தம்புள்ளை பள்ளிவாசல் சட்டவிரோதமானதல்ல

ஆணையாளருக்கு வக்பு சபை பதிலளிப்பு

0 539

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
1960 களில் தம்­புள்­ளையில் கம்­சபா (கிராம சபை) நிர்­வாக முறையே அமு­லி­லி­ருந்து பின்பு பிர­தேச சபை நிர்­வா­கத்தின் கீழ் உள்­வாங்­கப்­பட்­டது. இக் கால கட்­டங்­களில் கட்­டிட நிர்­மா­ணத்­திற்கு அனு­மதி பெற்­றுக்­கொள்ளும் நடை­முறை இருக்­க­வில்லை.

இக்­கால எல்­லையில் இங்கு நிர்­மா­ணிக்­கப்­பட்ட நிர்­மா­ணங்­க­ளுக்கு எவரும் அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வில்லை என்­பதை அறியத் தரு­கிறோம் என வக்பு சபையும், தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் தம்­புள்ளை மாந­கர ஆணை­யாளர் வி.எம்.ஆர்.பி.தச­நா­யக்­க­வுக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்­ளன.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலில் கடந்த பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி தம்­புள்ளை மாந­கர ஆணை­யா­ள­ரினால் அறி­வித்தல் ஒன்று ஒட்­டப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­றி­வித்­தலில் “1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை சட்­டத்தின் 8A (1) பிரிவை மீறி உங்­களால் அதி­கா­ர­ச­பை­யி­ட­மி­ருந்து உரிய அனு­மதி பெற்­றுக்­கொள்­ளாது கண்­டி­வீதி தம்­புள்­ளையில் வணக்­கஸ்­த­ல­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக எனக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2021.02.24 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்பு நிர்­மா­ணத்­திற்கு பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட அனு­மதி தொடர்­பான ஆவ­ணங்கள் இருப்பின் தம்­புள்ளை மாந­க­ர­சபை பொறி­யி­ய­லா­ள­ரிடம் சமர்ப்­பிக்­கும்­படி இத்தால் அறி­விக்­கின்றேன்.

அவ்­வாறு அறி­விக்­கப்­ப­டா­விட்டால் எந்த அறி­விப்­பு­மின்றி மேற்­கூ­றப்­பட்ட நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை சட்­டத்தின் 28A (3) பிரிவின் கீழ் நீதி­மன்ற உத்­த­ர­வினைப் பெற்று சட்­ட­வி­ரோத நிர்­மாணம் அகற்­றப்­படும் என அறி­யத்­த­ரு­கிறேன்’. எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த அறி­வித்­த­லுக்கே வக்பு சபையும், பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு பதிலை வழங்­கி­யுள்­ளன.
பதில் கடி­தங்­களில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது: தம்­புள்ளை பிர­தேச சபை நிர்­வா­கத்தின் கீழ் இருந்த சந்­தர்ப்­பத்தில் இப்­பள்­ளி­வா­சலை பிர­தேச சபை அங்­கீ­க­ரித்து ஏற்றுக் கொண்­டுள்­ளது. 2012 ஆம் ஆண்டு இப்­பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­போது அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­யிட்டு பல­கட்ட பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளதை ஞாப­கப்­ப­டுத்­து­கிறோம் என பள்­ளி­வாசல் நிர்­வாகம் அனுப்பி வைத்­துள்ள பதில் கடி­தத்தில் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பொறுப்­பா­க­வுள்ள கலா­சார அமைச்சின் கீழ் இயங்­கி­வரும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் இப்­பள்­ளி­வாசல் R/1990/MT/51 எனும் இலக்­கத்தின் கீழ் பள்­ளி­வா­ச­லாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம்.

இதன் பிறகு எமது பள்­ளி­வா­சலை வணக்­க­ம­டுவம் என தொடர்பு கொள்ளாது ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் என்ற பெயரில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். மேலதிக விபரங்கள் தேவைப்படின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ளும்படி வினயமாக தெரிவித்துக்கொள்கிறோம் என பள்ளிவாசல் நிர்வாகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.