ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு? முஸ்லிம்கள் துணை போகலாமா?

ஏ.எல்.எம். சத்தார்

0 857

ஏ.எல்.எம். சத்தார்

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்கி அவரை விடு­விப்­பது குறித்த விட­யமே இப்­போது நாட்டில் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது.

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போனமை குறித்த வழக்கு விசா­ரணை ஹோமா­கம நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஞான­சார தேரர் நீதி­மன்ற வள­வுக்குள் பிர­வே­சித்து நீதி­ப­தி­யையும் மன்­றத்­தையும் அவ­ம­தித்த வழக்குத் தீர்ப்பிற்கமையவே இவர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கிறார்.

இதன்­பேரில் நான்கு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு 19 வரு­டங்கள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து அதனை ஆறு வரு­டங்களில் அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­தண்­ட­னையை ஞான­சார தேரர் வெலிக்­கடை சிறைச்­சா­லையில் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.

இந்­நி­லை­யிலே ஞான­சாரர் சுக­வீ­ன­முற்று சிறைக்­கூட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளதைக் கேள்­வி­யுற்ற முஸ்­லிம்­களின் குழு­வொன்று அவரை சுகம் விசா­ரிக்கச் சென்­றுள்­ளது. இக்­கு­ழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பிர­தி­நி­திகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் முக்­கி­யஸ்­தர், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி உள்­ளிட்ட பிர­தி­நி­தி அடங்­கு­கின்­றனர். தேரரைப் பார்­வை­யிட்டு வெளியே வந்த இக்­கு­ழு­வி­னரைச் சந்­தித்த ஊட­க­வி­ய­லாளர் வின­வி­ய­போது அஸாத் சாலி உள்­ளிட்டோர் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். இத்­த­க­வல்கள் ஊட­கங்­க­ளிலும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­கி­யி­ருந்­தன. இவை சமூ­கத்தில், குறிப்­பாக முஸ்­லிம்கள் மத்­தி­யிலே பெரும் சலசலப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

பெரும்­பாலும் பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் குறிப்­பாக தேரர்கள் மத்­தி­யிலும் ஞான­சாரதேரரின் விடு­த­லைக்­காக மேற்­படி முஸ்லிம் சமூக அமைப்­பு­களும் பரிந்­துரை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவே பர­வ­லாக நம்­பிக்கை வெளி­யிட்டு வரு­வதை அறிய முடி­கி­றது. ஆனால் சம்­பந்­தப்­பட்ட தரப்போ ஞான­சா­­ரரின் உடல் நலன் விசா­ரிக்­கவே நாம் சிறைச்­சாலை வைத்­தி­யப்­பி­ரி­வுக்குச் சென்று வந்­தோ­மே­யன்றி அவ­ரது விடு­தலை குறித்து எதுவும் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வில்லை என்றும் தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் அஸாத் சாலி ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் குறிப்­பிட்­டுள்ள கருத்­துக்கள் பல்­வே­றான சந்­தே­கங்­களைக் கிளப்­பி­யுள்­ள­மையும் மறுப்­ப­தற்­கில்லை.

கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் இடையே நில­விய கசப்­பு­ணர்வைப் போக்­கிக்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் அமைப்­புகள் பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ருடன் 5– 6 சுற்று பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வந்ததாகவும் அதன்போது பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கண்­டு­கொண்டு வந்த வேளை­யி­லேயே ஞான­சார தேரர் சிறை­வாசம் அனு­ப­விக்க நேரிட்­டதாகவும். அதனால் சுமுக பேச்­சு­வார்த்தை தடைப்­பட்டுப் போன­தாக அஸாத் சாலி அதன்­போது வெளி­யிட்­டி­ருந்தார்.

