சமூகத்தை தைரியமூட்டும் நகர்வுகளே காலத்தின் தேவை

0 1,053

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்று இன்னும் சில தினங்­களில் இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலையில் அது தொடர்­பான அர­சாங்­கத்தின் நகர்­வு­களும் பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க மக்­களின் நகர்­வு­களும் உத்­வேகம் பெறத் துவங்­கி­யுள்­ளன.

எதிர்­வரும் ஏப்ரல் 21 ஆம் திக­திக்குள் இந்த விவ­காரம் தொடர்பில் அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­விட்டால் நாட­ளா­விய ரீதியில் மக்­களை ஒன்று திரட்டிப் போரா­ட­வுள்­ள­தா­கவும் சர்­வ­தேச சமூ­கத்தின் உத­வியைக் கோரப் போவ­தா­கவும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் எச்­ச­ரித்­துள்ளார். அதே­போன்று இந்த விட­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது விரல் நீட்­டி­யுள்ள அவர், அவ­ருக்கு எதி­ராக விசா­ரணை நடாத்­தப்­பட வேண்டும் என்றும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் வழங்­கி­யுள்ளார். மறு­புறம் வாழ்க்கைச் செலவு உயர்வு, காட­ழிப்பு, சீனி மற்றும் எண்ணெய் மோச­டிகள் என அர­சாங்­கத்தின் மீதான விமர்­ச­னங்­களும் அதி­ருப்­தி­களும் வெளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன. இந்த அரா­சங்கம் ஆட்­சிக்கு வர முன்­னின்று பாடு­பட்ட பெளத்த மத தலை­வர்கள் கூட இன்று பகி­ரங்­க­மாக, அமைச்­சர்­களின் முகத்­தி­லேயே நேருக்கு நேர் விமர்­ச­னங்­களை முன்­வைக்­கு­ம­ள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது.

