இஸ்ரேலுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களை பட்டியலிட்டது ஐ.நா.

பலஸ்தீன அரசாங்கம் வரவேற்பு

0 755

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் சட்­ட­வி­ரோத இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளுடன் வர்த்­தகத் தொடர்­பு­களைப் பேணி­வரும் நிறு­வ­னங்கள் தொடர்­பான அறிக்­கை­யினை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்­ளது.

இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­வ­ரு­கின்­றன என்ற முடி­வுக்கு வரு­வ­தற்­கான நியா­ய­மான கார­ணங்­களைக் கொண்­டுள்ள 112 வர்த்த நிறு­வ­னங்­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­லகம் நேற்று முன்­தினம் வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. இந் நிறு­வ­னங்­களில் 94 இஸ்­ரே­லிய நிறு­வ­னங்­க­ளாகும். ஏனைய 18 நிறு­வ­னங்­களும் வேறு ஆறு நிறு­வ­னங்­களைச் சேர்ந்­த­வை­யாகும்.

பட்­டி­ய­லி­டப்­பட்ட அடை­யாளம் காணப்­பட்ட நிறு­வ­னங்கள் அமெ­ரிக்கா, பிரான்ஸ், நெதர்­லாந்து, லக்­சம்பேர்க், தாய்­லாந்து மற்றும் ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்­த­வை­யாகும். இவற்றுள் அமெ­ரிக்­காவைத் தள­மாகக் கொண்டு இயங்கும் வாடகை குடி­யி­ருப்­பு­களைப் பகிர்வு செய்யும் Airbnb நிறு­வ­னமும் ஒன்­றாகும்.

இந் நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறிப்­பாக மனித உரி­மைகள் தொடர்­பான கவ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என ஐ.நா. அலு­வ­லகம் குறித்த அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. இந்தப் பிரச்­சி­னைகள் கவ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு எதிர்­கா­லத்தில் நிக­ழ­வுள்­ள­வை­களும் கவ­லை­களை ஏற்­ப­டுத்­த­வுள்­ளன என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பெண் உயர்ஸ்­தா­னிக­ரான மைக்கேல் பாச்லெட் தெரி­வித்தார்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரை­யி­லுள்ள இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளி­லுள்ள பட்­டி­யலை நீக்­க­வுள்­ள­தாக Airbnb நிறு­வனம் கடந்த 2018 நவம்பர் மாதம் அறி­வித்­தது. எனினும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் திட்­ட­மிட்ட பட்­டியல் நீக்­கத்தை செயல்­ப­டுத்­து­வ­தில்லை எனவும் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து கிடைக்கும் முன்­ப­தி­வுகள் மூலம் பெறப்­படும் வரு­மா­னங்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான உதவி அமைப்­பு­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் எனவும் அறி­வித்­தது.

ஏனைய நிறு­வ­னங்­க­ளாக பயணம் தொடர்­பான தளங்­க­ளான எக்ஸ்­பீ­டியா மற்றும் டிரிப் அட்­வைசர், தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான மோட்­டோ­ரோலா, நுகர்வோர் உணவு தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஜெனரல் மில்ஸ் மற்றும் பிரான்சின் எகிஸ் ரெயில் மற்றும் பிரித்­தா­னிய நிறு­வ­ன­மான ஜே.சி. பாம்போர்ட் அகழ்வு நிறு­வ­னங்கள் உள்­ளிட்ட கட்­டட மற்றும் உட்­கட்­ட­மைப்பு நிறு­வ­னங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

இந்தத் தீர்­மா­னத்தை வர­வேற்­றுள்ள பலஸ்­தீன வெளி­நாட்­ட­மைச்சர் றியாத் அல் மல்கி சர்­வ­தேச சட்­டத்­திற்குக் கிடைத்­த­தொரு வெற்றி என வர்­ணித்­துள்ளார்.

குடி­யேற்­றங்­க­ளோடு தொடர்­பு­பட்ட நிறு­வ­னங்கள் மற்றும் அமைப்­புக்கள் தொடர்­பான பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை சர்­வ­தேச சட்டம் மற்றும் இரா­ஜ­தந்­திர முயற்­சி­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யாகும் என அல்-­மல்கி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

குறித்த நிறு­வ­னங்கள் குடி­யி­ருப்­புக்­களில் மேற்­கொள்ளும் பணி­களை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு சிபார்­சு­க­ளையும் அறி­வுத்­தல்­க­ளையும் வெளி­யிட வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் அங்­கத்­துவ நாடு­க­ளையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யி­னையும் அவர் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீனப் பிர­தே­சத்தில் இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்கள் தொடர்­பான குறிப்­பான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள அனைத்து வர்த்­தக நிறு­வ­னங்­க­ளி­னதும் தர­வுத்­த­ளத்தை 2016 யு.என்.எச்.ஆர்.சி தீர்­மா­னத்தின் மூலம் கோரப்­பட்­ட­தற்கு அமை­வாக அதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் சபை­யினால் இவ்­வ­றிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

47 நாடுகள் அங்கம் வகிக்கும் மனித உரி­மைகள் பேரவை வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் நிறு­வ­னங்­களை பகுப்­பாய்வு செய்யும் வித­மான இதற்கு முன்னர் ஒரு­போதும் இத்­த­கைய பட்­டி­ய­லொன்றைக் கோரி­ய­தில்லை.

இந்த தக­வல்­த­ளத்தைத் தொகுப்­பது மிகவும் சிக்­க­லான விட­ய­மாக இருந்­தது எனத் தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் முக­வ­ரகம், நாடுகள், அறி­ஞர்கள், கல்­வி­யி­ய­லா­ளர்கள் மற்றும் குறித்த நிறு­வ­னங்­க­ளு­ட­னான பரந்­து­பட்ட கலந்­து­ரை­யாடல் இதில் தொடர்­பு­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்­துள்­ளது.