மேலும் இப்­பேச்­சு­வார்த்­தை­களின் விளை­வா­கவே காலி கிந்­தோட்டை பிரச்­சினை மேலும் பர­வாது ஞான­சார தேரர் தலை­யிட்­ட­தா­கவும் குறிப்­பிட்ட அவர் மியன்மார் அக­தி­க­ளுக்­கெ­தி­ராக கடும்­போக்­காளர் கடு­மை­யாக நடந்து கொண்­ட­போதும் ஞான­சார தேரர் அத­னையும் தீர்த்து வைப்­பதில் பங்­க­ளிப்புச் செய்தார் என்றும் திகன சம்­ப­வத்தின் போதும் மரண வீட்­டுக்கு ஞான­சார தேரர் சென்று சிங்­கள சமூ­கத்தை அமை­திப்­ப­டுத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

எங்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட 5– 6 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களின் பய­னா­கவே இவற்றைச் சாதித்தோம் என்றும் பெரு­மை­யாக கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

மேற்­படி விட­யங்­களின் உண்­மை­யான பின்­ன­ணி­களை உணர்ந்த எவரும் அஸாத் சாலியின் கூற்றால் ஆவே­ச­ம­டை­யவே செய்வர். ஒரு சில முஸ்லிம் அமைப்­பினர் அன்று பொது­ப­ல­சே­னா­வுடன் நடத்­திய 5– 6 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களின் போதும் முஸ்லிம் சமூ­கத்தை விட ஞான­சார தேரரே நன்­மை­ய­டைந்தார் என்­பதே உண்­மை­யாகும். அவர் மீது எறி­யப்­பட்ட எத்­த­னையோ குற்­றச்­சாட்­டு­களில் இருந்தெல்லாம் அவர் தன்னை நெகிழ்­வித்துக் கொள்­ளவே முனைந்து சிலதை சாதித்­துக்­கொண்டார். பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு சாத­க­மாக அமை­யப்­போகும் சூழ்­நிலை முன்­னேற்றம் கண்டு வரும்­போதே அவர் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வதைத் தவிர்த்து வந்தார். இது­வல்­லாது அவர் சிறை­வாசம் சென்­ற­தால்தான் இப்­பேச்­சு­வார்த்­தையில் தடை ஏற்­பட்­டது என்று கூறு­வ­தற்­கில்லை.

இவ்­வாறு பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வதால் அன்று முஸ்லிம் சமூ­கத்­திற்கு பக்­க­ப­ல­மாக முது­கெ­லும்­பா­கக்­கூட தலை­யெ­டுத்து வந்த பிர­பல சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மையில் சுறு­சு­றுப்­பாக இயங்­கி­வந்த ஆர்.ஆர்.ரீ. அமைப்பு தனது செயற்­பா­டு­களில் இருந்து ஒதுங்கிக் கொண்­ட­மையே மேற்­படி பேச்­சு­வார்த்­தையில் எமது சமூகம் அடைந்து கொண்ட பிர­தி­ப­ல­னாகும்.

ஆர்.ஆர்.ரீ. அமைப்பு இலங்­கையில் தஞ்சம் புகுந்த மியன்மார் அக­தி­களின் உரி­மை­க­ளுக்­காக வாதாடி அர்ப்­ப­ணிப்புச் செய்­தமை வர­லா­றாகும். அதே போன்று ஞான­சாரதேரர் உள்­ளிட்ட பௌத்த கடும்­போக்­கா­ளர்­களால் முஸ்லிம் சமூ­கத்­துக்கு விளை­விக்­கப்­பட்ட வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களைத் திரட்டி இங்கு நீதி கிடைக்­கா­ததால் ஜெனீவா மனித உரி­மைகள் மாநா­டு­வரை கொண்டு சென்ற அரும்­ப­ணி­க­ளையும் விரைவில் மறந்­து­விட முடி­யாது.

