இரவில் தூங்கி காலையில் விழித்­த­போது கண் பார்­வையை இழந்­தி­ருந்தேன்

16 வயதில் திடீ­ரென பார்­வையை இழந்த ஆஸிக்கின் கண் கலங்க வைக்கும் கதை

0 1,050

எச்.எம்.எம்.பர்ஸான்

‘‘நான் சின்ன வய­சில ஸ்கூல்ல படிக்­கக்க மத்­ர­ஸா­வுல சேர்ந்து மார்க்கக் கல்­வியை படிக்­கணும் என்­டுதான் ஆசை. அத­னால நானே மத்­ர­ஸா­வுல சேர்­ர­துக்கு போம் எடுத்து அத என்ட கையா­லேயே நிரப்பி மத்­ர­ஸா­வுல சேர்ந்தன்’’ என்று தனது மத்­ரஸா கல்வி வாழ்க்கை பற்றிக் கதைக்க ஆரம்­பித்தார் ஆஸிக் அஹமட்.

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட மாவ­டிச்­சேனை எம்.பீ.சீ.எஸ்.குறுக்கு வீதி எனும் முக­வ­ரியில் வசித்து வரு­கிறார் ஆஸிக் அஹமட்.

சீனி முகம்­மது முகம்­மது முஸ்­தபா, ஆதம் பாவா பெள­சியா தம்­ப­திக்கு 2001 ஆம் ஆண்டு பிறந்­த­வர்தான் இவர்.

மார்க்கக் கல்­வியில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் வாழைச்­சேனை – நாவ­லடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்­லூ­ரியில் கல்வி கற்று வரு­கிறார்.

2017 ஆம் ஆண்டு தன்­னு­டைய இரண்டு கண்­களும் திடீ­ரென்று பாதிப்­ப­டைந்த நிலையில் வாழ்ந்­து­வரும் ஆஸிக் அஹமட், பார்­வை­யி­ழந்த பின்­ன­ரான தனது அனு­ப­வங்­களை ‘சொல்ல மறந்த கதை’­யுடன் இவ்­வாறு பகிர்ந்து கொள்­கின்றார்.

‘‘என்னை மத்­ர­ஸாவில் சேர்ப்­ப­தற்கு இன்­ர­வியூ செய்­தார்கள். அல்­ஹம்­து­லில்லாஹ். அதில நான் சிறந்த புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் நிலை பெற்று தெரிவு செய்­யப்­பட்டன்.

அதைப்­போ­லவே சேர்ந்த காலத்தில் இருந்து இன்­று­வ­ரைக்கும் மத்­ர­ஸாவில் நான் அனைத்துப் பரீட்­சை­க­ளிலும் முத­லா­வது ஆளா­கத்தான் வந்­து­கொண்டு இருக்கன்.

2017 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் ஒருநாள் நான் வழக்­கம்­போல இரவில் தூங்­கிட்டு மறுநாள் காலையில் எழும்பி கிதாபு வாசிக்கும் போது எனக்கு கண் பார்வை தெரி­யாம போயிட்டு. அதனால் கடும் கவ­லையும், அதிர்ச்­சியும் அடைந்த நான் உட­னேயே மட்­டக்­க­ளப்­பி­லுள்ள ஹொஸ்­பிடல் ஒன்­றுக்குப் போய் கண்ணைக் காட்­டினேன். அவங்க கண்ணை செக் பண்ணி பார்த்­துட்டு கண்டி ஹொஸ்­பி­ட­லுக்கு போய் காட்­டுங்க என்­டாங்க.

நான் கண்டி ஹொஸ்­பி­ட­லுக்கு போய் அட்மிட் ஆகினன். அங்க கண்ணை செக் பண்­ணிட்டு கண்­ணுல எந்தப் பிரச்­சி­னையும் இல்ல, கண்­ணுல வார நரம்­பு­லதான் பிரச்­சினை இருக்கு என்டு சொன்­னாங்க. அதற்­கான வைத்­தி­யத்­தையும் நாங்க செஞ்சி வாரோம்.

மத்­ரஸா கல்­வி­யில எனக்கு சரி­யான விருப்பம். அதால கண் பார்வை எனக்கு இப்­படி இருந்­தாலும் என்­னால மத்­ரஸா கல்­வியை விட்டுக் கொடுக்க முடி­யல. நான் மத­ர­ஸா­வுக்கு தொடர்ந்தும் போயிட்டே இருக்கன்.

