20 இற்கு ஆதரவளித்த மு.கா. எம்.பி.க்கள் பிரதிபலனை தேர்தலில் கண்டுகொள்வர்

மு.கா. தலைவர் ஹக்கீமுடன் செவ்வி

0 705

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் கடந்த வார இறு­தியில் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்த கருத்­துக்­களின்
தொகுப்பு வரு­மாறு :

தொகுப்பு: ஏ.ஆர்.ஏ.பரீல்

20ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்த வாக்­கெ­டுப்­பிற்கு உங்­களைத் தவிர கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடக சந்­திப்­பொன்றின் போது, கட்சித் தலை­வரின் அனு­ம­தி­யு­டன்தான் தாம் 20ஆவது திருத்­தத்­திற்கு மன­சாட்­சி­யுடன் வாக்­க­ளித்­த­தாக கூறி­யி­ருந்தார். அவ்­வா­றா­னதோர் அனு­ம­தியை நீங்கள் அளித்­தி­ருந்­தீர்­களா?

இவ்­வி­டயம் தொடர்பில் உச்­ச­பீட கூட்­டத்தின் போது தலை­வ­ருடன் சேர்ந்து பாரா­ளு­மன்றக் குழு முடி­வு­களை எடுக்க வேண்டும் என்ற அனு­ம­தியைக் கட்சி தந்­தி­ருந்­தது. அந்த அடிப்­ப­டையில் நாங்கள் பல தட­வைகள் கூடி எங்­க­ளுக்குள் பேசிக்­கொண்டோம். இறுதிக் கட்­டத்தில் அர­சாங்­கத்தின் தரப்­பி­லி­ருந்தும் எங்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்­கான பல முயற்­சிகள் இருந்­தன.
அந்தப் பின்­ன­ணியில் கட்­சியின் தலைமை எடுக்­கின்ற முடி­வுடன் ஒத்­துப்­போக வேண்டும் என்­பதில் நான் இல­கு­வாக விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்­ய­வில்லை. எனது பாரா­ளு­மன்ற உரை­யிலும் கூட 20ஆவது திருத்த அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள பிர­தி­கூ­லங்­களை மிகத் தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். அந்த அடிப்­ப­டையில் தான் உறுப்­பி­னர்­களும் வாக்­க­ளிப்­பார்கள் என்று இறுதி வரையில் நினைத்தேன். ஓரி­ரு­வ­ரா­வது என்­னுடன் ஒத்துப் போவார்கள் என கடைசி நேரம் வரை எதிர்­பார்த்தேன். அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.
அதன் பின்னர் மக்கள் மத்­தியில் தாங்கள் தப்­பித்­துக்­கொள்­வ­தற்­காக தலை­வரை பலி கொடுக்­கின்ற நோக்­கத்தில் ஒரு சிலர் பேசி வரு­வது வேத­னைக்­கு­ரி­யது. அது கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களின் கண்­ட­னத்­திற்­கு­ரி­யதும் கூட. நாட­ளா­விய ரீதியில் இவ்­வி­ட­யத்­தினால் கடு­மை­யான விமர்­ச­னங்கள் எனக்கு எதி­ரா­கவும் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. அண்­மையில் இடம்­பெற்ற கட்­சியின் உச்­ச­பீட கூட்­டத்தின் போதும் இதனை மிகத் தீவி­ர­மாக ஆராய்ந்தோம்.

20ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்த வாக்­கெ­டுப்­பிற்கு முன்னர் நீங்கள் ஜனா­தி­பதி, பிர­தமர் அல்­லது பஷில் ராஜ­ப­க்ஷவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போது நீங்கள் 20ஆவது திருத்­தத்­திற்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தா­கவும், உங்கள் கட்­சியின் உறுப்­பி­னர்கள் ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பார்கள் என்றும் கூறி­ய­தாக சில சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அவ்­வாறு வாக்­கெ­டுப்­பிற்கு முன்னர் அவர்­களைச் சந்­தித்­தீர்­களா?

