துக்கு பஸ்­வண்டி கொண்டு வரப்­பட்­டி­ருந்த போதும் தாக்­குதல் இடம்­பெற்­ற­போது பஸ்­வண்­டியில் இருந்த சி.சி.ரி.வி கமரா அகற்­றப்­பட்­டி­ருந்­தது. அன்று இருந்த சி.சி.ரி.வி கமரா கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தபோது அகற்றப்பட்டிருந்தது என்றார்.

டாக்டர் பாத்­திமா சக்­கூரா

டாக்டர் பாத்­திமா சக்­கூரா சத­கத்­துல்லாஹ் மௌல­வியின் மகள். அவர் ஈரான் நாட்டின் தலை­நகர் தெஹ்­ரானின் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் டாக்­ட­ராகக் கட­மை­யாற்­று­கிறார். அவர் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘எமது தந்­தையின் இழப்பு எம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்­டது. அவர் எப்­போதும் சமூ­கத்­துக்­கா­கவும், சம­யத்­துக்­கா­கவும் பாடு­பட்­டவர். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வி­னையும் நிலை­நாட்­டு­வதில் மும்­மு­ர­மாகச் செயற்­பட்டார்.

எது­வித குற்­றமும் செய்­யாத அப்­பா­வி­யான எனது தந்தை இன­வா­தி­களால் கொலை செய்­யப்­பட்­டு­விட்டார். 9 மாதங்­க­ளாக அவர் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருந்தார். இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம் பெறா­தி­ருப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­டங்­களை வகுத்துச் செயற்­ப­ட­வேண்டும்.

குற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு சட்­டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.

எனது தந்­தையின் நினை­வாக சமூக ஆர்­வ­லர்­களும், சிவில் அமைப்­பு­களும் ஒன்­றி­ணைந்து சமூ­கத்­துக்­காக ஏதா­வது ஒன்­றினைச் செய்ய வேண்டும். எனது தந்தை வாழ்ந்த ஹீரஸ்­ஸ­கல பகு­தியில் சுமார் 210 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கின்­றன. சுமார் 800 முஸ்­லிம்கள் இருக்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்­கென்று ஓர் மைய­வாடி இல்லை. ஜனா­ஸாக்­களை கண்­டி–­கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டிக்கே எடுத்துச் செல்ல வேண்­டி­யுள்­ளது. எனவே எனது தந்­தையின் நினை­வாக இப்­ப­கு­தியில் ஓர் மைய­வா­டியை அமைக்க ஏற்­பா­டுகள் செய்­வது நல்­ல­தென நினைக்­கிறேன்.

எனது தந்­தையின் மருந்து செல­வு­க­ளுக்­காக 2 மில்­லியன் ரூபா செல­வா­கி­யுள்­ளது. தந்தை வைத்­தி­ய­சாலை அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றார். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­யிலும் தனியார் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் நாம் அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்தோம்.

அவர் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருந்த நிலை­யிலும் ‘பாங்கு சத்தம் கேட்­கி­றது. தொழ வேண்டும்’ என்றே கூறிக்­கொண்­டி­ருந்தார். அவ­ருக்கு இரத்த அழுத்தம் அதி­க­ரித்­ததால் தலையில் ஒரு சத்­தி­ர­சி­கிச்­சையும் மேற்­கொள்­ளப்­பட்­டது. அவ­ரது இறுதி நாட்­களில் மிகவும் கஷ்ட்­டப்­பட்டார் என்றார்.

மகன் சதீக் அலாம்

சத­கத்­துல்லாஹ் மௌல­வியின் மகன் சதீக் அலாம் கணினி பொறி­யி­ய­லாளர். அவர் தனது தந்தை பற்றி தெரி­விக்­கையில், தாக்­கு­த­லுக்­குள்­ளாகி சிகிச்சை பெற்று வந்த காலப்­ப­கு­தியில் தந்­தைக்கு அர­சாங்­கத்­தினால் நஷ்ட ஈடாக 2 இலட்சம் ரூபாவே வழங்­கப்­பட்­டது. அர­சி­யல்­வா­திகள் எந்த உத­வியும் செய்­ய­வில்லை. தனி­ந­பர்­களும், தந்­தையின் பழைய மாண­வர்­களும் உத­விகள் செய்­தார்கள்.