2013– 2017 வரை­யான காலப்­ப­கு­தி­களில் கடும்­போக்கு பௌத்த அமைப்­பு­களால் இங்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 300 க்கும் மேற்­பட்ட வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளன. இவை பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்ட போதிலும் பொலி­ஸா­ரால தட்­டிக்­க­ழிக்­கப்­பட்டே வந்­துள்­ளன. இவற்றில் 66 முறைப்­பா­டுகள் பொலி­ஸாரால் கவ­னத்தில் எடுக்­கப்­ப­டாத நிலையில் ஆர்.ஆர்.ரீ. அமைப்பின் சிராஸ் நூர்தீன் தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணிகள் இவற்றைத் திரட்டி நெறிப்­ப­டுத்தி 2017 மார்ச் மாதம் ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் மாநாடு நடை­பெற்­ற­போது அங்கு சமர்ப்­பிக்கச் செய்­தனர். ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சிறு­பான்மை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­நிதி ரீட்டா ஐசக்­கிடம் இதனைக் கைய­ளித்­தனர். இதன் விளை­வாக இது விட­ய­மாக இலங்கை அர­சுக்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­ட­துடன் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. மேற்­படி 66 முறைப்­பா­டு­களில் 59 ஞான­சா­ர­வுக்கு எத­ிரா­ன­வை­யாகும். எனவே ஆர்.ஆர். ரீ. அமைப்பின் பங்­க­ளிப்பு மிகவும் மகத்­தா­ன­தாகும். அவ்­வ­மைப்பு தொடர்ந்து இயங்­கி­யி­ருந்தால் இன்று எமது சமூ­கத்­திற்கு ஒரு முது­கெ­லும்­பாக அமைந்­தி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

இலங்­கையில் தஞ்சம் புகுந்த மியன்மார் அக­திகள் விடயம், காலி கிந்­தோட்டை அசம்­பா­வி­தங்கள், திகன வன்­மு­றைகள் போன்­ற­வற்றைத் தூண்டக்காரண கர்த்­தா­வாக ஞான­சாரதேரரே விளங்­கினார் என்­பது பரம இர­க­சி­ய­மல்ல. அவ­ரது வெறுப்புப் பிர­சா­ரங்­களாலும் ஏற்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளா­லுமே வன்­மு­றைகள் வெடித்த நிலையில் அவரால் தான் தீர்த்து வைக்­கப்­பட்­ட­தாகக் குறிப்­பி­டு­வதில் எத்­த­கைய உண்­மையும் இல்லை. அசம்பவிதங்கள். முஸ்லிம் சமூகம் தீர்த்துக் கட்­டப்­பட்­ட­மைதான் நடந்­தே­றி­யது.

கடந்த காலங்­களில் இருந்து ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கைகள், செயற்­பா­டுகள் யாவும் இந்­நாட்டின் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்குப் பெரும் அச்­சு­றுத்­த­லா­கவும் சவா­லா­க­வுமே அமைந்­தி­ருந்­தன. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தின் சுதந்­தி­ரத்­தையும் இருப்­பையும் கேள்­விக்­கு­றி­யாக்­கியே வந்­தன. இதனால் முஸ்லிம் சமூகம் அமை­தி­யி­ழந்து, நிம்­மதி குலைந்து அவல நிலைக்கே தள்­ளப்­பட்­டி­ருந்­தது. இவ­ரது அமைப்பும் இவ்­வ­மைப்­புடன் இணைந்­த­தான இதர பௌத்த கடும்­போக்கு அமைப்­புக்­களும் நாட்டில் பர­வ­லாக அவ்­வப்­போது ஆங்­காங்கே பேரி­ன­வா­தத்தின் அடக்கு முறை­களை பல்­வேறு வடி­வங்­களில் முஸ்­லிம்கள் மீது திணித்தே வந்­துள்­ளன.