நான் சென்று அவர்­களை சந்­திக்­க­வில்லை. அவர்­க­ளா­கவே தான் என்னை வந்து சந்­தித்­தார்கள். ஒரு நாட்டின் அர­சியல் தலை­வர்கள், உச்ச மட்­டத்தில் இருப்­ப­வர்கள் சந்­தித்து கதைக்­கின்ற போது அதனை மறுப்­ப­தென்­பது கட்சித் தலைவன் என்ற அடிப்­ப­டையில் சாணக்­கி­ய­மான விட­ய­மல்ல. அவ்­வாறு சந்­தித்த போதும் கூட, இவ்­வி­டயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து முடி­வு­களை சேர்ந்தே எடுப்போம் என்றே கூறி­யி­ருந்தோம்.
நாங்கள் இவ்­வி­டயம் தொடர்பில் தீர்­மானம் எடுப்­ப­தற்கு அவர்கள் தரப்­பி­லி­ருந்து கிடைக்­கப்­பெறக் கூடிய வாக்­கு­று­திகள் குறித்தும் சமூ­கத்தில் நில­வு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் அவர்­க­ளது நிலைப்­பா­டு­களை தெரிந்து கொள்ள வேண்டி இருந்­தது. கடைசி இரண்டு நாட்­க­ளுக்குள் அந்த விட­யங்­க­ளுக்­கான தீர்­வு­களோ, வாக்­கு­று­தி­களோ குறித்த தரப்­பு­க­ளி­லி­ருந்து எமக்கு கிட்­டா­த­போது நான் என்­னு­டைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை எச்­ச­ரித்­தி­ருந்தேன்.
இத்­த­கை­ய­வர்­களை நம்பி வாக்­கெ­டுப்பில் ஆத­ரவு தெரி­விப்­பதன் மூலம் எதுவும் சாத்­தி­ய­மா­காது என்ற சந்­தேகம் வலுத்து வரு­கின்­றது. எனவே, இது குறித்து மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தியில் மிகத் தெளி­வாக கடைசி ஓரிரு நாட்­க­ளுக்குள் திரும்பத் திரும்ப கூறி வந்­தி­ருக்­கின்றேன்.

நஸீர் அகமட் அளவுக்கு மீறி கதைத்து வருகின்றார். இதனுடைய விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டிவரும்.
பாராளுமன்றத்திலும் கூட, அவர் வாக்களிப்பு நேரத்தில் நடந்து கொண்ட முறை மிக மோசமான கேலியான விடயமாக மாறிவிட்டது. கொஞ்சம் பக்குவம் போதாது என்று நினைக்கின்றேன். இயன்றவரை தன்னுடைய நாவைக் கட்டுப்படுத்திக்
கொள்வதே அவருக்கு நன்மை தரும்.

அந்த சந்­திப்பில் நீங்கள் 20ஆவது அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­கவும், உங்கள் கட்சி உறுப்­பி­னர்கள் ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பார்கள் என்ற உறு­தி­மொ­ழியை வழங்கி இருந்­தீர்­களா?

