இரு எதிர்க்கட்சி தலைவர்களா?

என்னை நீக்காது மஹிந்தவை நியமித்தது ஏன்?

0 745

உறு­தி­யான  அர­சாங்கம் ஒன்று நிய­மிக்­கப்­ப­டாத நிலையில் அவ­ச­ர­மாக இன்­னு­மொ­ரு­வரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்­கான தேவை ஏற்­பட்­டது ஏன்? என்னை எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியில் இருந்து நீக்­காது இன்­னொ­ரு­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மித்து இன்று பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு எதிர்க்­கட்சி தலை­வர்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். சபா­நா­ய­கரின் இந்த தீர்­மானம் அர­சியல் அமைப்­பினை மீறிய தீர்­மானம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட அறி­விப்பு விடுத்தே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த  2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் பின்னர் பாரா­ளு­மன்றம் செப்­டம்பர் 2015இல் கூடி­ய­போது அப்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியில் இரண்­டா­வது அதி கூடிய ஆச­னங்­களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்­சியின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக என்னை சபா­நா­யகர் ஏற்­றுக்­கொண்டார்.  பாரா­ளு­மன்­றத்தில் ஏனைய எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களால் இது தொடர்பில் கேள்­விகள் எழுப்­பப்­பட்ட போது,

இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியில் அதி கூடிய ஆச­னங்­களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்­சியின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக என்னை நிய­மிப்­ப­தாக குறிப்­பிட்டு  மீண்­டு­மொ­ரு­முறை பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. அந்த தீர்ப்­பினை வழங்­கிய போது அதுவே எனது இறுதி முடிவு எனவும் சபா­நா­யகர் அறி­வித்தார்.

நேற்று முன்­தினம் டிசம்பர் 18ம் திக­தி­யன்று,  மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்­கட்சி தலைவர் பத­விக்கு நிய­மிக்­க­வேண்டும் என்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­யினை ஏற்ற சபா­நா­யகர்  மஹிந்த ராஜபக் ஷவை  எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிப்­ப­தாக அறி­வித்தார். இரண்­டு­முறை  சபா­நா­யகர் மீளு­றுதி செய்து எதிர்க்­கட்சி தலை­வ­ராக  என்னை நிய­மித்த நிலையில்  என்னை பத­வி­யி­லி­ருந்து நீக்­காமல் இந்த அறி­விப்­பினை சபா­நா­யகர்  செய்­த­து­மன்றி, இந்த செய­லா­னது தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் இருவர் எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யினை தக்க வைத்­தி­ருப்­ப­தா­கவே புலப்­ப­டு­கின்­றது. அதேபோல்  என்னை எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வதில் சபா­நா­ய­க­ருக்கு  பூரண திருப்தி இருக்­க­வில்­லையா என்ற கேள்­வி­யி­னையும் எழுப்­பு­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்­சியை விட அதி­க­ளவு ஆச­னங்­களை ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு கொண்­டுள்­ள­தனை கேள்­விக்­குட்­ப­டுத்த  முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் இரண்­டா­வது பெரும்­பான்மை கட்­சி­யான இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் என்னை எதிர்க்­கட்சி தலை­வ­ராக சபா­நா­யகர் ஏற்­றுக்­கொண்டார்.  இதற்கு காரணம் என்­ன­வெனில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு மற்றும் இலங்கை சுதந்­திர கட்சி ஆகி­ய­வற்றின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  உட்­பட இந்த இரு கட்­சி­க­ளி­னதும் ஒரு சாரார் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­தி­ருந்­தார்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  நாட்டின் தலைவர், நிறை­வேற்று அதி­கார தலைவர்,அர­சாங்­கத்தின் தலைவர் மட்­டு­மல்­லாது பல்­வேறு அமைச்சு பத­வி­களை வகிக்கும் ஒரு அமைச்­ச­ரா­கவும் அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும் செயற்­ப­டு­கிறார்.  ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வான இன்னும் பலர் அமைச்­ச­ர­வையில் பல்­வேறு பத­வி­களை வகித்­தனர். அவர்கள் எல்­லோரும் கூட்­டாக பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்பு கூற­வேண்­டி­ய­வர்கள்.

