ஹஜ் முகவர்களினால் செயற்றிட்டம் சமர்ப்பிப்பு

0 148

ஹஜ் முக­வர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இரு ஹஜ் முகவர் சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான செயற்­திட்டம் ஒன்­றினைத் தயா­ரித்து நேற்று முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பா­ள­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளன.

தங்­க­ளது செயற்­திட்­டத்­திற்கு அமை­வாக குறிப்­பிட்­டுள்ள கட்­ட­ணத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பிர­தமர் இணங்­கினால் தொடர்ந்தும் சேவையில் ஈடு­பட முடியும் என ஹஜ்­மு­கவர் சங்­கங்கள் தெரி­வித்­துள்­ளன. நேற்று முன்­தினம் மாலை கொழும்பு மகளிர் கல்வி மையத்தில் நடை­பெற்ற ஹஜ் முக­வர்­களின் கூட்­டத்­திலே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஹஜ் முகவர் சங்­கங்­களின் தீர்­மானம் தொடர்பில் இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் (Haj Tour Operators Association of Sri Lanka) தலைவர் எச்.எம்.அம்­ஜதீன் கருத்து தெரி­விக்­கையில், ‘இவ்­வ­ருட ஹஜ் கட்­ட­ணத்தை 5 இலட்சம் ரூபா­வாக நிர்­ண­யித்து ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கும்­படி ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது. இல்­லையேல் ஹஜ் ஏற்­பா­டு­களை அரசே மேற்­கொள்ளும் எனவும் தெரி­வித்­துள்­ளது. ஹஜ் குழு குறிப்­பிட்­டுள்ள ஹோட்டல் வச­திகள் மற்றும் சேவை­களை 5 இலட்சம் ரூபா­வுக்குள் வழங்­கு­வது சிர­ம­மாகும்.

எனவே, ஹஜ் முக­வர்கள் அரசின் சிபா­ரி­சுக்கு மூன்று ஹஜ் பொதி­களை (Package) வடி­வ­மைத்­துள்ளோம். 6 ½ இலட்ச ரூபா பெக்கேஜ், 7 ½ இலட்சம் ரூபா பெக்கேஜ் மற்றும் 8 ½ இலட்சம் ரூபா வி.ஐ.பி பெக்கேஜ் என்­ப­னவே அவை. இந்த பெக்­கேஜ்­களில் ஹஜ்­குழு குறிப்­பிட்­டுள்ள சேவைகள் வழங்­கப்­படும். மக்­கா­விலும் மதீ­னா­விலும் யாத்­தி­ரி­கர்கள் 4,5, நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தங்க வைக்­கப்­ப­டு­வார்கள்.

அத்­தோடு அஸீ­ஸி­யாவில் தங்க வைக்­கப்­ப­டாது குதைய்யில் தங்க வைக்­கப்­ப­டு­வார்கள். 8 ½ இலட்சம் ரூபா பெக்­கேஜில் அழைத்துச் செல்­லப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். பிர­தமர், ஹஜ் முக­வர்­களின் இந்த திட்­டத்­திற்கு இணங்­குவார் என்ற நம்­பிக்­கை­யுண்டு. 5 இலட்சம் ரூபாவில் ஹஜ் ஏற்­பா­டு­களை நிறைவு செய்­வ­தென்­பது இய­லாத காரி­ய­மாகும்’ என்றார்.

ஹஜ் முக­வர்­களின் செயற்­திட்டம் தொடர்பில் ஹஜ் ஏற்­பா­டு­களில் 41 வரு­டங்கள் அனு­பவம் வாய்ந்த ஹஜ் முகவர் ஏ.எல்.எம்.கலீல் மெள­ல­வியைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, ‘அர­சாங்கம் பல தசாப்­தங்­க­ளாக ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரும் முக­வர்­களைப் புறந்­தள்ளிவிட்டு அவர்­களை ஆலோ­சிக்­காமல் தீர்­மானம் எடுத்­துள்­ளமை கவ­லை­ய­ளிக்­கி­றது. ஒரு சில ஹஜ் முக­வர்­களின் ஊழல்­க­ளுக்கு ஒட்­டு­மொத்த முக­வர்­களும் பொறுப்­பா­ன­வர்­க­ளல்ல.

இது­வரை காலம் ஹஜ் ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய விவ­கா­ரத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சர்கள் அல்­லது செய­லா­ளர்கள், பணிப்­பா­ளர்கள் ஆகி­யோரால் முக­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்டே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­துள்­ளன.
ஹஜ் முக­வர்கள் காரி­யா­ல­யங்­களை நடத்திச் செல்­வ­தற்கும், ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­வ­தற்கும், வரிகள் செலுத்­து­வ­தற்கும் பெரு­ம­ளவு நிதி­யினைச் செல­வி­டு­கின்­றனர். இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்கள் சவூ­தியில் முக­வர்கள் மூலமே பேணப்­ப­டு­கின்­றன. அவர்­க­ளது தேவைகள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன.

எனவே, ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சிறந்த சேவை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்றால் அவர்கள் முகவர் நிலை­யங்­க­ளி­னூ­டா­கவே பய­ணிக்க வேண்டும். அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இதுபற்றி சிந்­தித்து தீர்­மானம் எடுக்க வேண்டும்’ என்றார்.

அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீலைத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது, ஹஜ் முக­வர்­களின் திட்டம் இன்று பிர­த­ம­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு கலந்­து­ரை­யா­டப்­படும். பிர­தமர் தீர்­மா­னமே இறுதி முடி­வாகும். ஹஜ் ஏற்­பா­டு­களை அரசே கையாள வேண்டும் என்றால் ஹஜ் குழு உட­ன­டி­யாக மேல­திக நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்கும். இது தொடர்பில் சவூதி ஹஜ் அமைச்சு மற்றும் முஅல்லிம்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றார். இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜார் கருத்து தெரிவிக்கையில் ஹஜ் முகவர்கள் முன்வைத்துள்ள திட்டத்தை பிரதமர் அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கையுண்டு. அரசு ஒரு சில முகவர்களின் ஊழல்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்து முகவர்களையும் புறந்தள்ளி விடக்கூடாது என்றார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.