புதிய விதிமுறைகளால் குர்ஆன் பிரதிகள், புத்தகங்கள் இறக்குமதி செய்வதில் சிரமம்

0 1,187

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய புத்­த­கங்கள் மற்றும் குர்ஆன் பிர­தி­களை சுங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விப்­ப­தற்கு பாது­காப்பு அமைச்சு புதிய விதி­களை முன்வைத்­துள்­ளதால் இஸ்­லா­மிய புத்­த­கங்கள் மற்றும் குர்ஆன் பிர­தி­களை இறக்­கு­மதி செய்யும் இறக்­கு­ம­தி­யா­ளர்கள் பல சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் இந்த புத்­த­கங்கள் மற்றும் குர்ஆன் பிர­தி­களை சுங்­கத்­தி­லி­ருந்து விடு­வித்துக் கொள்­வதில் கால­தா­மதம் ஏற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதனால் அர­புக்­கல்­லூ­ரிகள், மத்­ர­ஸாக்கள் உரிய காலத்தில் தேவை­யான புத்­த­கங்­களைப் பெற்றுக் கொள்­வதில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வித பொறுப்­பு­மின்றி அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய கொள்­கை­களை உள்­ள­டக்­கிய புத்­த­கங்கள் மற்றும் வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்­க­ளினால் எழு­தப்­பட்­டுள்ள புத்­த­கங்கள் என்­ப­வற்றை இறக்­கு­மதி செய்தல், விநி­யோ­கித்தல் மூலம் சமய நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் ஏற்­ப­டு­கி­றது. இத­னா­லேயே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பாது­காப்பு செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

இதேவேளை தான் இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­துள்ள குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­பது தொடர்பில் உரிய நடை­மு­றை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் தன்னை அழைத்­துள்­ள­தா­கவும் இஸ்­லா­மிய புத்­த­கங்கள் இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்யும் நிறு­வ­ன­மொன்றின் உரி­மை­யாளர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இதே­வேளை அண்­மையில் பேரு­வ­ளையில் இயங்­கி­வரும் நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்பு கட்டார் நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்த 90 புத்­த­கங்­களில் 4 புத்­த­கங்கள் சுங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டாது தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த 4 புத்­த­கங்கள் சமய நல்­லி­ணக்­கத்­துக்கு சவால்­களை ஏற்­ப­டுத்தும் சலபி மற்றும் வஹா­பிஸ கொள்­கை­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தா­க கூறியே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட 4 புத்­த­கங்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை உள்­ள­டக்­கவில்லை எனவும் புத்­த­கங்­களை விடு­விக்­கும்­ப­டியும் நப­வியா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்பின் செய­லாளர் காமில் ஹுசைன் பாது­காப்புச் செய­லாளர் கமல் குண­ரத்­னவைச் சந்தித்து வேண்டியுள்ளார். 4 புத்தகங்களும் தற்போது பரிசீலனையின் கீழ் உள்ளதாகவும், பரிசீலனையின் பின்பு இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இல்லை என நிரூபிக்கப்பட்டால் அவை விடுவிக்கப்படும் என கமல் குணரத்ன தெரிவித்ததாக இளைஞர் அமைப்பின் செயலாளர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.