சுதந்திர கட்சிக்கு மைத்திரி இழைத்த துரோகத்தின் விளைவே தாமரை மொட்டு

பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம சுட்டிக்காட்டு

0 622

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான  ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யுடன்  எதிர்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ கூட்­ட­ணி­ய­மைத்துக் கொள்­வது மீண்டும் இரண்­டா­வது அர­சியல் நெருக்­க­டி­யினை ஏற்­ப­டுத்தும். ஜனா­தி­பதி  2015 மற்றும் 2018ஆம் ஆண்­டு­களில்  அர­சியல் ரீதியில்  மேற்­கொண்ட தீர்­மா­னங்­களை மஹிந்த ராஜ­பக் ஷ  நினை­வு­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  குமாரவெல்­கம  சுட்­டிக்­காட்­டினார்.

பொது­ஜன பெர­மு­னவும் ,ஸ்ரீ லங்கா சுதந்­திர  கட்­சியும்  புதிய கூட்­ட­ணி­ய­மைத்துக்  கொள்­ள­வுள்­ளமை  தொடர்பில் வின­விய போதே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஸ்ரீ  லங்கா சுதந்­திர  கட்சி இன்று பாரிய  நெருக்­க­டி­க­ளுக்குள் உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. முறை­யான தலை­மைத்­துவம் ஒன்று  காணப்­ப­டா­மையின்  கார­ண­மா­கவே  இந்­நிலை இன்று தோற்றம் பெற்­றுள்­ளது.   ஸ்ரீ லங்கா சுதந்­திர  கட்­சிக்கு 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  இழைத்த துரோ­கமே இன்று பொது ஜன பெர­முன  என்ற புதிய கட்சி தோற்றம் பெற   வழி­யேற்­ப­டுத்­தி­யது.

தற்­போது  பொது­ஜன பெர­மு­னவும்   ஸ்ரீ லங்கா சுதந்­திர  கட்­சி­யும் புதிய  கூட்­ட­மைப்­பினை உரு­வாக்கி  அடுத்த  கட்ட அர­சி­யலை முறை­யாக முன்­னெ­டுத்து  செல்ல தீர்­மா­னித்­துள்­ளன.  அவ்­வாறு என்றால்  இது­வரை  காலமும் முறை­யாக அர­சி­யலை முன்­னெ­டுக்­க­வில்லை என்று தானே அர்த்­தப்­படும்.

மஹிந்த ராஜ­பக் ஷ  இன்று  எதிர்­கட்சி  தலை­வ­ராக  தெரிவு  செய்­யப்­பட்­டுள்ளார்.  பாரா­ளு­மன்­றத்­தில்­பெ­ரும்­பான்மை பலம் அர­சாங்­கத்­திற்கு  பிறகு   மஹிந்­த­விற்கே  காணப்­ப­டு­கின்­றது.பொதுத்­தேர்தல்  மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் ஆகி­யன இடம்­பெறும்  வரையில்  மஹிந்த ராஜ­பக் ஷ  எதிர்­கட்சி தலை­வ­ராக  செயற்­ப­டு­வ­தற்கு எவ­ரு­டனும் கூட்­ட­ணி­ய­மைக்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. தற்­போது  அர­சி­யலில் செயற்­ப­டு­வதை போன்று தனித்து செயற்­பட்­டாலே எவ்­வித  பிரச்­சி­னை­களும் இன்றி முறை­யாக பாரா­ளு­மன்­றத்தில்  பொறுப்பு வாய்ந்த எதிர்­கட்­சி­யாக செயற்­ப­டலாம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் மீண்டும் கூட்­ட­ணி­ய­மைப்­பது பார­தூ­ர­மா­னது.  இவ­ருடன் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக  கடந்த வருடம் ஒக்­டோபர்  மாதம் 26ஆம்  திகதி கூட்­ட­ணி­ய­மைத்­ததன் விளை­வினை இன்றும் நாடு  எதிர்­கொண்டு  வரு­கின்­றது. புதி­தாக அமைக்­கப்­பட்ட அர­சாங்­கத்­திலும் இதன்  தாக்கம் செல்­வாக்கு  செலுத்­து­கின்­றது. இதனால் மக்­க­ளுக்கு  முழு­மை­யான சேவை­யினை வழங்க முடி­யாத நிலை  ஏற்­பட்­டுள்­ளது.

தேர்­தலின் வெற்­றி­யினை  கருத்திற் கொண்டே தற்­போது  இந்த புதிய கூட்­டணி  அமைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மஹிந்த ராஜ­பக் ஷ   இடம் பெற்று முடிந்த உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றதை போன்று இனி­வரும் தேர்­தல்­க­ளிலும் தனித்தே போட்­டி­யிட வேண்டும். மக்கள்  செல்­வாக்கு   இல்­லாமல் இருப்­ப­வர்­களே கூட்­ட­ணி­ய­மைத்துக்  கொள்­வார்கள்.  ஆகவே  இவ்­வி­ட­யத்தில்  மஹிந்த ராஜ­பக் ஷ  2015 மற்றும்  2018ஆம் ஆண்டு தேசிய அர­சாங்­கத்தில்  இடம் பெற்ற சம்­ப­வங்­க­ளையும் நினை­வுப்­ப­டுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டு  தரப்­பி­னரும்  புதிய கூட்­டணி  ஒன்று அமைக்கும் பொழுது கருத்து முரண்­பா­டுகள்  தோற்றம் பெறு­வது இயல்பு. பொது­ஜன பெரமுனயினர் ஒருபோதும் தங்களின் தலைமைத்துவத்தினையும்,  கட்சியின் சின்னத்தினையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.   இதனால் வீண் முரண்பாடுகளே இடம் பெறும் ஆகவே தேர்தல்கள் இடம் பெறும் வரையில் முழுமையாக இரண்டு  தரப்பினரும் மக்களுக்கு சேவையாற்றினால் மக்களே  தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள்.என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.