ஏப்ரல் 16 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு நிகழ்வுகள்

0 675

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று முத­லா­வது ஆண்டு நினைவு தின நிகழ்­வுகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் நடை­பெறவுள்­ளன. இந்­நி­னைவு தின நிகழ்­வு­களில் இலங்கை மக்கள் அனை­வரும் இன, மத பேதங்­க­ளின்றி கலந்து கொள்­ளு­மாறு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அழைப்பு விடுத்­துள்ளார்.

நினைவு தினத்தை முன்­னிட்டு கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யினால் பல்­வேறு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம், 17 ஆம், 18 ஆம் திக­தி­களில் அனைத்து தேவா­ல­யங்­க­ளிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை விஷேட ஆரா­த­னைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
19 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு புனித ஜோசப் வித்­தி­யா­ல­யத்தில் தியானம் மற்றும் ஆரா­தனைப் பாடல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. அத்­தோடு பலி­யா­ன­வர்­களின் ஆத்­ம­சாந்­திக்­காக இலத்தீன் மொழி­யி­லான பாடல்­களும் இசைக்­கப்­ப­ட­வுள்­ளன. சுமார் 2000 மாண­வர்கள் இந்­நி­கழ்வில் பங்கு கொள்­ள­வுள்­ளனர்.

19 ஆம் திகதி மாலை 4 மணிக்கு மாதம்­பிட்டி மயா­னத்­திலும், 5 மணிக்கு கனத்தை மயா­னத்­திலும் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூரும் வகையில் நினைவுத் தூபிகள் திறக்­கப்­ப­ட­வுள்­ளன. 20 ஆம் திகதி தொடக்கம் கொச்­சிக்­கடை மற்றும் கட்­டு­வாப்­பிட்டி தேவா­ல­யங்­களில் விஷேட ஆரா­த­னைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. 20 ஆம் திகதி காலை 8.45 மணி­ய­ளவில் ஆரம்­பிக்­கப்­படும் நிகழ்­வுகள் 21 ஆம் திகதி காலை 8.45 மணி­வரை இடம்­பெ­ற­வுள்­ளன. பின்பு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான அறி­முக நிகழ்வு இடம்­பெ­று­வ­துடன் இத­னை­ய­டுத்து உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூரும் வகையில் 2 நிமிட மெளன அஞ்­ச­லியும் இடம்­பெ­ற­வுள்­ளது. இலங்கை மக்கள் அனை­வரும் இந்­நி­கழ்­வு­களில் கலந்து கொள்­ளு­மாறும் ஆல­யங்­க­ளிலும் பெளத்த விகா­ரை­க­ளிலும் மணி­களை ஒலிக்கச் செய்யுமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டியுள்ளார். சீயோன் தேவாலயத்திலும் இவ்வாறான நினைவுதின நிகழ்வுகளை மேற்கொள்ளு மாறும் அறிவித்துள்ளார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.