உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பேராயரின் அழைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்

0 324

இலங்கை வர­லாற்றில் அதன் அமை­திக்கும் பாது­காப்­பிற்கும் எந்தக் காலத்­திலும் எத்­த­கைய பங்­கமும் விளை­விக்­காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21 இல் நடை­பெற்ற துன்­பியல் நிகழ்­வான ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை தாக்­கு­தல்கள் கார­ண­மாக கிறிஸ்­த­வர்­க­ளுக்குப் பிறகு பாதிக்­கப்­பட்ட இரண்­டா­வது பெரிய சமூகம் என்றால் அது மிகை­யல்ல. ஏப்ரல் 21 இல் நடை­பெற்ற கொடூ­ர­மான தற்­கொலைத் தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் மறைந்­தி­ருப்­ப­தாக கரு­தப்­படும் சூத்­தி­ர­தா­ரி­களை வெளிச்­சத்­துக்குக் கொண்­டு­வர வேண்டும் என பேராயர் கார்­டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் விடுத்­துள்ள அழைப்பை முஸ்­லிம்கள் வலி­மை­யாக ஆத­ரிக்க வேண்டும் என முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர், மூத்த ஊட­க­வி­ய­லாளர் லத்தீப் பாறூக், சட்­டத்­த­ர­ணியும் பத்தி எழுத்­தா­ள­ரு­மான மாஸ் எல் யூஸுப் மற்றும் சமய அறிஞர் மன்ஸூர் தஹ்லான் ஆகியோர் இணைந்து விடுத்­துள்ள அறிக்கை ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வா­னது மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பாக எழுப்­பப்­பட்ட பிரச்­சி­னை­களை விசா­ரித்து பதில்­களை வழங்கத் தவ­றி­யமை பெரிய ஏமாற்­ற­மாகும். இது குறித்து பேராயர் வெளிப்­ப­டுத்­திய ஆழ்ந்த கவ­லையை நாட்டு மக்­க­ளுடன் நாம் பகிர்ந்து கொள்­கிறோம். குறிப்­பிட்ட சில இளை­ஞர்கள் மேற்­கொண்ட தாக்­கு­த­லகள் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டன. இந்த படு­ப­யங்­க­ர­மான தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பின்­பு­லத்தில் உள்ள கார­ணங்கள் மீதான விசா­ர­ணைகள் மற்றும் மதிப்­பீ­டுகள் துர­திஷ்­ட­வ­ச­மாக போது­மா­ன­தாக அமை­ய­வில்லை என்­பதே எமது அவ­தா­ன­மு­மாகும்.

நாட­ளா­விய ரீதியில் பர­வ­லாக பேசப்­படும் தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் ஒரு­வரின் மனை­வி­யான புலஸ்­தினி ராஜேந்­திரன் எனும் ஸாரா என்­பவர் படகு வழி­யாக இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­ற­தாக கூறப்­படும் பின்­ன­ணிகள் பற்­றியோ அல்­லது அவரை இலங்கை புல­னாய்வு அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்து விசா­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை பரிந்­து­ரைப்­பது குறித்தோ மதிப்­பீடு செய்யத் தவ­றி­யது அறிக்­கையில் காணப்­படும் பாரிய இடை­வெ­ளி­யாக உள்­ளது.

2021 பெப்­ர­வரி 16 ஆம் திகதி அன்று நடை­பெற்ற “புல­னாய்வு மற்றும் தேசிய பாது­காப்பு” குறித்த நேரலை பட்­ட­றையில், சமீ­பத்தில் இந்­திய புல­னாய்வு நிறு­வ­னங்கள் இலங்கை புல­னாய்வு பிரி­வி­னரால் தேடப்­பட்டு வந்த நபர்­களை கைது செய்­த­தாக இந்­திய உயர் ஸ்தானிகர் ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்தார். அப்­படி என்றால் ஏன் புலஸ்­தினி கைது செய்­யப்­ப­ட­வில்லை?.