இந்த நெருக்­க­டி­களால் தட்­டுத்­த­டு­மாறும் அர­சாங்கம் பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளையும் கத்­தோ­லிக்க சமூ­கத்­தையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தினமும் கைது­க­ளையும் தடை­க­ளையும் அமுல்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் தொட­ரி­லேயே தினமும் ஓரி­ரு­வ­ரா­வது கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். நேற்று முன்­தினம் 11 முஸ்லிம் அமைப்­பு­களை தடை செய்ய சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கிய அறி­விப்பும் வெளி­வந்­துள்­ளது. மேற்­படி 11 அமைப்­பு­களில் தடை செய்­யப்­பட வேண்­டிய சில தீவி­ர­வாத அமைப்­புகள் உள்ள போதிலும் பெரும்­பா­லா­னவை நாட்டின் சட்ட திட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்டு, முறை­யாக பதிவு செய்­யப்­பட்டு, ஜன­நா­யக வழி­மு­றையில் இயங்­கு­ப­வை­யாகும். இந்த உண்­மையை விளங்­கி­யி­ருந்தும் கூட அர­சாங்கம் அவ­ச­ரப்­பட்டு தடை செய்ய முற்­ப­டு­வ­தா­னது முஸ்லிம் இளை­ஞர்கள் மத்­தியில் மென் மேலும் அடிப்­ப­டை­வா­தத்­தையும் தீவி­ர­வா­தத்­தையும் வளர்க்­கவே வழி­வ­குக்கும் என்­பதைச் சொல்லி வைக்க விரும்­பு­கிறோம். இத­னைத்தான் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரியும் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை காரணம் காட்­டியே அர­சாங்கம் இந்த கைது­க­ளையும் தடை­க­ளையும் முன்­னெ­டுக்­கி­றது. புனர்­வாழ்­வ­ளித்தல் என்ற பெயரில் தன்­னிச்­சை­யான கைது­க­ளுக்கும் நீண்ட நாள் தடுத்து வைப்­பு­க­ளுக்கும் வழி­வ­குக்கும் வர்த்­த­மா­னி­யையும் வெளி­யிட்­டுள்­ளது.
இந்த அறிக்­கையை முன்­வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகும். அறிக்­கையின் உள்­ள­டக்­கங்­களை நுணுகி ஆராய்ந்து அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் பக்­க­முள்ள நியா­யங்­க­ளையும் சந்­தே­கங்­க­ளையும் அவர் முன்­வைத்த விதம் அனை­வ­ரதும் பாராட்டைப் பெற்­றுள்­ளது. அவர் ஆங்­கி­லத்­திலும் சிங்­க­ளத்­திலும் ஆற்­றிய உரை இந்த இதழில் முழு­மை­யாக தமிழில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து ஓர் அர­சியல் தலை­வ­ரா­கவும் புத்­தி­ஜீ­வி­யா­கவும் இந்த விட­யத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஹக்கீம் வழங்கி வரும் முதிர்ச்­சி­மிக்க தலை­மைத்­துவம் பாராட்­டப்­பட வேண்­டி­ய­தாகும். அதே­போன்­றுதான் இஸ்­லாத்தைப் பற்­றியும், முஸ்­லிம்­களை பற்­றியும் பரப்­பப்­பட்­டு­வரும் தவ­றான கருத்­துக்­களை மறுத்தும், அவற்­றிற்கு விளக்­க­ம­ளித்தும் அவர் எழுதி வெளி­யிட்ட ‘We Are A Part, Not Apart’ எனும் தலைப்­பி­லான நூலும் அவ­ரது வர­லாற்றுப் பங்­க­ளிப்­பாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பான விவா­தங்­களில் முஸ்லிம் எம்.பி.க்கள் ஈடு­பாடு காட்­டாமை கவ­லைக்­கு­ரி­யது என்றும் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளா­வது இதற்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து பாரா­ளு­மன்­றத்தில் சமூ­கத்தின் சார்பில் பேச வேண்டும் என இரு வாரங்­க­ளுக்கு முன்னர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம். அந்த வகையில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா. கட்­சி­களின் தலை­வர்­களும் நீதி­ய­மைச்­சரும் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரைகள் வர­வேற்­கத்­தக்­க­வை­யாகும். அதே­போன்று ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்ள விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மை­யி­லான முஸ்லிம் பிர­மு­கர்­களின் தொடர் அறிக்­கை­களும் ஊட­கங்கள் வாயி­லான மிகுந்த தாக்­கத்தைச் செலுத்தி வரு­கின்­றன. சிவில் நிறு­வ­ன­மாக முஸ்லிம் கவுன்­சிலின் பணி­களும் கவ­னிப்­புக்­கு­ரி­யவை.
இலங்கை முஸ்­லிம்கள் வர­லாற்றில் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு சந்­தித்­துள்ள இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து சமூ­கத்தை மீட்­ப­தற்­காக அர­சியல் மற்றும் சிவில் தலை­வர்கள் இவ்­வாறு வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும்.

கைது­க­ளாலும் தடுத்து வைப்­பு­க­ளாலும் தடை­க­ளாலும் முஸ்லிம் சமூகம் மிகுந்த அச்­சத்­திற்­குள்ளும் விரக்­திக்­குள்ளும் தள்­ளப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந் நிலைமை நீடிப்­பது முஸ்லிம் சமூ­கத்தை மிகப் பாரிய உளவியல் நெருக்கடிக்குள் தள்ளவே வழிவகுக்கும். இதற்கு நாம் இடமளிக்க முடியாது.
முடிந்­த­ளவு ஜன­நா­யக மற்றும் சட்ட ரீதி­யான போராட்­டங்­களை முஸ்லிம் அர­சியல் மற்றும் சிவில் தலை­மைகள் முன்­னெ­டுக்க வேண்டும். அர­சாங்­கத்தின் சட்­டத்­துக்குப் புறம்­பான நட­வ­டிக்­கைகள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதன் மூலம் சமூ­கத்தின் மீதான திட்­ட­மிட்ட அடக்­கு­மு­றைகள் தடுக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களே சமூ­கத்­திற்கு தைரி­யத்தைத் தரு­வ­தாக அமையும். இது குறித்து சம்­பந்­தப்­பட்ட அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.