பெண்களும் காதி நீதிபதியாக நியமிக்கப்படுவர்: நீதியமைச்சர்

0 539

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலையில் அத்­தி­ருத்­தங்­களின் கீழ் காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­களும் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.மேலும் தற்­போது காதி­நீ­தி­மன்­றங்­களில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டு­வரும் தாப­ரிப்பு வழக்­குகள் நீதவான் நீதி­மன்­றுக்கு பொறுப்­ப­ளிக்­கப்­படும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12லிருந்து 18 ஆக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யைக்­கோரி நீதி­ய­மைச்சர் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பித்­துள்ளார். தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12 என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 12 வய­துக்கும் குறைந்த முஸ்லிம் பெண்கள் திரு­மணம் செய்து கொள்ள வேண்­டு­மெனின் காதி­நீ­தி­வா­னிடம் அனு­மதி பெற்­றாக வேண்டும்.

முஸ்லிம் திரு­மண பதி­வின்­போது தற்­போது மண­மகன் மாத்­தி­ரமே கையொப்­ப­மி­டு­கிறார். மண­ம­களின் கையொப்பம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. திரு­ம­ணப்­ப­திவுப் புத்­த­கத்தில் மண­ம­கனும் மண­ம­களும் கையொப்­ப­மி­ட­வேண்டும் என்ற வகையில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

அத்­தோடு முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி புத்­தி­ஜீ­விகள், சட்­டத்­த­ர­ணிகள், உல­மாக்கள் அடங்­கிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளார். இக்குழுவின் தலைவராக வக்பு சபைத்தலைவர் சட்டத்தணி சப்ரி ஹலீம்தீன் பதவிவகிக்கிறார். இக்குழு தனது அறிக்கையையும், பரிந்துரைகளையும் விரைவில் நீதியமைச்சரிடம் கையளிக்கவுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.