என்னைப் பொறுத்­த­மட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் நிலைப்­பா­டுகள் சம்­பந்­த­மா­கவும் வித்­தி­யா­ச­மான மன­நி­லைகள் காணப்­பட்­டதை நான் அவ­தா­னித்­தி­ருந்தேன். அந்த அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒற்­று­மையைப் பேணிக் கொள்ள வேண்டும். அவர்கள் தலை­மைத்­து­வத்தின் கட்­டுப்­பாட்டை மீறி நடக்­காமல் இயன்­ற­வரை பாது­காத்துக் கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக இறுதிக் கட்டம் வரை நிறைய முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தேன். அது பலிக்­காமல் போனமை குறித்து கடும் விசனம் எனக்குள் இருக்­கின்­றது.
ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டைய தனிப்­பட்ட கௌரவம் மற்றும் எதிர்­கால அர­சி­யலில் என்னால் எது­வித பெரிய பாதிப்­பு­களும் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­ப­தற்­காக மிகவும் மௌன­மாக இருந்து வந்­துள்ளேன். சில விட­யங்­களை வெளிப்­ப­டை­யாகப் பேசு­வதைத் தவிர்த்து வந்­துள்ளேன்.
அவ்­வப்­போது உறுப்­பி­னர்கள் சிலர் என்னைச் சீண்டிப் பார்க்­கின்ற விதத்­திலும், வேறு சக்­தி­களின் முக­வர்­க­ளாக மாறி செயற்­ப­டு­வ­தாக அவர்­களைக் காட்­டிக்­கொள்­கின்ற நிலை­மை­களும் இருந்­தன.
என்னைப் பொறுத்­த­மட்டில் தங்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வந்த கட்­சிக்குப் பொறுப்புக் கூற வேண்டும். அடுத்த கட்­ட­மாக தங்­க­ளது கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். அதற்­கப்பால் தமக்கு வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். அதற்கும் அப்பால் நாட்டின் நலன் குறித்து பரந்­து­பட்ட தேசிய நலன் சார்ந்து நாட்­டிற்குப் பொறுப்புக் கூற­வேண்டும். அதே­போல மக்கள் பிர­தி­நி­திகள் என்ற அடிப்­ப­டையில் சர்­வ­தேச ரீதி­யி­லான பொறுப்புக் கூறவும் வேண்டும். இந்த அடிப்­ப­டையில் இவர்­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் பொறுப்புக் கூற வேண்­டிய விட­யத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தியில் ஏற்­றத்­தாழ்­வுகள் இருப்­பதைக் கண்­டி­ருக்­கின்றேன்.
வாக்­க­ளித்த பிறகு அவர்­க­ளது நட­வ­டிக்­கை­களில் வித்­தி­யா­ச­மான அணு­கு­முறை இருப்­பதை கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களும், வாக்­கா­ளர்­களும் அடை­யாளம் கண்­டி­ருக்­கின்­றார்கள். அதன் அடிப்­ப­டையில் தான் அவர்­க­ளது அர­சியல் எதிர்­கா­லமும் அமையும் என்­பதை அவர்கள் மனதில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடக சந்­திப்பில் “மனோ கணே­சனின் கட்சி அர­விந்த குமாரின் விவ­கா­ரத்தில் தீர்­மா­னத்தை எடுத்­ததைப் போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனது விவ­கா­ரத்தில் முடி­வெ­டுக்­க­வில்லை. ஏனென்றால், கட்­சி­யி­னு­டைய அனு­ம­தியை பெற்­றுத்தான் நாங்கள் வாக்­க­ளித்தோம்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார். நீங்கள் ஏன் இவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் இது­வ­ரையில் மேற்­கொள்­ள­வில்லை? இவர்­களை ஏன் கட்­சி­யி­லி­ருந்து இது­வரை நீக்­க­வில்லை?

அவர்­க­ளி­டத்தில் இவ்­வி­டயம் தொடர்பில் கட்­சியின் உச்­ச­பீட பதவி வழி­யான கூட்­டத்தின் போதும் கடந்த டிசம்பர் 31 ஆம் திக­திக்கு முன்­ன­தாக எழுத்து மூல­மான விளக்­கத்தை கோரி­யி­ருந்தோம். அதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருவர் ஓர­ள­விற்கு தங்­க­ளது செயற்­பா­டுகள் குறித்தும், வாக்­க­ளித்­ததன் மூலம் கட்சி தலை­மைக்கு ஏற்­பட்ட தலை­கு­னிவு சம்­பந்­த­மாக தாங்கள் வருத்­தப்­ப­டு­வ­தா­கவும், இந்தக் கட்­சியில் தாங்கள் வகிக்­கின்ற பத­வி­க­ளி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நீங்­கிக்­கொள்ளத் தயா­ராக இருப்­ப­தா­கவும் எங்­க­ளுக்கு எழுத்து மூல­மாக அறி­வித்­தி­ருந்­தார்கள்.
இந்த நிலையில் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விளக்­க­மெ­துவும் தராமல், கால அவ­காசம் தர­வேண்­டு­மென்ற கோரிக்­கை­யொன்றைக் கடிதம் மூலம் கோரி­யி­ருந்­தார்கள். எழுத்து மூலம் விளக்­கத்தை கோரியும், அதற்­கான விளக்­கத்­தை­ய­ளிக்­காமல், இன்று பகி­ரங்­க­மாக கட்­சியின் தலை­மை­யோடும், உச்­ச­பீ­டத்­தோடும் மோதிக் கொள்­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒட்­டு­மொத்த கட்சி நலன் குறித்த அக்­கறை இல்லை என்­பது மிகத் தெளி­வா­கின்­றது. இத­னு­டைய பிர­தி­கூ­லங்கள் என்ன என்­பதை காலப் போக்கில் அவர்­க­ளா­கவே உணர்ந்­து­கொள்­ளத்­தக்­க­தாக கட்­சியின் நட­வ­டிக்­கைகள் அமையும்.

