தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் : பாதுகாப்பு செயலாளரிடம் துருக்கி தூதுவர் தெரிவிப்பு

0 630

பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டிய இலங்­கையின் அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்கும், வன்­முறை அடிப்­ப­டை­யி­லான தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக இணைந்து செயற்­படும் வகையில் புல­னாய்வுத் தக­வல்­களை பகிர்ந்து கொள்­வ­தற்கும் துருக்கி தயா­ரா­கவே உள்­ளது என இலங்­கைக்­கான புதிய துருக்­கிய தூதுவர் ஆர். தெமித் சிகா­ஜி­யோலோ தெரி­வித்­துள்ளார்.

பாது­காப்பு செய­லாளர் மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்­ன­வுடன் நேற்­று­முன்­தினம் பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே இலங்­கைக்­கான துருக்கித் தூதுவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

துருக்கி தனது எல்­லை­க­ளுக்­குள்­ளேயும் வெளி­யேயும் பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொண்­டுள்ள நிலையில், தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இலங்­கையின் அனு­ப­வங்கள் துருக்­கிக்கு மிகவும் மதிப்பு வாய்ந்­த­தாக இருக்­கு­மெனக் குறிப்­பிட்ட அவர், வன்­முறை அடிப்­ப­டை­யி­லான தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக இணைந்து செயற்­படும் வகையில் புல­னாய்வுத் தகவல் பகிர்வை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் துருக்கி எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இந்த சந்­திப்­பின்­போது ‘பயங்­க­ர­வா­தத்தின் எந்­த­வொரு வடி­வத்­தையும் அல்­லது மத அல்­லது வகுப்­பு­வாத தீவி­ர­வா­தத்தின் வெளிப்­பாட்­டையும் இலங்கை ஏற்­றுக்­கொள்­ளாது. எமது தேசிய நலன்­களைப் பாது­காக்­கவும், போராடிப் பெற்­றுக்­கொண்ட சமா­தா­னத்தை பாது­காக்­கவும் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் எடுப்போம்’ என்று பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்தார்.

துருக்கி ஒரு வலு­வான இரா­ணுவ சக்­தியைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும். இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வதும் உல­க­ளா­விய மற்றும் பிராந்­திய பாது­காப்பு சவால்­களை எதிர்­கொள்­வதில் நிபு­ணத்­துவ அறிவுப் பரி­மாற்­ற­மா­னது இரண்டு நாடு­க­ளுக்கும் சிறந்த வாய்ப்­பாக அமையுமென மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் மேஜர் ஜெனரல் குணரத்ன மற்றும் ஆர். தெமித் சிகாஜியோலோ ஆகியோருக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.