இர­ணை­தீவில் ஜனாஸா அடக்கம்: இன­மு­று­கலை தோற்­று­விக்கும் இன்­னுமோர் உத்­தியா?

0 487

எஸ்.என்.எம்.சுஹைல்

கொவிட்-19 வைரஸ் தொற்று கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்­யக்­கூ­டிய 6 இடங்கள் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது. ஆரம்­பத்தில் இர­ணை­தீவில் அடக்கம் செய்­வது குறித்து அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில், புத்­தளம், ஓட்­ட­மா­வடி மற்றும் மன்னார் உள்­ளிட்ட 6 பகு­திகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இர­ணை­தீவில் அடக்கம் செய்­வது தொடர்பில் ஏதேனும் சிக்­கல்கள் ஏற்­பட்டால் ஏனைய இடங்­களில் அடக்கம் செய்­வது தொடர்பில் தற்­போது ஆய்­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் வாழும் பிர­தே­சங்­களில் நீர் நிலை­களில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாத பகு­தி­களை தெரிவு செய்­யு­மாறு முஸ்லிம் சமூ­கத்­தினால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு கடந்த செவ்­வா­யன்று இடம்­பெற்­ற­போது “கொவிட் தொற்றால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் சடலம் தொடர்பில் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய இர­ணை­தீவில் சட­லங்­களை அடக்கம் செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் சுகா­தார தரப்­பி­னரால் தெளி­வு­ப­டுத்­தப்­படும்’’ என ஊட­கத்­துறை அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மாக கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

இதன் போது , ‘ இர­ணை­மடு தீவு பகு­தியில் மக்கள் வாழ்­கின்­றனர். கொழும்பில் உள்­ளதைப் போன்று குழாய் நீர் வசதி அந்த பகு­தி­களில் இல்லை. அங்­குள்ள மக்கள் நிலத்­தடி நீரையே பயன்­ப­டுத்­து­கின்­றனர். இவ்­வா­றான விட­யங்கள் கொவிட் தொற்றால் மர­ணிப்­ப­வர்­களின் சட­லங்­களை அந்த பகு­தி­களில் அடக்கம் செய்­வதில் தாக்கம் செலுத்­து­மல்­லவா ? ‘ என்று கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் கெஹெ­லிய , ‘ இவ்­வி­டயம் தொடர்பில் கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­வது தொடர்­பான விட­யத்தை ஆராயும் நிபு­ணர்கள் குழு­விற்கு கொண்டு செல்­வ­தா­கவும், அக்­கு­ழுவே இது­தொ­டர்­பாக விரி­வான முறையில் ஆராய்ந்து தீர்­மா­னங்­களை எடுக்கும்.’ என்றும் தெரி­வித்தார்.

அதே­போன்று குறித்த ஊடக மாநாட்டில் பங்­கேற்ற ஊட­க­வி­ய­லாளர் ஒருவர், இர­ணை­ம­டுவில் அடக்கம் செய்ய முடியும் என்றால் ஏன் நாட்டின் ஏனைய பாகங்­க­ளிலும் அடக்கம் செய்ய அனு­ம­திக்க முடி­யாது எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார். இது பற்­றியும் தான் நிபுணர் குழுவின் கவ­னத்­திற்குக் கொண்டு வரு­வ­தாக அமைச்சர் பதி­ல­ளித்தார்.