இத­ன­டிப்­ப­டையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் ஒருவர் எதிர்க்­கட்சி தலை­வ­ராக தெரிவு செய்­யப்­ப­டு­வ­தா­னது முறை­யற்ற செய­லாக அமைந்­தி­ருக்கும்.  இந்த பின்­ன­ணியில் தான், உல­கெங்கும் கடைப்­பி­டிக்­கப்­படும் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாய மற்றும் சாசன முறைப்­படி பாரா­ளு­மன்றில் இரண்­டா­வது பெரும்­பான்­மை­யுள்ள கட்­சியின் தலைவர் எதிர்க்­கட்சி தலை­வ­ராக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தனை நடை­மு­றைப்­ப­டுத்தி என்னை சபா­நா­யகர் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இரண்­டு­முறை ஏற்­றுக்­கொண்டார்.  கடந்த ஒக்­டோபர் மாதம்  26 ஆம் திக­தி­யி­லி­ருந்து பிர­தமர் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்றம் தொடர்பில் பல்­வேறு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. எமது அர­சியல் யாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கு அமைய உயர் மட்­டத்தில் நீதித்­து­றை­யினால் கொடுக்­கப்­பட்ட தீர்ப்­பு­களின் அடிப்­ப­டையில் சில முடி­வுகள் இந்த விட­யங்கள் தொடர்பில் எட்­டப்­பட்­டுள்­ளன. இந்த பின்­ன­ணி­யில்தான்  எதிர்க்­கட்சி தலைவர் பதவி தொடர்பில் சபா­நா­யகர்  தீர்­மா­ன­மொன்­றினை வழங்­கி­யுள்ளார்.

நீதி­மன்ற தீர்ப்­புக்­க­மைய கடந்த 16 ஆம் திகதி பிர­தமர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார், ஆனால் அமைச்­ச­ரவை ஒன்றோ அல்­லது அர­சாங்கம் ஒன்றோ இன்­னமும் முறை­யாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

18 ஆம் திக­தி­யன்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்ட மூன்று உறுப்­பி­னர்கள் சபை­யை கடந்து  அர­சாங்க தரப்பில் அமர்ந்து கொண்­டனர். நிலை­யான  அர­சாங்கம் ஒன்று நிய­மிக்­கப்­ப­டாத இந்த பின்­ன­ணியில் அவ­ச­ர­மாக இன்­னு­மொ­ரு­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்­கான தேவை இல்லை என்­ப­தனை நான் வலி­யு­றுத்த விரும்­பு­கிறேன் தற்­போது பத­வியில் இருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரை நீக்­காமல் அப்­ப­டி­யான அறி­விப்­பினை செய்­த­மை­யா­னது விட­யங்­களை இன்னும் சிக்­க­லுக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

மேலும் சபா­நா­யகர்  எதிர்க்­கட்சி தலை­வ­ராக அறி­வித்த உறுப்­பினர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பட்­டி­யலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் அவர் அக்­கட்­சி­யி­லி­ருந்து விலகி ஒரு மாதம் கடந்­துள்ள நிலையில் அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யா­னது வெற்­றி­ட­மாக உள்­ளது என்ற குற்றச்சாட்டும் உள்­ளது. எதிர்க்­கட்சி தலை­வ­ராக அறி­வித்த குறித்த உறுப்­பினர் சபா­நா­யகர்  அறி­வித்த அந்த நாளில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக கூட இல்லை என்­ப­தனை சபையின்  கவ­னத்­திற்கு கொண்டு வரு­கிறேன். சபா­நா­யகர்  எடுத்த தீர்­மா­ன­மா­னது அவ­ச­ர­மா­கவும் எமது அர­சி­ய­ல­மைப்பை மீறும் வகை­யிலும் இருக்­கின்­ற­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.  நான் குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் இலங்கை தனது மிக முக்­கிய சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்­பினை மதிக்­காத ஒரு தோல்­வியை நோக்கி நக­ரு­கின்ற நாடாக மாறு­கின்­றதா என்ற கேள்­வியை எழுப்­பு­கின்­றது. பிள­வு­ப­டாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையினை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு மூல காரணமாக அமைந்த பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகிறார்கள்.

இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது. முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசியல் யாப்பின் புனித தன்மையை பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும் எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.