எனது தந்­தைக்கு ஏற்­பட்­டது போன்ற சம்­ப­வங்கள் எமது நாட்டில் இனி ஒரு­போதும் நடை­பெ­றக்­கூ­டாது என்று நான் ஒரு வேண்­டுகோள் விடுக்­கிறேன். இவ்­வா­றான இன­வாத செயல்­களில், வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு அர­சாங்கம் அதி­க­பட்ச தண்­டனை வழங்க வேண்டும்.

தந்தை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த காலத்தில் வைத்­தி­யர்­களும், தாதி­மாரும் ஏனைய ஊழி­யர்­களும் பல உத­வி­களைச் செய்­தார்கள். அவர்கள் நன்­றிக்கு உரி­ய­வர்­க­ளாவர்.

சமூ­கத்­துக்கும், சம­யத்­துக்­கு­மென்ற தனது வாழ்­நாட்­களை அர்ப்­ப­ணித்த தந்­தையின் நினை­வாக சமூகம் ஏதேனும் ஒரு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்க வேண்டும். அது புலமைப் பரிசில் நிதி­ய­மாக இருக்­கலாம் அல்­லது பாட­சாலைக் கட்­ட­ட­மா­கக்­கூட இருக்­கலாம் என்றார்.

சந்­தே­கத்தின் பேரில் ஒருவர் கைது

சத­கத்­துல்லாஹ் மௌலவி தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது சகோ­தரர் ஏ.சி.எம். அமா­னுல்லாஹ் தெரி­வித்தார்.

இந்த தாக்­குதல் சம்­பவம் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அம்­பத்­தென்­னயில் இடம்­பெற்­றுள்­ளதால் கட்­டு­கஸ்­தோட்டை பொலி­ஸாரே விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸார், சகோ­தரர் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் ஒரு­வரைக் கைது­செய்து நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் சந்­தேக நபர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கடந்த மாதம் கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்துள்ளார்கள் என அமானுல்லாஹ் தெரிவித்தார்.

நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

சதகத்துல்லாஹ் மௌலவி இனவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதனாலே எம்மை விட்டும் பிரிந்தார். இதுவோர் கொலையாகும். சதகத்துல்லாஹ் மௌலவிக்கு நேர்ந்த கொடுமையை சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்கள் ஏன் தமிழ் ஊடகங்கள்  கூட வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லை.

அவர் ஒரு மதகுரு, இதேவேளை இந்நாட்டில் பெரும்பான்மை இன, மதகுருவொருவர் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் நாடெங்கும் வன்செயல்கள் பரவியிருக்கும். அந்த வகையில் முஸ்லிம்கள் பொறுமை காத்திருக்கிறார்கள். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

இதனை முஸ்லிம் அரசியல் தலை மைகள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். பாராளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப வேண்டும். எமது அரசியல் தலைமைகள் அனுதாபச் செய்திகளுடன் மாத்திரம் அடங்கிப் போகக் கூடாது. சதகத்துல்லாஹ் மௌலவியின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

சதகத்துல்லாஹ் மௌலவிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வரலாற்றில் கறைபடிந்த சம்பவமாகும். உயிரிழப்புக்குப் பின்பு நஷ்டஈடுகள் வழங்குவதினால் மாத்திரம் வன்செயல் களுக்குத் தீர்வுகாண முடியாது என்பதை அரசு உணர்ந்து மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வுக்கான அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட வேண்டும். சதகதுல்லாஹ் மௌலவிக்காகப் பிரார்த்திப்போம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.