அர­சாங்­கத்தின் அறி­விப்பு தொடர்பில் எதி­ர­ணி­யினர் சாடி­யி­ருந்­தனர். முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் மூலம் பதி­வொன்றை இட்­டி­ருந்தார். “சட­லங்கள் இர­ணை­தீ­விற்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளன. இது விட­யத்தில் அவர்கள் பொய்­யான விளக்­க­மொன்றை உரு­வாக்­கி­ய­துடன், அவர்கள் கூறி­யதே சரி­யா­னது என்று தற்­போது நிரூ­பிக்க முற்­ப­டு­கின்­றார்கள். எவ்­வித எதிர்­பார்ப்­புக்­களை இழந்த சமூ­க­மொன்றை மீது மேலும் அடக்­கு­மு­றையைப் பிர­யோ­கிப்­ப­தனால் அவர்­க­ளுக்குக் கிடைக்­கக்­கூ­டிய ஒரு குரூர மகிழ்ச்­சிக்கு முடி­வில்­லாமல் போய்­விட்­டது. இன­வெ­றியே தொடர்ந்தும் நில­வு­கின்­றது” என்று ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இத­னி­டையே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்ம் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர். வவு­னி­யாவில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோவிந்தன் கரு­ணா­கரன், முஸ்லிம் நாடு­களின் ஆத­ரவைப் பெறும் நோக்­கி­லேயே இறந்த முஸ்லிம் மக்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்” என குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் “தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையே இன விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்தின் திட்­ட­மாக இர­ணை­மடு தீவில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்­கின்­றனர்” என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

“ஜனா­சாக்­களை வைத்து இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தும் கேவ­ல­மான அர­சியல் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் நிறுத்த வேண்டும்” என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். “ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டக்­கூ­டாது, அவை அடக்கம் செய்­யப்­பட வேண்டும். கிறிஸ்­த­வர்கள் அதி­க­மாக இருக்கும் ஒரு தீவை தெரிவு செய்து அங்கு ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முற்­ப­டு­வது, இன­வாத அர­சாங்­கத்தின் தந்­தி­ர­மாகும். இன்னோர் இனத்தை குழப்­பி­வி­டாது, முஸ்லிம் மக்­களின் விருப்­பப்­படி அவர்­களின் மைய­வா­டி­க­ளி­லேயே ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யுங்கள்” என அர­சாங்­கத்தை சாடி­யி­ருந்தார் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன்.

இது இவ்­வா­றி­ருக்க தமிழ் முற்­போக்கு கூட்­டணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை சாடி­யி­ருந்­தனர். “அடக்கம் செய்­வ­தற்கு பல இடங்கள் இருந்தும் அர­சி­ய­லுக்­காக இர­ணை­தீவு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் பகை­மையை உரு­வாக்கும் செயலே இது . எனவே, பொருத்­த­மான இடங்­களில் சட­லங்­களை புதைப்­ப­தற்கு இட­ம­ளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறி­வித்து, இது விட­யத்தில் மேலும் இழுத்­த­டிப்பு செய்­யக்­கூ­டாது.” வேலு­குமார் எம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்­திற்கு ஆளும்­கட்சி அமைச்சர் ஒரு­வரும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருக்­கின்றார். “கொவிட் 19 தாக்­கத்தின் கார­ண­மாக இஸ்­லா­மி­யர்கள் உயி­ரி­ழப்­பார்­க­ளாயின், அவர்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு இர­ணை­தீவு பொருத்­த­மான இட­மில்லை” என்று கடற்­றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா கூறி­யுள்ளார். இர­ணை­தீவு கட­லட்டை ஏற்­று­மதிக் கிரா­மத்தின் ஊடாக வரு­டந்­தோறும் சுமார் 25,000 அமெ­ரிக்க டொல­ருக்கு மேற்­பட்ட அந்­நியச் செலா­வ­ணியை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில், அர­சாங்­கத்தின் இத் தீர்­மானம் தேவை­யற்ற அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்தும் எனவும் எடுத்­து­ரைத்­துள்ளார்.

இத­னி­டையே, மக்­களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகு­தியில் கொரோனா தொற்­றோடு இறந்­த­வர்­களின் சட­லங்­களை புதைப்­ப­தற்­கான குழிகள் தோண்­டப்­பட்­டுள்­ளமை மக்கள் மத்­தியில் மேலும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இர­ணை­தீவு பகு­தியில் மக்­களின் அனு­ம­தியோ அல்­லது பொது அமைப்­புக்­களின் ஆலோ­ச­னை­களோ இன்றி கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களை அடக்கம் செய்ய கல்­ல­றைகள் அமைக்­கப்­பட்டு கொடிகள் நாட்­டப்­பட்­டுள்­ளது.

