விண்ணப்பதாரிகள் விரும்பும் ஹஜ் முகவரை தெரிவு செய்யலாம் : அரச ஹஜ் குழு அறிவிப்பு

0 712

இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தாங்கள் விரும்பும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முக­வர்­களைத் தொடர்­பு­கொண்டு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளலாம் என அரச ஹஜ் குழு அறி­வித்­துள்­ளது.

ஹஜ் முக­வர்­க­ளுக்கு 50க்கு மேலதிகமான கோட்­டாவே வழங்­கப்­படும், 50 க்கும் குறை­வான கோட்டா வழங்­கப்­ப­ட­மாட்­ட­தெ­னவும் குறிப்­பிட்­டுள்­ளது. இவ்­வ­ருட ஹஜ் விவ­காரம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் அஹ்கம் உவைஸ் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில், ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தாம் விரும்பும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முக­வர்­களைத் தொடர்­பு­கொண்டு, அரசு நிர்­ண­யித்­துள்ள கட்­ட­ணத்தில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­ள­மு­டியும். இதே­வேளை கடந்த காலங்­களில் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

அரச ஹஜ் குழு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் ஹஜ் வழி­முறை (Guide Lines) களை அமுல்­ப­டுத்தும் பணி­யையே மேற்­கொள்­கி­றது. இவ்­வ­ருடம் இது­வரை இலங்­கைக்கு 3500 கோட்­டாவே கிடைத்­துள்­ளது. 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் அவர்­க­ளது பதி­வி­லக்க வரி­சைக்­கி­ர­மப்­ப­டியே தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். 4 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் பதிவுக் கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்­ளார்கள் என்றார்.

அரச ஹஜ் குழு உறுப்­பி­னர்­க­ளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருக்குமிடையில் நேற்று ஹஜ் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.