பட்­டி­யலில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச ரீதி­யான சட்ட நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்ள பலஸ்­தீனப் பிர­தமர் மொஹமட் ஷ்தாயே, அந் நிறு­வ­னங்கள் சட்­ட­வி­ரோத இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளுக்குள் காணப்­படும் தமது தலை­மை­ய­கங்­க­ளையும் கிளை­க­ளையும் உட­ன­டி­யாக மூட வேண்டும், ஏனெனில் அவை சர்­வ­தேச மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னங்­க­ளுக்கு முர­ணா­னவை எனவும் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீ­னத்தில் மனித உரிமை மீறல்­களில் பங்­கு­பற்­றி­ய­தற்­காக சர்­வ­தேச சட்ட நிறு­வ­னங்கள் மற்றும் அந் நிறு­வ­னங்­களின் நாடு­களில் உள்ள நீதி­மன்­றங்­களில் சட்­ட­பூர்­வ­மாக அறிக்­கையில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நாம் வழக்குத் தொட­ருவோம் என ஷ்தாயே தனது பேஸ்புக் பதிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

எமது நிலங்­களை அவர்கள் சட்­ட­வி­ரோ­த­மாகப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கெ­தி­ராக பலஸ்­தீ­னர்கள் நட்­ட­ஈட்டைக் கோரு­வார்கள் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். இத் தர­வுத்­த­ளத்தை வெளி­யிட்­ட­மை­யினை மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் தலை­மை­ய­தி­கா­ரி­யான புரூனோ ஸ்டேன்கோ வர­வேற்­றுள்ளார்.

சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­க­ளுடன் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது போர்க்­குற்­றங்­க­ளுக்கு உத­வு­வ­தாகும் என்­பதை அனைத்து நிறு­வ­னங்­களும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

குறித்த அறிக்கை சர்­வ­தேச சமூ­கத்தின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது, சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் மேற்குக் கரை­யி­லுள்ள குடி­யேற்­றங்கள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என்­பதே சர்­வ­தேச சமூ­கத்தின் நிலைப்­பா­டாகும் என மேற்கு ஜெரூ­ச­லத்­தி­லுள்ள அல்-­ஜெ­ஸீரா பெண் ஊட­க­வி­ய­லாளர் ஸ்ரீபனீ டெக்கர் தெரி­வித்தார்.

இவ்­வா­றான நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு சட்­ட­ரீ­தி­யான எந்­த­வித ஏற்­பா­டு­களும் இல்லை எனினும், புறக்­க­ணிப்புச் செய்­வ­தற்கும் பொரு­ளா­தாரத் தடைகள் விதிப்­ப­தற்­கு­மான சாத்­தி­யத்­திற்­கான வழி­களை இவ்­வ­றிக்கை திறந்­துள்­ளது எனவும் தெரி­வித்­துள்ளார்.

புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்கள் தொடர்ச்­சி­யாக அப் பட்­டி­யலில் இருக்­காது. குறித்த நிறு­வ­னங்கள் தமது சேவை­களை இடை­நி­றுத்திக் கொண்­ட­தா­கவோ அல்­லது தொடர்ந்தும் சேவை­யினை வழங்­க­வில்லை என்றோ நம்­பத்­த­குந்த கார­ணங்கள் இருக்கும் பட்­சத்தில் குறித்த நிறு­வ­னங்கள் தொடர்ந்தும் அப்­பட்­டி­யலில் இருக்­காது எனவும் அவர் தெரி­வத்தார்.

தர­வுத்­தளம் ஆண்­டு­தோறும் புதுப்­பிக்­கப்­பட வேண்டும் என அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது. மேலும் இந்தப் பணியைக் கண்­கா­ணிக்க சுயா­தீன நிபுணர் குழுவை நிய­மிக்க வேண்­டு­மெ­னவும் மனித உரி­மைகள் பேர­வையை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

1967 ஆம் ஆண்டு ஆறு நாள் யுத்­தத்­தின்­போது இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரை­யி­னையும் கிழக்கு ஜெரூ­ச­லத்­தையும் சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. இக் குடி­யேற்­றங்கள் சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யாகக் கரு­தப்­ப­டு­வ­தோடு சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையில் சுமார் 600,000 இஸ்­ரே­லி­யர்கள் வாழ்­கின்­றளர், இஸ்­ரே­லினால் இணைக்­கப்­பட்­டுள்ள கிழக்கு ஜெரூ­ச­லத்தில் 2.9 மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் வாழ்­கின்­றனர்.

இந்த அறிக்கை தொடர்பில் முதலில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் வெளிநாட்டமைச்சர் காட்ஸ், இந்த பட்டியலை வெளியிடுவது இஸ்ரேலை காயப்படுத்த விரும்பும் நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் ‘வெட்கக்கேடான சரணடைதல்’ என வருணித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை பக்கச் சார்பானது எனவும் பயனற்ற அமைப்பு எனவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு புதன்கிழமை தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பில் செயற்பட வேண்டிய இவ்வமைப்பு இஸ்ரேல் மீது களங்கம் ஏற்படுத்த முனைகின்றது. நாம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய வாரங்களில், நெட்டன்யாகு மேற்குக் கரையில் இஸ்ரேலின் 100 இற்கும் மேற்பட்ட குடியேற்றங்களை இணைப்பதாக உறுதியளித்துள்ளார், இதற்கு அமெரிக்காவும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. பலஸ்தீனிய அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய மறுநாள் இவ்வறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.