குறித்த நட­வ­டிக்­கை­யா­னது மிகுந்த வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், மதம் சார்ந்து அல்­லாமல் ஒவ்­வொரு மக்­களின் பாது­காப்பை கருத்தில் கொண்டே இரணை தீவு பகு­தியில் இவ்­வா­றான செயற்­பா­டு­களை எதிர்ப்­ப­தா­கவும், அந்த மக்கள் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து, கிளி­நொச்சி இரணை தீவு பகு­தியில் கொரோனா தொற்று கார­ண­மாக இறந்த உடல்­களை புதைப்­ப­தற்கு அர­சங்கம் மேற்­கொண்ட தீர்­மா­னத்தை எதிர்த்து நேற்­று­முன்­தினம் காலை 9 மணி­ய­ளவில் இரணை மாதா நகர் பகு­தியின் பங்­குத்­தந்தை மடுத்தீன் பத்­தி­னாதர் அடி­களார் தலை­மையில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்­றது.

குறித்த போராட்­டத்தில் கிளி­நொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட் தந்­தைகள், அருட் சகோ­த­ரிகள் மெசிடோ நிறு­வ­னத்­தினர், தேசிய மீனவ ஒத்­து­ழைப்பு இயக்­கத்­தினர் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­த­துடன் அர­சாங்­கத்­திற்கு அனுப்பி வைப்­ப­தற்­கான மக­ஜரும் வாசிக்­கப்­பட்­டது.

குறித்த மக­ஜரில், இர­ணை­தீவு வாழ் பொது மக்­க­ளான நாம், கொவிட் 19 பெருந்­தொற்­றினால் இறப்­ப­வர்­களின் உட­லங்­களை எமது இர­ணை­தீவு கிரா­மத்தில் அடக்கம் செய்ய அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லித்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு அர­சாங்­கத்­தையும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளையும் கேட்­டுக்­கொள்­கிறோம்.

இர­ணை­தீவு தீவகக் கிரா­ம­மா­னது, கிளி­நொச்சி மாவட்­டத்தின் பூந­கரி பிர­தேச சபைக்­குட்­பட்ட முழங்­காவில், நாச்­சிக்­குடா ஆகிய பிர­தான நிலப்­ப­ரப்பில் அமைந்­துள்ள கரை­யோரக் கிரா­மங்­களில் இருந்து 20 கிலோ மீற்­றர்கள் தூரத்தில் மன்னார் வளை­குடாக் கடலில் அமைந்­துள்­ளது. இது 417 குடும்­பங்­களின் பூர்­வீ­க­மாகும்.

யுத்­தத்தின் கார­ண­மாக, இத் தீவைச் சார்ந்த மக்­க­ளான நாம் எமது வாழ்­வா­தாரச் சாத­னங்­க­ளையும், கால்­நடை வளர்ப்­பு­க­ளையும், குடி­யி­ருப்­பு­க­ளையும் விட்டு விட்டு 1997 இல் முழு­மை­யாக கிளி­நொச்சி மாவட்­டத்தின் பிர­தான நிலப்­ப­ரப்பில் அமைந்­துள்ள முழங்­காவில் பிர­தே­சத்­துக்கு இடம்­பெ­யர்ந்தோம். இலங்கைக் கடற்­டை­யினர் இர­ணை­தீவை முழு­மை­யாக தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.

2009 இல் யுத்தம் முடி­வுக்கு வந்­தாலும், எமது இர­ணை­தீவு கிரா­மத்­துக்கு திரும்­பிச்­செல்ல நாங்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. 2016 இல் நாம் எமது மீள் குடி­யேற்­றத்தை வேண்டி ஜன­நா­யக ரீதி­யான அமை­தி­யான போராட்­டங்­க­ளையும் பரிந்­துரை நட­வ­டிக்­கை­க­ளையும் ஆரம்­பித்தோம்.

இத்­தீவின் மண் வள­மா­னது. மரங்கள் நிறைந்த இத்­தீவு பயிர்ச்­செய்­கைக்கும் கால்­நடை வளர்ப்­புக்கும் உகந்த இட­மாகும். இந்தத் தீவை கொவிட் 19 இனால் மர­ணிப்­ப­வர்­களின் இடு­கா­டாக மாற்­று­வது எமது வாழ்வை முழு­மை­யாக சீர­ழித்­து­விடும்.

