அமெரிக்காவின் தீர்மானத்துக்கு சவூதி கண்டனம்

0 783

ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­ஜியின் படு­கொ­லைக்கு சவூதி இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மான்தான் பொறுப்பு எனும் அமெ­ரிக்க செனட்டின் அதி­ரடித் தீர்­மா­னத்­திற்கு சவூதி அரே­பியா கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் யெமனில் போரில் ஈடு­பட்­டுள்ள சவூதி தலை­மை­யி­லான கூட்­டணிப் படை­க­ளுக்கு வழங்­கி­வரும் இராணுவ உத­வி­களை நிறுத்­து­வ­தற்கும் அமெ­ரிக்க செனட்டில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட இத்­தீர்­மானம் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் தமது பிராந்­திய மற்றும் சர்­வ­தேச பங்கை குறைப்­ப­தற்­கான சதி­யெனவும் சவூ­தியின் வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஒக்­டோபர் மாதம் இஸ்­தான்பூல் சவூதி தூத­ர­கத்தில் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளரின் படு­கொ­லையில் இள­வ­ரசர் மொஹம்மட் பின் சல்­மானின் ஈடு­பாட்டை சவூதி அரசு தொடர்ந்து மறுத்­து­வ­ரு­கி­றது.

சவூதி அரே­பியா ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போல் ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­ஜியின் படு­கொலை வருத்­தத்­திற்கு உரி­யது எனவும், இந்தப் படு­கொ­லைக்கும் சவூதி அர­சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் சவூதி வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் விசா­ரணை நியாயமாக நடத்தப்படுவதற்கு சவூதி தவறுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.