கட்சியுடைய ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரை தான் கட்சித் தலைமையிலும் நான் இருப்பேன். அந்த செல்வாக்கை நான் இழந்தால் இந்தக் கட்சித் தலைமையில் நீடித்திருப்பதை ஒருபோதும் நான் விரும்பமாட்டேன்.

சஜித் பிரே­ம­தா­ஸவை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காகத் தான் தாங்கள் எழுத்து மூல விளக்­கத்தை கோரி­யி­ருக்­கின்­றீர்­களே தவிர கட்­சிக்குள் அவ்­வா­றான எவ்­வித பிரச்­சி­னை­களும் இல்லை என எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­தி­ருந்தார். இது உண்­மையா?

இவை­யெல்லாம் புள்ளி போட்டுக் கொள்­வ­தற்­காக கதைக்­கின்ற கதை­க­ளாகும். சஜித் பிரே­தாஸ என்ற மூன்றாம் நபரை இதனுள் இழுத்து வர­வேண்­டிய நோக்கம் அர­சாங்­கத்தை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே என்­பது நன்கு தெரி­கின்­றது. ஏனென்றால், சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கும், இந்த விவ­கா­ரத்­திற்கும் இடை­யி­லுள்ள சம்­பந்தம் மிக அற்­ப­மா­னது. உச்­ச­பீ­டத்தில் அவ­ரு­டைய (ஹரீஸ்) நட­வ­டிக்கை சம்­பந்­த­மாக பலத்த எதிர்ப்பு உள்­ளது என்­பது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு மிக நன்­றா­கவே தெரியும். அந்த எதிர்ப்பைச் சமா­ளிப்­ப­தற்­காக இவ்­வாறு வித்­தி­யா­ச­மான கோணங்­களில் கதைப்­பது அவ­ருக்கே வாடிக்­கையாய் போன விட­ய­மாகும்.
எனவே, இத­னு­டைய பிர­தி­பலன் எவ்­வாறு இருக்­கு­மென்­பதை தேர்தல் காலங்­களில் அவர் கண்­டு­கொள்வார் என்­பதில் எவ்­வி­த­மான ஐயப்­பாடும் கிடை­யாது.
நான் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட ரீதி­யாக நட­வ­டிக்கை எடுத்து நீக்­கு­வ­தற்கு எத்­த­னிக்­க­வில்லை என்ற கேள்வி எழு­கின்­றது. இது நியா­ய­மான கேள்வி தான். என்னைப் பொறுத்­த­மட்டில் சட்­டத்தின் ஆட்­சியே கேள்­விக்­குள்­ளா­கி­யுள்ள நிலையில் சட்ட நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வது வெறு­மனே மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வழி­யாக மட்­டுமே அமை­யுமே தவிர, அவர்­க­ளது பத­விகள் பறி­போகும் என யாரும் எதிர்­பார்க்க முடி­யாது.
அவர்கள் கட்­சி­யி­டத்தில் தாங்கள் மன்­னிப்புக் கேட்­கின்றோம் என்ற நிலைப்­பாட்டை கடந்த உயர்­பீடக் கூட்­டத்தின் போது முன்­வைத்­தார்கள். அதற்கு அப்பால் சென்று மக்­க­ளி­டத்­திலும் மன்­னிப்பு கோரி­யாக வேண்டும் என்­பது பெரும்­பா­லா­னோரின் எதிர்­பார்ப்­பாக அமைந்­தது. ஆனால், அதை அவர்கள் செய்ய வில்லை. அவர்கள் அமர்ந்­தி­ருந்த செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் அவ்­வாறு தெரி­விக்­காத நிலையில் உட­ன­டி­யாக சபையில் இருந்த நான் எழுந்து சென்று ‘‘இவர்கள் நாங்கள் எதிர்­பார்த்த பிர­கா­ரமும், உச்­ச­பீ­டத்­திற்கு வாக்­கு­று­தி­ய­ளித்­ததன் பிர­கா­ரமும் இவ்­வி­ட­யத்­திற்­காக பொது மக்­க­ளி­டத்­திலும் மன்­னிப்பு கோரு­கின்றோம் என்று சொல்லத் தவ­றி­யது பிழை­யா­னது’’ என்­பதை தெளி­வாகச் சொல்­லி­யி­ருந்தேன்.