கட்­டு­வாப்­பிட்டி புனித செபஸ்­டியன் தேவா­லயம் 21.07.2019 அன்று மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு மீண்டும் புனி­தப்­ப­டுத்­தப்­பட்ட அந்­நாளில் பேராயர் நிகழ்த்­திய உரை உல­க­ளவில் பிர­பல்­ய­மா­ன­தாகும். அந்த தேவா­லயம் ஒரு முஸ்லிம் பெயர் தாங்­கிய தற்­கொலை குண்­டு­தாரி மூலம் அழிக்­கப்­பட்ட தேவா­ல­யங்­களில் ஒன்­றாகும். அந்­நாளில் பேராயர் நிகழ்த்­திய உரை குறித்து ஆறு பேர் கொண்ட ஆணைக்­குழு அறிக்­கையில் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

பேராயர் மல்கம் கார்­டினல் ரஞ்சித் அவர்கள் நிகழ்த்­திய உரை:
“ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் ஒரு சர்­வ­தேச சதி­யாகும் என்றும் அது வெறு­மனே இஸ்­லா­மிய தீவி­ர­வாத இளை­ஞர்கள் சிலர் நடாத்­திய ஒரு சம்­ப­வ­மாக கருத முடி­யாது. குண்டுத் தாக்­கு­தலை மேற்­கொண்ட இளை­ஞைர்­களை சர்­வ­தேச சதி­கா­ரர்கள் பயன்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். உல­க­ளா­விய முஸ்லிம் சமூகம் சர்­வ­தேச சதிக் கும்­பல்­களின் வலையில் சிக்கி பலி­யா­கி­யுள்­ளனர். எவ்­வா­றா­யினும், உல­க­ளவில் குழப்­பங்­க­ளையும் நாச­கார செயல்­க­ளையும் உரு­வாக்கும் நோக்கில் இஸ்­லா­மிய கோட்­பா­டு­களை பயன்­ப­டுத்தும் சதி­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக உலக முஸ்­லிம்கள் ஒன்று திரள வேண்டும். தங்கள் சொந்த நலன்­களை அடைந்து கொள்­வ­தற்­காக இஸ்லாம் மதத்தை அவ­ம­திக்கும் சக்­தி­களை எதிர்த்து நிற்­ப­தற்­காக அவர்கள் ஏனைய சக மத சகோ­த­ரர்­க­ளோடு இணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தலைவன் அபூ­பக்கர் அல்-­பக்­தாதி, உலக வலி­மை­மிக்க வல்­ல­ரசு நாடொன்றின் கண்­கா­ணிப்பின் கீழ் இயங்கும் ஒரு இரா­ணுவ முகாமில் இருப்­ப­தாக நான் அறிக்­கை­யொன்றில் படித்தேன். நான் அந்த நாட்டின் பெயரைக் குறிப்­பிட மாட்டேன், ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் இந்த வலி­மை­யான நாட்டின் இயக்­கத்தில் வழி­ந­டாத்­தப்­படும் ஒரு இரா­ணுவ முகாமில் இருக்­கிறார் என்­பது மட்டும் தெளி­வான உண்­மை­யாகும். ஐ.எஸ்.ஐ.எஸ் தலை­மையை சாதா­க­மாக பயன்­ப­டுத்தி இந்த வல்­ல­ரசு நாடு தமது சொந்த நலன்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­துதான் எமக்கு வருத்­தத்தை தரு­கி­றது. உண்­மையில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் குறித்து இந்த தேசம் ஏற்­க­னவே அறிந்­தி­ருந்­ததா என நாங்கள் கேள்வி எழுப்­பு­கிறோம். சில விஷம சக்­திகள் சிங்­க­ள-­முஸ்லிம் கல­கங்­களை உரு­வாக்கி நம் நாட்டில் அமை­தி­யின்­மையை உரு­வாக்க முயற்­சிக்­கி­றதா? என்றும் நாங்கள் கேள்வி எழுப்­பு­கிறோம். ஒரு சில இளை­ஞர்கள் ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தற்கு அவர்­க­ளு­டைய இஸ்­லா­மிய மத சித்­தாந்தம் தான் கார­ண­மாக அமைந்­தது என்று நான் ஒரு­போதும் நினைக்­க­வில்லை” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

