கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள்

உண்­மையைக் கண்­ட­றியும் அறிக்கை வெளி­யீடு

0 753

றிப்தி அலி

2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்­டத்­தி­லுள்ள திகன மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு சரி­யாக மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. மார்ச் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை தொட­ராக இடம்­பெற்ற இவ் வன்­மு­றைகள் கார­ண­மாக நாடு முழு­வ­திலும் 10 நாட்கள் அவ­ச­ர­கால நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த வன்­மு­றையின் போது இரண்டு பேர் கொல்­லப்­பட்­டனர். 33 வீடுகள் முற்­றாக அழிக்­கப்­பட்­ட­துடன், 256 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­மாக்­கப்­பட்­டன. மேலும் 163 கடை­களும் 47 வாக­னங்­களும் சேத­மாக்­கப்­பட்­டன. மேலும் இப் பிர­தே­சங்­களில் 20 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. ஐ.சி.சி.பீ.ஆர் சட்­டத்தின் கீழ் சுமார் 100 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

இந் நிலையில் இவ் வன்­மு­றையின் மூன்று வருட பூர்த்­தி­யினை முன்­னிட்டு கொழும்­பினைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் ‘சட்­டத்­திற்கும் சமூ­கத்­திற்­கு­மான அற­நி­லை­யத்­தினால்’ (Law & Society Trust – – LST) விரி­வான ஆய்­வ­றிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

‘கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை பற்­றிய உண்­மை­களை கண்­ட­றியும் அறிக்கை’ எனும் தலைப்­பி­லான இந்த அறிக்கை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தினைச் சேர்ந்த பேரா­சி­ரியர் பர்­சானா ஹனீ­பா­வினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

89 பக்­கங்­களைக் கொண்ட இந்த அறிக்­கைக்கு பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தினைச் சேர்ந்த கலா­நிதி விஜய ஜய­தி­லக, பேரா­சி­ரியர் ஷாமளா குமார், சிரேஷ்ட பேரா­சி­ரியர் அர்­ஜுன பராக்­கி­ரம மற்றும் பேரா­சி­ரியர் சுமதி சிவ­மோகன் ஆகி­யோரை உள்­ளடக்­கிய ஆய்­வணி உதவி வழங்­கி­யுள்­ளது.

இந்த அறிக்­கை­யினை வெளி­யிடும் நிகழ்வு கடந்த மார்ச் 2ஆம் திகதி இணை­ய­வழி ஊடாக இடம்­பெற்­றது. ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த அறிக்கையை www.lstlanka.org எனும் இணை­யத்­த­ளத்தின் ஊடாக தர­வி­றக்கம் செய்ய முடியும்.

திகன, தெல்­தெ­னிய மற்றும் அக்­கு­ரணை வன்­முறை, அக்­கு­ரணை – 8ஆம் கட்டை பற்­றிய சம்­பவக் கற்கை, நிகழ்­வுக்கு முன்னர் நடந்த நிகழ்­வுடன் தொடர்­பு­டைய சம்­ப­வங்கள், நிகழ்­வுக்குப் பின்­ன­ரான குறிப்­புக்கள், பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளினால் குறிப்­பி­டப்­படும் வன்­முறைச் சம்­ப­வங்கள், பல்­வேறு இனச் சமயக் குழுக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் சமு­தாயத் தலை­வர்­க­ளினால் விப­ரிக்­கப்­பட்­ட­வா­றான வன்­மு­றைக்கு முன்­ன­ரான கண்­டியச் சூழ­மைவு, சட்ட அமு­லாக்க உத்­தி­யோ­கத்­தர்­களின் வாக்­கு­மூ­லங்கள் மற்றும் நிவா­ரண நட­வ­டிக்­கைகள் ஆகி­ய­வற்­றினை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்­கையின் இறு­தியில் பரிந்­து­ரை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
1. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான உணர்­வு­களைப் பரப்­பு­வது நிறுத்­தப்­பட வேண்டும். வெறுப்புப் பிர­சா­ரத்தை முறி­ய­டிப்­பது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.
2. திகன வன்­மு­றைக்­கான நட்­ட­ஈடு மிகக் குறை­வான தொகை­யு­டை­ய­தாக இருந்­த­துடன் அதில் சில இன்னும் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. அர­சாங்கம் இந்த நட்­ட­ஈட்டுத் திட்­டங்­களை துரி­த­மாக அமுல்­ப­டுத்த வேண்டும். இவ்­வாறு நட்­ட­ஈடு செலுத்­தப்­ப­டா­மை­யினால் பாதிக்­கப்­பட்ட சமு­தா­யங்கள் தாம் அர­சினால் கைவி­டப்­பட்­டுள்­ள­தாக உண­ரக்­கூ­டாது.
3. ஊடக அறிவு மற்றும் இன­வாத மொழி மற்றும் செய்திப் பரி­மாற்றம் பற்­றிய அறிவு மக்­களின் மத்­தியில் இள வயது முதல் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். சமூக ஊடகப் பாவனை, இன­வாத மற்றும் பகை­மை­யினைத் தூண்டும் உள்­ள­டக்­கங்­க­ளுக்­காகக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மா­ன­தாகும்.

மேலும் இவ்­வா­றான செய்­தி­களின் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அவற்­றிற்கு எவ்­வாறு பதிற் செயற்­பா­டாற்­று­வது என மக்­க­ளுக்கு விழிப்­பூட்­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­பன உட்­பட மேலும் பல பரிந்­து­ரைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

யுத்தம் முடி­வுக்கு வந்த பிற்பாடு இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் 2014 ஆம் ஆண்டு அளுத்கமயிலும், 2017 ஆம் ஆண்டு காலி, கிந்தோட்டையிலும் 2018 ஆம் ஆண்டு அம்பாறை நகர் மற்றும் கண்டி, திகன ஆகிய பிரதேசங்களிலும், 2019 ஆம் ஆண்டு குருநாகல், நீர்கொழும்பு, மினுவாங்கொட போன்ற பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் பாரிய சேதங்களை விளைவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.