மத்­ர­ஸா­வுக்கு போன பிறகு அங்கு எனக்கு நல்ல ஒத்­து­ழைப்­புக்கள் கிடைச்­சுச்சு. என்­னு­டைய கல்­லூரி அதிபர் ஹபீப் ஒஸ்தாத் மற்றும் ஆசி­ரி­யர்கள் எனக்கு நம்­பிக்கை ஊட்டும் வகையில் என்­னுடன் நடந்து கொண்­டார்கள்.

நான் கண்­பார்வை இழந்த ஆரம்­பத்தில் கடும் கவ­லைப்­பட்டேன். என்ட மற்ற நண்­பர்கள் எல்லாம் ஓய்வு நேரங்­களைக் கழிக்க அங்கும், இங்கும் ஓடித் திரி­வார்கள். ஆனால் என்னால் முடி­ய­வில்லை என்று நான் அப்­போது கடும் கவ­லைப்­பட்டேன். ஒவ்­வொரு நாளும் அதை நினைத்து நினைத்தே நான் கத்­துவன்.

சந்­தோ­ச­மாக இருக்­கிற வய­சுல நமக்கு இப்­படி ஒரு சோதனை வந்­துட்டே என்று நான் ஆரம்­பத்தில் கடு­மை­யாக கவ­லைப்­பட்டேன்.

நான் உள­வியல் ஆலோ­ச­னை­களைப் பெற்றேன். அதி­லி­ருந்து நான் என்னில் சில மாற்­றங்­களை கொண்டு வந்தேன். என் கண்­பார்­வையை அல்­லாஹ்தான் எடுத்தான். அதை அவனே தருவான் என்ற எண்ணம் எனக்கு வந்­திச்சு.

யாருக்கு அல்லாஹ் கண் பார்­வையை எடுத்து அதில் அவர்கள் பொறு­மை­யாக இருக்­கின்­றார்­களோ அல்லாஹ் அவர்­க­ளுக்கு சுவ­னத்தை கொடுப்பான் என்ற இந்த ஹதீஸை படித்­ததும் என் மன­துக்கு ஆறுதல் கிடைத்­தது.

அதற்குப் பிறகு நான் கண் வருத்­தத்தை நினைத்து கவ­லைப்­ப­டு­வது கிடை­யாது. இப்­போது நிறை­யப்பேர் வந்து கேட்­பார்கள். என்ன ஆஸிக் முதல்­மா­திரி கவ­லைகள் இல்­லாமல் இப்ப சந்­தோ­ச­மாக இருக்­கி­றீங்க, கண் பார்வை வந்­துட்டா என்­றெல்லாம் கேட்­பார்கள்.

ஆரம்­பத்தில் கடும் கவ­லைப்­பட்டேன். அதனால் என்ட உடல் மெலிந்­து ரொம்­பவும் மோச­மான நிலையில் இருந்­துச்சு. ஆரம்­பத்தில் என்ட கண்­பார்வை தெரி­யாம நான் எப்­படி இருந்­தேனோ அப்­ப­டித்தான் இப்­பயும் இருக்கு. இருந்தும் நான் கவ­லைப்­ப­டல. நான் சந்­தோ­ச­மாத்தான் இருக்கன்.

நான் கண்­பார்வை இல்­லாத போதுதான் 2018 ஆம் ஆண்டு க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை எழு­தினேன். அது என் வாழ்வில் மறக்க முடி­யாத சம்­பவம். எனக்­கென்று தனி­யான பரீட்சை அறை. அதில் ஒரு ஆசி­ரியர். கேள்­வி­களை வாசிக்­கும்­போது அதற்­கான விடை­களை நான் சொல்­லுவன். அதை இன்­னொரு ஆசி­ரியர் எழுதிக் கொள்வார். அவை அனைத்தும் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்டு சீடி­யுடன் எனது பேப்பர் செல்லும். இப்­ப­டித்தான் நான் ஒன்­பது பாடங்­க­ளையும் எழு­தினேன்.

அந்த எக்­ஸாமில் நான் 3A, 1B, 4C, 1S, ரிஸல்ட்டை எடுத்தன். ஆனா நான் எடுக்­குற ரிஸல்ட் இது இல்ல. எனக்கு கண்­பார்வை இல்­லாமல் போன­தால்தான் இப்­படி வந்து இருக்கி. இல்­லாட்டி அல்­லாஹ்ட உத­வி­யால நான் எல்லாப் பாடத்­திலும் ஒன்­பது ஏ எடுத்து இருப்பன். அப்­ப­டிதான் ஆசி­ரி­யர்­களும் என்ட குடும்­பமும் எதிர்­பார்த்து இருந்­திச்சு.