பேராயர் தனது கட்­டு­வா­பிட்டி உரையில் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் அவர்­களை மேற்கோள் காட்டி பேசும் போது, அதி­க­ரித்து வரும் ஆயுத உற்­பத்­திகள் கார­ண­மா­கவே உலகில் பல்­வேறு பிரச்­சி­னை­களும் மோதல்­களும் நில­வு­கின்­றன என தெரி­வித்­துள்ளார். இந்த தீவிர வெளிப்­பா­டு­களை ஆராய ஆணைக்­குழு ஏன் தவ­றி­விட்­டது என்­பது குறித்து புத்­தி­ஜீ­விகள் வட்­டங்­களில் நியா­ய­மான கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்கள் இலங்கை மண்ணில் ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சக இன, மதங்­க­ளுடன் நட்­பு­டனும் அமை­தி­யா­கவும் வாழ்ந்து வரு­கின்­றார்கள். ஆனால் இன­வாத அர­சியல் சக்­திகள் அவர்­க­ளது அமை­தி­யான இருப்பை ஒரு நாளில் குழி­தோண்டி புதைத்­துள்­ளார்கள். இந்த நாச­கார செயற்­பா­டு­க­ளுக்கு மதம் ஒரு போதும் கார­ண­மாக அமைந்­தது கிடை­யாது.

மே 2009 இல் எல்.ரீ.ரீ.ஈ தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், இஸ்­லாத்தைப் பற்­றியும் முஸ்­லிம்கள் மீதும் பிழை­யான கருத்­துக்­க­ளையும் பீதி­யையும் கட்­டி­யெ­ழுப்பி வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தற்­காக நன்கு திட்­ட­மி­டப்­பட்ட ஒரு தீய பிரச்­சாரம் தொடங்­கி­யது. துர­திஷ்­ட­வ­ச­மாக ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவ­னது சகாக்கள் செய்த குற்­றத்­திற்­காக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் குற்­ற­வாளிக் கூண்டில் நின்­ற­போது இந்த பிரசாரம் அதன் உச்­சத்தை தொட்­டது.

இன்று இந்த துன்­பியல் நிகழ்வு நடை­பெற்று இரண்டு ஆண்­டுகள் கழிந்த நிலையில் முன்­னணி சிங்­கள துறைசார் வல்­லு­னர்கள், மரி­யா­தைக்­கு­ரிய பௌத்த மத குருக்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் கூட இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளுக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் எத்­த­கைய சம்­பந்­தமும் இல்லை என வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்­துள்­ளனர். அதே­நேரம் அவர்கள் தற்­கொலை தாக்­கு­தல்­களால் பய­ன­டைந்­த­வர்­களை நோக்கி தமது சுட்டு விரல்­களை நீட்­டி­யு­முள்­ளனர். மேலும் பல பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் மற்றும் உள­வுத்­துறை அதி­கா­ரிகள் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யான சஹ்ரான் அந்தக் கும்­பலின் தலைவன் அல்ல என்றும் அவ­னுக்கு மேலே சிலர் இருந்­த­தா­கவும் வெளிப்­ப­டை­யாகக் கூறி­யுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும், கிறிஸ்­த­வர்கள், முஸ்­லிம்கள் மற்றும் ஏனைய அனை­வர்கள் மீதும் பெரும் துய­ரங்­களை ஏற்­ப­டுத்­திய இந்த கொடூ­ர­மான குற்றச் செயலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களை கண்டறிய வேண்டுமென பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை போலவே, முஸ்லிம்களும் ஏனையவர்களும் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். முஸ்லிம்கள் மீதும் பழிவாங்கும் தாக்குதல்கள், கொலைகள், நடைபெற்றுள்ளன. அவர்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்கள், தொழில்துறை சார்ந்த சொத்துக்கள் யாவும் கடமையில் இருந்த காவல்துறையின் கண்ணெதிரிலேயே தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது நாட்டு மக்களை இன-மத அடிப்படையில் பிளவுபடுத்தி மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை கண்டனம் செய்த மரியாதைக்குரிய சிங்கள ஆளுமைகளை பாராட்டும் அதே வேளையில் பேராயரின் கோரிக்கையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.