இவர்கள் பொது மக்­க­ளி­டத்தில் மன்­னிப்பு கோரா­மை­யினால், மு.கா.வின் தலை­மைத்­து­வத்தில் ஏதோ பல­வீ­ன­மி­ருப்­ப­தாக வெளியில் பேசப்­ப­டு­கின்­றதே? உண்­மையில் தலை­மைத்­துவம் பல­வீ­ன­ம­டைந்­து­விட்­டதா?

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கண்­டிப்­பாக நடத்­து­வதன் மூலம் அவர்­களை இயன்­ற­வரை கட்­சியின் தீர்­மா­னங்­க­ளுக்­கேற்ப செயற்­பட வைப்­ப­தற்­கான மிக தீர்க்­க­மான உறு­தி­யான நிலையில் தலை­மைத்­துவம் இருந்­தாக வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாக இருக்­கி­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரை நாங்கள் அடிக்­கடி ஆட்­சி­யா­ளர்­களின் ஆசை­வார்த்­தை­க­ளுக்கு பலி கொடுத்து இருக்­கின்றோம்.
மறைந்த தலை­வ­ரு­டைய காலத்­திலும் கூட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருவர் மற்றும் தேர்­தலின் பிறகு முத­லா­வது பாரா­ளு­மன்ற வாக்­கெ­டுப்பில் ஒரு­வரும் கூட இந்தக் கட்­சியின் தலை­வ­ரு­டைய கட்­ட­ளைக்குப் புறம்­பாக செயற்­பட்ட வர­லாறும் உண்டு.
எனவே, இது தனிப்­பட்ட கட்சித் தலை­மை­களின் பல­வீனம் என்­ப­தல்ல. ஒவ்­வொரு கட்­டத்­திலும் நாங்கள் பொது நல­னையும், கட்சி நல­னையும் முன்­னி­றுத்தி, எடுத்த எடுப்­பி­லேயே புதிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு­சில அமர்­வு­க­ளி­லேயே ஆட்­சி­யா­ளர்­களின் விருப்­பத்­திற்­கி­ணங்க உறுப்­பி­னர்­களை சோரம் போக வைப்­ப­தற்கு இடம் கொடுக்க முடி­யாது. இயன்­ற­வரை பாரா­ளு­மன்ற ஆச­னங்­களின் பெறு­மா­னத்தில் குறைந்­த­பட்ச நன்­மை­யை­யா­வது கட்சி அடைந்­தாக வேண்டும்.
எனவே, அந்த அடிப்­ப­டையில் தான் மிகவும் பொறு­மை­யோடு நின்று இவர்­களை கட்சிக் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தான் நான் தொடர்ந்தும் இருந்து வரு­கின்றேன். இவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கின்ற பட்­சத்தில் எத­னையும் சாதித்­து­விட முடி­யாது. குறைந்­த­பட்சம் கட்சித் தலைவர் காட்­ட­மான முடிவை எடுத்தார் என்ற நிலைப்­பாட்டை கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு கொடுக்­குமே தவிர, ஈற்றில் மிக உல்­லா­ச­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாங்கள் நினைத்த மாதிரி போய் ஆட்சி அதி­கா­ரத்தின் அனு­கூ­லங்­களை வைத்துக் கொண்டு தங்­க­ளு­டைய சொந்த நலன்­க­ளுக்­காக செயற்­ப­டு­கின்ற நிலை­மைகள் தான் நடக்கப் போகின்­றன. ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய பெறு­மானம் குறித்தும், கட்சித் தலை­மை­யுடன் கொண்ட உறவு குறித்தும் எனக்­கொரு கணிப்­பீடு இருக்­கின்­றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை நாங்கள் அடிக்கடி ஆட்சியாளர்களின் ஆசைவார்த்தைகளுக்கு பலி கொடுத்து இருக்கின்றோம்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அஹ்மட் ஐக்­கிய மக்கள் சக்­தி­யோடு முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் பய­ணிக்க முடி­யாது என்று கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இந்த பின்­பு­லத்தில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் தொடர்ந்தும் பய­ணிப்­பது சாத்­தி­யப்­ப­டுமா?