நான் படிப்­ப­தற்கு என்ட சகோ­தரி எனக்கு உதவி செய்வா. குறிப்பா ஓ.எல். டைமுல படிக்­கக்க கேள்­வி­களை வாசிச்சி காட்­டுவா. அத நான் கேட்டு படிப்பன். அத­போ­லதான் என்ட கல்­லூரி ஆசி­ரி­யர்­களும் எனக்கு பக்­க­ப­ல­மாக இருந்­தாங்க.

உங்­க­ளிடம் இருந்து எடுத்­ததை விட நாங்கள் சிறந்­ததை உங்­க­ளுக்கு தருவோம் என்று அல்லாஹ் குர்­ஆனில் கூறு­கிறான். அந்த வசனம் உண்­மை­யிலே எனக்கு நன்றாக பொருந்­து­கி­றது. ஏனென்றால் எனக்கு பார்வை இழந்­ததன் பிறகு கிர­கித்தல் தன்மை அதி­க­ரித்­துள்­ளது.

என்னை எல்­லோரும் உற்­சா­க­மூட்­டு­வார்கள். அதில் எனது கல்­லூ­ரியின் அதிபர் ஹபீப் முதீர் அவர்கள் அடிக்­கடி சொல்­லுவார், பார்வை இல்­லா­விட்­டாலும் உன்­னிடம் ஞாபக சக்தி அதி­க­மாக இருக்கு அத­னால குர்­ஆனை பாட­மாக்கு என்று சொல்­லுவார்.

நான் அடிக்­கடி ஹொஸ்­பிட்டல் போற­தால வகுப்பு பாடங்­களில் இருப்­பது குறைவு. ஆனா அல்லாஹ் எனக்கு தந்­துள்ள ஆற்றல் மூலம் நான்தான் முதன்­மு­தலில் வகுப்பில் கேள்­வி­க­ளுக்கு விடை சொல்லும் ஆளாக இருப்பன்.

என்ட கண்­பார்­வையை எடுத்­த­துக்குப் பிற­குதான் அல்லாஹ் இப்­ப­டி­யான ஆற்றல் ஒன்றை எனக்கு தந்து இருக்கான் என்று நான் உணர்­கிறேன்.

உண்­மையில் நான் கல்­வியில் இப்­படி இருப்­ப­தற்கு முக்­கிய காரணம் எனது குடும்­பமும் நண்­பர்­க­ளும்தான். எனக்கு கல்­லூ­ரியில் தங்கிப் படிப்­ப­தற்கு முடி­யாத கார­ணத்தால் நான் வீட்டில் இருந்­துதான் ஒவ்­வொரு நாளும் கல்­லூ­ரிக்குச் சென்று படிப்பேன்.

நான் கல்­லூ­ரிக்கு போனதில் இருந்து வீடு வரும் வரைக்கும் எனது நண்­பர்கள் எனக்கு பெரிதும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வார்கள். அதிலும் குறிப்­பாக அம்ஜத் எனும் நண்பன் எப்­போ­துமே என் கூடவே இருந்து எனது அனைத்து விட­யங்­க­ளையும் பார்த்துக் கொள்வார். என்ட சப்­பாத்தைக் கூட அவ­ரது கையால் எடுத்து போட்டு விடுவார்.

என்ட பார்வை சம்­பந்­த­மாக நிறைய டொக்­டர்­மார்­கிட்ட காட்டி இருக்கன். அவக ஆளுக்கு ஆள் ஒவ்­வொரு கதைய சொல்­றாங்க. எது எப்­படி இருந்­தாலும் அல்லாஹ் எனக்கு கண் பார்­வையை தருவான் என்ற நம்­பிக்­கையில் தான் நான் இப்­போதும் இருந்து கொண்டு இருக்கன்.

என்ட பிரார்த்­தனை, எதிர்­பார்ப்பு எல்லாம் ஏ.எல்.எக்­ஸா­முக்கு முதல் எனக்கு கண்­பார்வை வரணும் என்­றுதான். நான் வார வருஷம் ஏ.எல். எக்ஸாம் எழுத இருக்கன். அதற்கு முதல் அல்லாஹ் எனக்கு நல்ல நிலை­மையை தரனும் என்­றுதான் நான் எல்­லோ­ரி­டமும் துஆ கேட்­கு­மாறு சொல்லி வாரன். இதை வாசிக்­கிற எல்­லாரும் எனக்கு திரும்ப பார்வை கிடைக்க துஆ செய்ங்க.