இவற்றின் மூலம் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை முடக்­கு­வதில் வெற்றி கண்டு வந்­தனர். அத்­து­மீறிப் புகுந்து முஸ்­லிம்­களின் காணி­களை ஆக்­கி­ர­மித்து வந்­தனர். சிறு­பான்மைப் பிர­தே­சங்­களில் புத்தர் சிலை­களை நிறுவி அப்­ப­கு­தி­களை கப­ளீ­கரம் செய்யும் தந்­தி­ரங்­க­ளிலும் ஈடு­பட்டு வந்­தனர். இவர்­களின் சதி நாச­கா­ரங்­க­ளுக்கு அர­சியல் மட்­டத்­தி­லி­ருந்­தும் மறை­மு­க­மா­கவும் நேர­டி­யா­கவும் உந்­துதல் கொடுக்­கப்­பட்­டன. பாது­காப்புத் தரப்பும் பக்­க­ப­ல­மாக கைகொ­டுக்­கவே செய்­தது.

மஹிந்த ராஜபக் ஷவின் இரண்­டா­வது பத­விக்­கா­லத்­தின்­போதே பௌத்த கடும் போக்கு அமைப்­புகள் வேக­மாக வளர்ந்­தன. பொது­ப­ல­சேனா அமைப்பு அரசின் அனு­ச­ர­ணை­யுடன் ஊட்டி வளர்க்­கப்­பட்­ட­தா­கவே பொது­வாக கருத்து நில­வு­கி­றது. இது அர­சி­ய­லுக்­காக வாக்கு வங்­கியை வளர்த்துக் கொள்ளும் நட­வ­டிக்கை என்றே கூறப்­பட்­டது. இந்­நாட்டை தனி பௌத்த இராச்­சி­ய­மாக்கும் கனவில் பௌத்த கடும் போக்கு அமைப்­பு­களும் கச்­சை­கட்டிக் களத்தில் குதித்­தி­ருந்­த­மை­யாலே சிறு­பான்மை யினங்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்­தன. இதுவே அண்­மைக்­கால தசாப்­தங்­களில் நாட்டில் இனக்­க­ல­வ­ரங்­க­ளாக வெடித்துக் கொண்டி ருக்­கின்­றன. இவற்றின் இன்­றை­ய­கால கதா­நா­ய­க­னாக ஞான­சார தேரரே விளங்கி வரு­வது பல­ருக்கும் வெளிச்சம். 2014 ஜூனில் அளுத்­க­மையில் பாரிய கல­வ­ர­மாக வெடித்­தது. இது ஞான­சார தேரரின் வெறுப்புப் பிர­சா­ரத்தின் பிர­தி­ப­ல­னா­க­வேதான் உரு­வெ­டுத்­தது. முதல் நாள் அப்­ப­கு­தியில் நடத்­திய கூட்­டத்­தின்­போது ‘அப­ச­ரணங்’ என்று ஞான­சார வெளி­யிட்ட கருத்­துக்­களின் பின்­ன­ணி­யி­லேதான் அளுத்­கம வன்­செயல் தலை­தூக்­கி­யது.

இதே­போன்று அம்­பாறை, காலி, கிந்­தோட்டை திகன என்று மிகவும் பார­தூ­ர­மாக நடந்­தே­றிய வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் ஞான­சார தேரரின் விசமப் பிர­சா­ரங்­களே கார­ணி­யாக உள்­ளன. படி­மு­றை­யான வளர்ச்­சி­யொன்­றையே இவ­ரது நட­வ­டிக்கை களில் காண­மு­டி­கி­றது.

ஆரம்­பத்தில் ஹலால் பிரச்­சி­னையை முன்­வைத்தார். அப்­போ­தைய பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­ாபய ராஜபக் ஷவின் தலை­யீட்­டுடன் ஹலால் சான்­றி­தழை இல்­லா­ம­லாக்­கு­வதில் வெற்­றி­கண்டார். தொடர்ந்து முஸ்லிம் கலா­சார உடையில் பர்­தாவில் கைவைக்க முனைந்தார். அது கைகூ­ட­வில்லை. பின்னர் குர்­ஆனில் கூறப்­பட்­டுள்ள கருத்­துகள் இன, மத, வெறுப்­பு­ணர்­வு­களைத் தூண்­டு­வ­தாகக் கூறி குர்­ஆனைத் தடை­செய்­யும்­படி ஒரு போடு போட்டார்.

