‘புர்கா தடை’ என்கின்ற வார்த்தையை பயன்படுத்தாதீர் – பாதுகாப்பு செயலாளர்

ஒரு மதம் இலக்கு வைக்கப்படவில்லை என்கிறார்

0 385

(ஆர்.யசி)
நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டும், மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நோக்­கத்­திலும் முழு­மை­யாக முகத்தை மூடும் முகக்­க­வ­சங்­க­ளுக்கு தடை விதித்­துள்ளோம். மாறாக ஒரு மதத்தை இலக்கு வைத்து எந்த நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை. எனவே ‘புர்கா தடை’ என்ற வார்த்­தையை பயன்­ப­டுத்த வேண்டாம் என பாது­காப்பு செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரத்ன தெரி­வித்தார்.

பாது­காப்பு அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே பாது­காப்பு செய­லாளர் இதனை கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

முகக்­க­வசம் தடை­செய்­யப்­பட்­டமை புர்கா தடை எனக் கூறு­கின்­றனர். ஆனால் அவ்­வாறு கூறு­வது தவ­றா­ன­தாகும், நாம் ஒரு மதத்தை இலக்கு வைத்து முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்கை அல்ல இது. முகக்­க­வசம் தடை என்­ப­தற்கு “புர்கா தடை” என்ற வார்த்­தையை பயன்­ப­டுத்த வேண்டாம். முழு­மை­யாக முகத்தை மறைக்கும் முக­மூ­டி­களை நாம் தடை செய்­துள்ளோம். அது குறித்த சட்ட நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்­கான சட்ட வரை­புகள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எதிர்­கா­லத்தில் சட்­டத்­திற்கு அமைய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஆனால் எக்­கா­ரணம் கொண்டும் எவ­ரையும் நெருக்­க­டிக்குள் தள்­ளவோ, புறக்­க­ணிக்­கவோ இந்த தீர்­மானம் எடுக்­க­வில்லை. மாறாக பொது மக்­களின் பாது­காப்பை கருத்தில் கொண்டே இந்த தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­கின்­றது.

மனித உரி­மை­களை அதி­க­ளவில் பின்­பற்றும் சுவிட்­சர்­லாந்தில் கூட முகக்­க­வசம் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டே இந்த தீர்­மானம் எடுக்­கின்றோம். ஆனால் ஏதேனும் ஒரு சந்­தர்ப்­பத்தில் இந்த தடைகள் குறித்த முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் அப்போதைய நிலையில் இது குறித்து கவனம் செலுத்துவதற்கும் தயாராக உள்ளோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.