சிறிசேன என்ற நோய்க்குறி

0 840
  • அமீர் அலி

அக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள்  முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று  தனது முரண் இயல்புகளையே நிலைபேறானவையாகக்கொண்ட ஒரு ஜனாதிபதியும் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும் ஜே.வி.பி.போன்ற சிறிய கட்சியும் எதிர்காலச் சந்ததிகளின் நலனுக்காக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு  ஐக்கியப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட விதிவசமான நிலைமையும் முன்னர் ஒருபோதும் தோன்றியதில்லை.

நாட்டினதும் அதன் ஜனநாயகத்தினதும் மிகவும் குறிப்பாக ஜனாதிபதியின் செயற்பாடுகளினதும் கதி குறித்து நீதித்துறை என்ன கூறப்போகிறதோ என்ற திகைப்புடனும் திண்டாட்டத்துடனும் இலங்கையர்கள் இன்றுபோல் முன்னென்றுமே காலையில் விழித்தெழுந்ததில்லை.இதுவே என்றுமே நினைவைவிட்டு அகலாமல் இருக்கப்போகின்ற  பொலனறுவையைச்  சேர்ந்த ஜனாதிபதி சிறிசேன  பதவியைவிட்டு எந்தவித கௌரவிப்பும் இல்லாமல் விலகும்போது இலங்கையர்களிடம் கையளித்துவிட்டுச் செல்லப்போகிற ஒரு ‘ நோய்க்குறியாகும்.’

தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஜனாதிபதி சிறிசேன முழு நாட்டையுமே பணயமாக  வைத்திருக்கிறார்.ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களால் (தங்களது தலைவர் என்று தெரிவுசெய்யப்பட்ட விக்கிரமசிங்கவின் திறமையின்மையும் தகுதியின்மையும் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் மக்களால் ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுவிட்டன. ) தனக்கு விருப்பமான ஒருவரைத்தவிர, வேறு எவரையும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தயாரில்லை.அதனால்தான் பதினான்காவது லூயி மன்னன் ‘ நானே அரசு ‘ என்று பிரகடனம் செய்ததைப் போன்று சிறிசேனவும் ‘ நானே அரசாங்கம் ‘ என்று கர்வத்தனமாகக் கூறியிருக்கிறார். லூயி மன்னன் அந்தப் பிரகடனம் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது. எமது ஜனாதிபதியின் பிரகடனம் எதைக் கொண்டுவரப்போகிறதோ யாருமறியார்.

அதேவேளை, இலங்கையின் திறந்த பொருளாதாரம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிராதரவாக விடப்பட்டிருக்கிறது.திறந்த பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு கூறான உல்லாசப்பயணத்துறையும் தொழிலவாய்ப்பு பெருக்கத்துக்கு பெரிதும் அவசியமானதாகிவிட்ட தனியார் முதலீடுகளும் ஜனாதிபதியின் எதிர்மறையான நடவடிக்கைகளின் புறத்தூண்டுதல்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்காமல் கவனிக்காமல்விட்ட வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு கூரையைப்பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துகொண்டு செல்கிறது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறுகின்றவற்றைப் பற்றி சிந்தித்துப்பார்ப்பதற்கு ஒரு சில மணித்தியாலங்களை ஜனாதிபதி சிறிசேன செலவிவவேண்டிய நேரம் இது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே பிரெஞ்சு தொழிலாளர்களையும் மாணவர்களையும் சாதாரண மக்களையும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வைத்திருக்கிறது.அவர்கள் இப்போது ஜனாதிபதி மக்ரோன் பதவிவிலக வேண்டுமென்று கோருகிறார்கள். அதே கதி தனக்கு ஏற்படுவதைத் தவிர்க்க ( தானே அரசாங்கம் என்று பிரகடனம் செய்கின்ற) ஜனாதிபதி சிறிசேன எதையாவது வசய்வாரா? ஜனாதிபதி அவர்களே, மக்கள் அரசியலமைப்பை அல்ல உணவையே சாப்பிடுகிறார்கள்.தாங்கள் பட்டினியில் வாடுவதாக அழுதுகொண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் செல்வது பௌத்த நாடொன்றுக்கு அழகல்ல.

சிறிசேனவின் அரசியலமைப்பு அடாவடித்தனங்களுக்கு ஆதரவான முறையில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினாலும் கூட  தனது பதவிக்கு அவர் ஏற்படுத்திய சேதங்கள் வரலாற்றில் நிலைத்திருக்கவே போகின்றன. அவரை அவ்வாறு செய்ய அனுமதித்த அரசியலமைப்பபு பெருமளவுகக்கு மாற்றியமைக்கப்பட்டாலும் கூட அந்தச் சேதங்கள் அழியாது. இன்றைய அரசியலமைப்பின் தந்தையான ஜே.ஆர். ஜெயவர்தன தனது மரணத்துக்கு முன்னதாக ஒரு மன்னனாக வரவிரும்பினார்.அதன் காரணத்தினால்தான் தனது விருப்பத்துக்கேற்ற முறையில் நாட்டின் அரசியல் கட்டமைப்பை மாற்றியமைக்க சகல வல்லமையும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவர அவர் விரும்பினார்.

அந்த காலகட்டத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளும் அரசியலில் எவராலும் சவாலுக்குட்படுத்தமுடியாத மூத்த தலைவராக விளங்கிய ஜெயவர்தனவின் அனுபவமுதிர்ச்சியும் அந்த சிறப்புரிமைகளை அனுபவிக்க அவரை அனுமதித்தன. அவரைப் போன்று பாவனைசெய்ய தற்போதைய ஜனாதிபதி விரும்புகிறார்.ஆனால் நேரமும் சூழ்நிலையும் மாறிவிட்டன.பொருளாதார மற்றும் நிருவாக விவகாரங்களில் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய ஜே.ஆரின் திறந்த பொருளாதாரத்தின் அனர்த்தத்தனமான விளைவுகளும் தவறான கைகளுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி போனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெட்டவெளிச்சமாகத்  தெரிந்தன.தற்போதைய ஜனாதிபதியின் கீழும் அந்த நிலைவரங்களில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக இல்லை. இரு விடயங்களிலும் கடுமையான மாற்றங்களைச் செய்யவேண்டிய நேரம் இதுவாகும்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.