இவரால் தூண்­டப்­பட்டு எத்­த­னையோ பௌத்த கடும்­போக்கு அமைப்­புகள் தலை­யெ­டுத்­தன. கடும்­போக்கு பிக்­கு­மார்கள் உரு­வெ­டுத்­தனர். இவற்றால் நாட்டு முஸ்­லிம்கள் அனை­வரும் பல புறங்­க­ளாலும் நசுக்­கப்­பட்­டனர். புனி­த­பூமி என்ற பெய­ரிலே தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்கப்­பட்­டது. அநு­ரா­த­பு­ரத்தில் நீண்ட கால­மாக இருந்த சியாரம் பொலிஸார் முன்­னி­லை­யி­லேயே தகர்த்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது. இப்­படி ஏரா­ள­மான பள்­ளி­வா­சல்கள் அடிக்­கடி கல்­லெ­றிந்தும் தீயால் எரிக்­கப்­பட்டும் சேத­மாக்­கப்­பட்­டன. இவை­யெல்லாம் வெறுப்புப் பிர­சா­ரத்தின் பிர­தி­ப­லிப்­புகள்தான்.

மட்­டக்­க­ளப்பு மங்­க­ளா­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ன­ர­தன தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அங்­குள்ள முஸ்­லிம்­களின் காணிக்குள் புகுந்து அட்­ட­காசம் புரிந்து அச்­சு­றுத்­தலில் ஈடு­பட்டார். குறித்த பகுதி பிர­தேச செய­லா­ளரின் அலு­வ­ல­கத்­திற்குள் நுழைந்து பிர­தேச செய­லாளர் தெட்­சனா கௌரியைப் பெண் என்றும் பாராமல் தூஷண வார்த்­தைகள் கூறி ஆட்டம் போட்­டதை ஊட­கங்கள் சான்று பகர்­கின்­றன.

ஞான­சாரர் தலை­மையில் கடும்­போக்கு அமைப்­பினர் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன்,  அமைச்சர் மனோ கணேசன் ஆகி­யோரின் அலு­வ­ல­கங்­க­ளுக்குள் அத்­து­மீறி நுழைந்து ஆவே­ச­மாக நடந்­து­கொண்ட அசிங்­கங்­களும் அரங்­கே­றவே செய்­தன.

அநு­ரா­த­புர மாவட்­டத்தில் இப்­ப­லோ­கம பிர­தே­சத்தில் தொல்­பொ­ருட்கள் அழிந்து நாச­மாக்­கப்­ப­டு­கின்­றன என்ற போலிக்­குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு பிர­தேச செய­லாளர் சாஜிதா பானு­வுக்கு எதி­ராக செயற்­பட்­டமை முஸ்லிம் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஓரங்­க­மே­யாகும். அண்­மை­யில்தான் அவர் குற்­ற­மற்­றவர் என்­பதை நீதி­மன்றம் நிரூ­பித்துக் காட்­டி­யுள்­ளது. இது­வரை பல மில்­லியன் சொத்­துக்கள் நாச­மா­ன­துடன் பல உயிர்­களும் பலி­யா­கி­யுள்­ளன. கண்டி – திகன கல­வ­ரத்தில் தாக்­கப்­பட்ட மௌலவி சதக்கத்துல்லாஹ் கோமா நிலை­யி­லி­ருந்து இக்­கட்­டுரை எழுதிக் கொண்­டி­ருக்­கும்­போது அவ­ரது மரணச் செய்­தியும் வந்­தது. ஞான­சார தேரர் முன்­னின்று நடத்­திய எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களால் முஸ்லிம் சமூகம் இவ்­வாறு பல முனைத்­தாக்­கு­தல்­க­ளுக்கும் இலக்­காகி வந்­தமை கண்­கூடு.

