திருமண வயதெல்லை 18 ஆக திருத்தப்படும்

நீதி அமைச்சர் அலிசப்ரி

0 89

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தை திருத்­து­வ­தற்கும் திரு­மண வயதை 18 ஆக மட்­டுப்­ப­டுத்­தவும் தேவை­யான திருத்­தங்கள் செய்­யப்­படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புதன் கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்­ட­னைச்­சட்­டக்­கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்­ட­மூ­லங்­களை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,  நாட்­டிற்கு சுதந்­திரம் கிடைத்து 73 வரு­டங்கள் ஆகின்­றன. இந்­தப்­ப­கு­தியில் நாம் இலங்­கையர் என்ற வகையில் ஒன்­றாக இருந்து ஒற்­று­மையைக் காண தவ­றி­விட்டோம். உலகில் பல நாடுகள் இன மத பிர­தேச அடிப்­ப­டையில் பிரிந்து இருந்­தன. பின்னர் அவற்­றி­லி­ருந்து பாடம் கற்­றன. 73 ஆண்­டுகள் கடந்தும் எமது நாட்டில் இனங்­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பாடு குறைந்­த­தாக தெரி­ய­வில்லை. வேறு­பட்ட இனத்தை மதத்தை சேர்ந்­த­வ­ராக இருப்­ப­தாலோ வேறு­பட்ட மொழியைப் பேசு­வதால் எதி­ரிகள் ஆகி­வி­டு­வ­தில்லை.

வேற்­று­மையில் ஒற்­று­மையை காண்­ப­தையே அர­சி­ய­ல­மைப்பும் நமது தேசிய கீதமும் வலி­யு­றுத்­து­கி­றது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே பேச்சு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இறந்­த­கா­லத்தை திரும்­பிப்­பார்த்தால் அனை­வரும் தவறு செய்த இடங்கள் பல இருக்­கவே செய்­கின்­றன.

1958,1978 கல­வ­ரங்கள், யாழ் நூலக எரிப்பு, 1983 கல­வரம், கெபித்திகொள்ளாவ தாக்­குதல், காத்­தான்­குடி தாக்­குதல், அண்­மையில் இடம்­பெற்ற சஹ்­ரானின் தாக்­குதல் எல்லாம் கரும் புள்­ளி­யாக அமைந்­தன. சமூ­கத்தை ஓரம்­கட்டி இதற்கு தீர்வு காண்­பது என்­பது தவ­றான வழியைத் தான்­காட்டும். ஒரு­வ­ருக்­கொ­ருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்­தி­ருப்­பதா ஒன்­றி­ணைந்து முன்­னேறி செல்­வதா என்று நாம் சிந்­திக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­புள்ள அனை­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று இந்தத் தாக்­குதல் உடன் தொடர்பு இல்­லாத எவ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட கூடாது என்­ப­திலும் நாங்கள் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும்

மேலும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தை திருத்­து­வ­தற்கும் திரு­மண வயதை 18 ஆக மட்­டுப்­ப­டுத்­தவும் தேவை­யான திருத்­தங்கள் செய்­யப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லா சமூகத்தவர்களும் தவறு செய்துள்ளனர். கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.