சாதா­ரண வானி­லையின் கீழ் முழங்­காவில் கரை­யி­லி­ருந்து இர­ணை­தீ­வுக்கு படகில் செல்ல ஒன்­றரை மணித்­தி­யாலம் எடுக்கும். கடல் சீற்­ற­மாக இருந்தால் அல்­லது வானிலை பாத­க­மாக இருந்தால் கடற்­ப­யணம் தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே, வைர­சினால் இறந்த ஒரு­வரின் உட­லத்தை படகு மூலம் பாது­காப்­பாக 20 கிலோ மீற்­றர்கள் கடலைக் கடந்து கொண்டு செல்­வது எவ்­வ­கை­யிலும் சாத்­தி­யப்­ப­டா­த­தாகும்.

இர­ணை­தீவு வாழ் மக்­க­ளான நாம், எமது சக வடக்கு கிழக்கு வாழ் மக்­க­ளுடன் இணைந்து எமது சக முஸ்லிம் சமூ­கத்தின் நல்­ல­டக்க உரி­மைக்­கா­கவும் கட்­டாய தக­னத்தை எதிர்த்தும் தொடர்ச்­சி­யாக குரல்­கொ­டுத்து வரு­கிறோம்.

எமது நாட்டின் கலா­சா­ரத்­துக்கு அமை­யவும் உல­க­ளா­விய மனி­தா­பி­மான விழு­மி­யங்­க­ளுக்கு அமை­யவும் இறந்த உட­லங்­க­ளுக்கு உரிய கௌரவம் வழங்­கப்­பட வேண்­டு­மென நாம் வலி­யு­றுத்­து­கிறோம். கொவிட் தாக்­கத்­தினால் இறக்கும் நபர்­களின் உட­லங்­களை இடத்­துக்கு இடம் காவிச் செல்­வது இறந்­த­வர்­களின் கௌர­வத்­தையும் அவர்­களின் குடும்­பத்­தி­னரின் கௌர­வத்­தையும் மீறு­வ­தாகும்.
எனவே, கொவிட் பெருந்­தொற்­றினால் இறப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்யும் புதை­கு­ழி­யாக இர­ணை­தீவை மாற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விவே­க­மற்ற தீர்­மா­னத்தை நீக்­கு­மாறு அச­ராங்­கத்தை வலி­று­யுத்­து­கிறோம்.

அத்­துடன், முஸ்லிம் மக்­க­ளி­னதும் ஏனைய சமூ­கங்­க­ளி­னதும் நல்­ல­டக்க உரி­மைக்கு உரிய கௌர­வ­ம­ளித்து அவர்­க­ளுக்கு பொருத்­த­மான இடங்­களில் அடக்கம் செய்­வதை உறு­திப்­ப­டுத்­து­மாறும் கோரு­கிறோம் என குறித்த மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குறித்த மகஜர் நேற்­று­முன்­தினம் ற்றுமுன்தினம் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு மக்­களும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களும் கொரோனா தொற்றால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டு­வதை எதிர்க்கும் தெளி­வான நிலைப்­பாட்டில் இருக்­கின்­றனர். அத்­துடன் இர­ணை­மடு தீவில் ஜனா­ஸாக்­களை அடக்க அர­சாங்கம் மேற்­கொண்ட தீர்­மானம் தமிழ் முஸ்­லிம்கள் மத்­தியில் முரண்­பாட்டை தோற்­று­விக்கும் சதி முயற்சி என பல்­வேறு தரப்­பி­னரும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளனர். இந்­நி­லையில் அர­சாங்கம் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்ற இர­ணை­தீவு யோச­னையை கைவிட்டு, முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளி­லேயே உரிய பாது­காப்பு விதி­மு­றை­க­ளுடன் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய அனு­ம­திப்­பதே சுமார் ஒரு வருட கால­மாக நீடிக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.