அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது திருச்சபைக்கு திருப்தியில்லை : பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

0 747

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டு­ வரும் புல­னாய்வு நட­வ­டிக்­கைகள் மீது கத்­தோ­லிக்க மக்கள் திருப்­தி­ய­டை­ய­வில்லை என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் நேற்று முன்­தினம் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘ முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஐவ­ர­டங்­கிய ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இந்த தாக்­கு­தல்கள் தொடர்பில் அதற்­கான கார­ணங்கள் ஆரா­யப்­பட்­டன. என்­றாலும் பாது­காப்பு பிரி­வினர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான கார­ணங்­களைத் தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு இது­வரை எந்தத் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ள­தாகத் தெரி­ய­வில்லை. வெளி­யி­டப்­பட்­டுள்ள புல­னாய்வு அறிக்­கைகள் உண்­மை­யான தக­வல்­களை மக்­க­ளுக்கு மறைப்­ப­தா­க உள்­ள­தாகவே நாம் சந்­தே­கிக்­கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வங்கள் முழு­மை­யாக ஆரா­யப்­பட வேண்டும். விசா­ரணை செய்­யப்­பட வேண்டும். இந்தச் சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்ற உண்­மையை நாம் அறிய வேண்டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்கி யார் தூண்­டு­தல்­க­ளாக இருந்­துள்­ளார்கள் என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும்.

இத்­தாக்­கு­தல்கள் தொடர்­பான அனைத்து விப­ரங்கள் மற்றும் இத்­தாக்­கு­தல்­களைத் தடுப்­ப­தற்கு யார் கட­மையில் தவ­றி­யி­ருக்­கி­றார்கள், அப்­பாவி மக்­களைக் காப்­பாற்றத் தவ­றி­யி­ருக்­கி­றார்கள் என்­பதை அறிய வேண்டும். அவர்கள் உயர் பத­வி­களில் உள்­ள­வர்கள் அல்­லது சாதா­ரண தரங்­களைச் சேர்ந்­த­வர்கள் என்­பது எமக்குப் பிரச்­சி­னை­யில்லை. அவர்கள் இனங்­கா­ணப்­பட வேண்டும்.

இத்­தாக்­குதல் தொடர்பில் சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக நாம் அறி­கிறோம். சிலர் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு மீண்டும் மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான சம்­ப­வங்கள் எமக்குப் போது­மா­ன­தாக இல்லை. இவற்­றினால் நாம் திருப்­தி­ய­டையப் போவ­தில்லை.
முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு புல­னாய்­வுகள் செய்­யப்­பட வேண்டும். ஆரம்பம் முதல் இறுதிக் கட்டம் வரை இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அறி­யப்­ப­ட­வேண்டும். இத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் இதற்­கான பின்­ன­ணியை மூடி­ம­றைக்க முற்­ப­டு­கின்­றனர். இந்த சம்­ப­வத்தை வேறு நபர்கள் மீது சுமத்த முயற்­சிக்­கி­றனர். அதனால் முழு­மை­யாக இச்­சம்­பவம் ஆரா­யப்­பட வேண்டும்.

விசா­ர­ணைகள் நடாத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு மீது நாம் மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்ளோம். அதே­வேளை இவ்­வி­வ­கா­ரத்தில் முழு­மை­யான கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை. சில சம்­ப­வங்கள் இதன் பின்பு இடம்­பெற்­றுள்­ளன. சில சந்­தே­கத்­துக்கு இட­மான நபர்கள் இந்­நாட்­டுக்கு வருகை தந்­துள்­ளார்கள். அவர்கள் நீர்­கொ­ழும்பில் கத்­தோ­லிக்க பாட­சா­லை­க­ளுக்கு விஜயம் செய்து வீடியோ பதி­வு­களை மேற்­கொண்­டுள்­ளனர். அவர்கள் 24 மணி நேரமே இலங்­கையில் இருந்­துள்­ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை அர­சியல் இலாபம் பெற்­றுக்­கொள்­வ­தற்குப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டாம் எனவும் தற்­போது இது தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள், தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் முன்வைக்குமாறு ஜனாதிபதியை வேண்டிக்கொள்கிறேன்.

இத்தாக்குதல் பற்றி ஆராயும் பொறுப்பினை ஆணைக்குழுக்களின் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் பொறுப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார். -Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.