இவ­ருக்கு எதி­ராக முஸ்­லிம்­களால் முஸ்லிம் அமைப்­புக்­களால் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பாட்டு வழக்­குகள் நிலு­வை­யி­லுள்­ளன. இவர் சிறை­வாசம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­பது முஸ்­லிம்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட வழக்­கொன்­றுக்­கல்ல. இவ்­வி­ட­யத்­திலும் முஸ்­லிம்­களை அல்லாஹ் காப்­பாற்­றி­விட்டான்.

நோயா­ளி­யொ­ரு­வரை சுகம் விசா­ரிக்கச் செல்­வதில் தவ­றில்லை. இது இஸ்­லா­மியப் பண்­பாகும். ஆனால் இவரால் நாட்­டுக்கும் சமூ­கத்­துக்கும் இழைக்­கப்­பட்­டுள்ள அட்­டூ­ழி­யங்­களை மூடி­ம­றைத்து மேல் பூச்சு பூசு­வது நாட்­டையும் சமூ­கத்­தையும் ஏமாற்­று­வ­தற்­கொப்­பாகும்.

இலங்கையில் வரலாற்றுக் காலத்திலிருந்தே சிங்கள– முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளன. அநகாரிக தர்மபால சிங்கள சமூகத்தை எழுச்சி பெறச் செய்வதற்காக சிறுபான்மை இனங்களை எதிரியாகக்காட்டி முன்வைக்கப்பட்ட தவறான நடவடிக்கையாலேயே 1915 இல் வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள முஸ்லிம் கலவரம் மூண்டது. பாரிய அழிவுகளைக் கண்டது. அந்த நச்சுக் கருத்துகளே படிப்படியாக வளர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல வன்முறைகளுக்கு வழிவகுத்தன.

அவர் அடிச்சுவட்டில் 1980/ 90 களில் கங்கொடவில சோம தேரர் தன் சிந்தனை பேச்சுவன்மையால் முஸ்லிம்கள் மீதான விசக் கருத்துகளை முன்வைத்தார். அவரது செயற்பாடுகள் குறுகிய காலத் தில் அவரது திடீர் மரணத்துடன் முற்றுப் பெற்றது. 2000 க்குப் பின்னரே ஞானசார தேரர் தலையெடுத்தார்.

சிறை வாசத்துடன் அவரும் அடங்கியுள்ளார்.  அவரால் உந்தப்பட்ட இதர கடும் போக்காளர்களும் வாரிச் சுருட்டிக்கொண்டு பெட்டிப் பாம்புகளாக இருப்ப தாலேயே முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்கள் இப்போது நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக் கின்றனர்.எதிர்காலம் எமது சந்ததியினர் இந்நாட்டில் அச்சமின்றி உரிமையோடு வாழ இன, மத நல்லிணக்கமே இன்றியமையாத தேவையாகும்.

ஓரினத்திற்கு மட்டுமே இந்நாடு சொந்தமென்ற குறுகிய நிலைப்பாடு நாட்டின் அமைதிக்கு பங்கமாகவே அமையும். இதனை உணர்ந்து இன, மத, வெறுப்புணர்வை மறந்து எல்லோரும் ஐக்கியப்பட்டு சமாதானமாக வாழ முனைவது இன்றைய தேவையாகும்..

எனவே, முஸ்லிம் சமூகம், ஞான­சார தேரரின்  விடயத்தில், வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை­வி­தைத்­தவன் தினை அறுப்பான் என்ற நிலைப்பாட்.டில் நின்­று­மெ­ளனம் காப்­பதே இன்­றைய நிலையில் புத்­தி­சா­லித்­த­ன­மாகும்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.