நஸீர் அஹ்மட் என்­பவர் கட்சி அல்ல. கட்­சி­யு­டைய தீர்­மானம் சம்­பந்­த­மாக அவ­ருக்கு பேசு­வ­தற்கு எது­வித அனு­ம­தியும் நாங்கள் கொடுத்­த­தில்லை. அதே­நேரம் அவர் அவ்­வாறு சொல்­லி­விட்டார் என்­ப­தற்­காக நாங்கள் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் தான் பய­ணிக்க வேண்டும் என்ற நிய­தியும் எமக்கு கிடை­யாது. அவர் அள­வுக்கு மீறி கதைத்து வரு­கின்றார். இத­னு­டைய விப­ரீ­தங்­களை அவர் சந்­திக்க வேண்­டி­வரும். சம்­பந்­த­மில்­லாமல் அவ­ச­ரப்­பட்டு கோபப்­பட்டு கருத்­துக்­களை சொல்­வதன் மூலம் அவர் அவ­ரையே அவ­மா­னப்­ப­டுத்திக் கொள்­கின்றார்.
பாரா­ளு­மன்­றத்­திலும் கூட, அவர் வாக்­க­ளிப்பு நேரத்தில் நடந்து கொண்ட முறை மிக மோச­மான கேலி­யான விட­ய­மாக மாறி­விட்­டது. கொஞ்சம் பக்­குவம் போதாது என்று நினைக்­கின்றேன். அவ­ருக்கு உயர் பத­வி­களைக் கொடுத்து அலங்­க­ரித்த இந்தக் கட்சி அவரால் நன்­மை­ய­டையும் என்று நாங்கள் எதிர்­பார்த்தோம். ஆனால் அது நடந்து இருக்­கின்­றதா என்ற கேள்வி இப்­போ­ழுது எம்­மத்­தியில் எழுந்­துள்­ளது. இயன்­ற­வரை தன்­னு­டைய நாவைக் கட்­டுப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம் நன்­மை­ய­டைவார் என்­பது தான் என்­னு­டைய நிலைப்­பாடு.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரின் செயற்­பா­டு­களைப் போல் எல்­லா­வற்­றையும் பகி­ரங்­க­மாக போட்டு உடைத்துக் கதைக்க வேண்டும் என்ற வழமை எனக்கு கிடை­யாது. பல­மான தலை­வ­ரொ­ருவர் பல­வீ­ன­மான ஒரு சிலரின் செயற்­பா­டு­க­ளினால் அசந்து போய்­விட வேண்­டிய அவ­சியம் இல்லை.
கட்­சியின் உறுப்­பி­னர்கள் கட்­டுப்­பாட்டை மீறி செயற்­ப­டு­கின்ற போது அவர்கள் கண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பது ஒரு­புறம். ஆனால், கட்­சி­யு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளு­டைய செல்­வாக்கும், நன்­ம­திப்பும் இருக்கும் வரை தான் கட்சித் தலை­மை­யிலும் நான் இருப்பேன். அந்த செல்வாக்கை நான் இழந்தால் இந்தக் கட்சி தலைமையில் நீடித்திருப்பதை ஒருபோதும் நான் விரும்பமாட்டேன்.
எஞ்­சி­யி­ருக்­கின்ற பாரா­ளு­மன்ற ஆயுட் காலத்தில் அவர்­க­ளு­டைய ஆச­னங்­களின் பெறு­மானம் இந்தக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தி­வி­டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்­கான உச்ச கட்ட முயற்­சியை நான் இறுதிக் கட்டம் வரை செய்­து­கொண்டு தான் இருக்­கின்றேன். இன்றும் அந்த நிலைப்­பாட்டில் தான் இருக்­கின்றேன். ஈற்­றிலே தீர்­மானம் எடுப்­பது மக்கள், கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள், அடிமட்ட போராளிகள். அவர்களுடைய மன உணர்வுகள் சம்பந்தமான பெறுமானத்தை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, தலைமையும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும். தான் தோன்றித்தனமாக நடப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை ஒரு தேர்தல் வரும் போது தெரிந்து கொள்ளலாம். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.