முஸ்லிம் இளைஞர்களை மஸ்ஜித்கள் கண்காணித்து வழிநடத்த வேண்டும்

உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி

0 597

முஸ்லிம் சமூ­கத்தின் மீது பெரும்­பான்மை மக்கள் மீண்டும் குரோதம் கொள்ளும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்ள இந்த சந்­தர்ப்­பத்தில் நாடெங்­கு­முள்ள மஸ்­ஜி­த்கள் இளை­ஞர்­களைக் கண்­கா­ணித்து வழி­ந­டாத்­து­வதில் மும்­மு­ர­மாகச் செயற்­பட வேண்டும். அகில இலங்கை  ஜம்­இய்­யத்துல் உலமா சபை மஸ்­ஜி­து­க­ளுக்கு ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள செயற்­றிட்­டங்கள் மேலும் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

மாவ­னெல்லை உட்­பட சில  பகு­தி­களில் புத்­தர்­சிலை சேத­மாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் இளை­ஞர்கள் முக­நூல்­களை அமை­திக்குப் பங்கம் விளை­விக்கும் வகையில் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. முக­நூல்கள் நல்ல விட­யங்­க­ளுக்கு மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்­களின் செயல்கள் எப்­போதும் நல்­லி­ணக்­கத்­தையும்  சக­வாழ்­வையும் ஊக்­கு­விப்­ப­தாக அமை­ய­வேண்டும். உலமா சபை முஸ்லிம்  சமூ­கத்தைக் குறிப்­பாக இளை­ஞர்­களை போதைப்­பொருள்  பாவ­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­கா­கவும்,  தீவி­ர­வா­தத்திலிருந்தும் விடு­விப்­ப­தற்­கா­கவும் வேலைத்­திட்­ட­மொன்­றினைத் தயா­ரித்து  அமுல்­ப­டுத்தி வரு­கி­றது.

மஸ்­ஜி­துகள் ஊடாக மேற்­கொள்­ளப்­படும் தேசிய வலை­ய­மைப்புத் திட்­டத்தின் மூலம் இந்த வரு­டத்தில் மாவட்ட ரீதியில் 48 நிகழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள், உல­மாக்கள் மற்றும் துறைசார் நிபு­ணர்கள் மூலம் இத்­திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்கள் சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள் ஏனைய சம­யங்­க­ளையும், இனங்­க­ளையும் கௌர­வப்­ப­டுத்­து­ப­வர்கள் என்­பதை வர­லாறு நெடு­கிலும் நாம் நிரூ­பித்து வந்­துள்ளோம். என்­றாலும் ஒரு­சில இளை­ஞர்­களால் தூர­நோக்­கின்றி மேற்­கொள்­ளப்­படும் செயல்கள் நாட்டில் இன­வா­தத்­துக்குத் தூப­மி­டு­வ­தாக அமைந்­து­விடும். இதன் விளைவால் ஏற்­படும் விப­ரீ­தங்­களை சமூ­கமே அனு­ப­விக்க வேண்­டி­யேற்­படும்.

ஏனைய சமூ­கங்­க­ளுடன் சக­வாழ்வைப் பேண­வேண்டும் என்­பதில் உல­மா­சபை உறு­தி­யாக இருக்­கி­றது. புனித குர்­ஆனின் போத­னைகள் மீது பெரும்­பான்மைச் சமூகம் சந்­தேகம் கொண்ட சந்­தர்ப்­பங்­களில் அச்­ச­மூ­கத்­திற்கு தெளி­வுகள் வழங்கி அவற்றைத் தீர்த்­தி­ருக்­கி­றது.  அனர்த்­தங்கள் இடம் பெற்ற சந்­தர்ப்­பங்­களில் ஏனைய சமூ­கத்­தி­ன­ருக்கு உத­விக்­கரம் நீட்­டி­யுள்­ளது.

பெரு­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் வாழும் நாம் அன்பால், அறிவால், நிதா­ன­மாக எமது பிரச்­சி­னை­களை அணு­க­வேண்டும். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் உத­வி­களைப் பரிமாற்றிக்கொள்ளவேண்டும்.

மாவனெல்லை உட்பட சில இடங்களில் புத்தர்சிலைகள் சிதைக்கப்பட்டமையை உலமாசபை வன்மையாகக் கண்டிக்கிறது.  இச்சந்தர்ப்பத்தில் உலமாக்களும், புத்திஜீவிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் இளைஞர்களை வழிநடத்துவதற்கு தாமதமின்றி ஒன்றுபட வேண்டும் என்றார்.
-Vidvelli

Leave A Reply

Your email address will not be published.