நான் பத்தாம் ஆண்டு படிக்­கக்க ஊட­கத்­து­றையில் ஆர்வம் வந்­துச்சு. எனக்கு அறி­விப்பு துறையில் கடும் ஆர்வம். நான் மத்­ரஸா நிகழ்ச்­சி­களில் கலந்து கொண்டு அறி­விப்பு செய்வன். என்னை எல்­லோரும் பாராட்டி ஊக்­கப்­ப­டுத்­தி­னாங்க.

அத­னால்தான் நான் இப்ப என்ட நண்­பர்­களின் ஒத்­து­ழைப்­புக்­க­ளுடன் பேஸ்புக், யூடியூப் பக்­கங்­களை உரு­வாக்கி அதில இஸ்­லா­மிய மற்றும் பய­னுள்ள தக­வல்­களை வழங்கி வாரன்.

பொது­வாக போதை­வஸ்து தொடர்­பான நிகழ்ச்­சிகள் பள்­ளி­வா­சல்கள், பொது இடங்­களில் நடக்கும். ஆனால் அதனை கேட்க போதை பாவ­னை­யா­ளர்கள் வர­மாட்­டார்கள். அவர்கள் பேஸ்புக், யூடியூப் பாவ­னை­யா­ளர்­க­ளாக இருப்­பார்கள். அதனால் போதை­வஸ்து தொடர்­பான விழிப்­பு­ணர்­வு­களை பேஸ்புக், யூடியூப் பக்­கங்­களில் போடும்­போது அதனை அவர்கள் பார்த்து திருந்தும் வாய்ப்­புகள் இருக்கும். அத­னால்தான் நான் சமூக வலைத்­த­ளங்­களை நண்­பர்­களின் உத­வி­யுடன் இயக்கி விழிப்­பூட்டும் நிகழ்ச்­சி­களை வழங்கி வாரன்.

நான் கண்­பார்வை இழந்­துள்­ளதால் அதி­க­மாக வீட்­டில்தான் இருப்பன். அத­னால அமல் செய்­வ­தற்கு அதிக நேரம் கிடைக்கும். அதனால் நான் ஒலிப்­ப­தி­வு­களை கேட்டு குர்­ஆனை மனனம் செய்து வாரன். கண்­பார்வை இழந்த நாள் முதல் இன்­று­வரை இரண்டு ஜுஸ்உ குர்­ஆனை மனனம் செய்­துள்ளன்.
என்ட ஆசை எதிர்­பார்ப்பு எல்லாம் நான் ஒரு மெள­ல­வி­யாக வெளி­யாகி மக்கள் மத்­தியில் தூய இஸ்­லாத்தை எத்தி வைக்க வேண்டும் என்­ப­துதான்.

உண்­மை­யிலே எங்க வாப்­பாட உத­விய என்னால் ஒரு­போதும் மறக்க முடி­யாது. அவர் கஷ்­ட­மான சூழ்­நி­லையில் விவ­சாயம் செய்து வரும் நிலை­யில கூட என்னை மிகவும் நல்ல முறையில் பார்த்து வாறார். எனக்­காக கஷ்­டப்­ப­டு­கிறார். வறு­மை­யான நிலை என்ட போதும் கஷ்­டத்தை என்­னிடம் காட்டிக் கொள்­ளாம எனது வருத்­தத்­துக்கு நிறைய செலவு செய்­கிறார் என்­பதை என்­னால உணர முடி­கி­றது.
எனக்­காக நிறை­யப்பேர் கஷ்­டப்­பட்டு இருக்­காங்க. அதற்­காக நன்றி சொல்ல வார்த்­தைகள் இல்லை. ஒரு ஆட்டோ மூன்று சக்­க­ரத்­தோட ஓடு­வது போலான் என்ட வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கு. அவக யாரென்றால் என்ட பெற்­றோர்கள், ஆசி­ரி­யர்கள், நண்­பர்கள். அவங்­கட ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் அர­வ­ணைப்­புக்­க­ளையும் என்னால் ஒரு­போதும் மறக்க முடி­யாது’’ என்று தனது அனு­ப­வத்தை எம்­மிடம் பகிர்ந்து கொண்டார் ஆஸிக் அஹமட்.

ஆஸிக் அஹ­மடின் வாழ்க்­கையில் நமக்கு நிறையப் படிப்­பி­னைகள் இருக்­கின்­றன. கண் பார்வை எனும் இறை­யருள் எவ்­வ­ளவு மேலா­னது என்­பதை ஆஸிக்கின் கதை நமக்கு உணர்த்­தி­யி­ருக்­கி­றது. அதற்­காக நாம் அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்­து­வ­துடன் சகோ­தரர் ஆஸிக் அவர்­க­ளுக்கு மீண்டும் பார்வை கிடைக்க பிரார்த்திப்போமாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.