விமலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் : 100 கோடி ரூபா நஷ்டஈடு கோருகிறார் ரிஷாத்

0 707

எனது அமெ­ரிக்க வங்கிக் கணக்­கொன்­றுக்கு இலங்­கையில் இருந்து ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது என அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்­ளமை அப்­பட்­ட­மான பொய். எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள விமல் வீர­வன்­ச­விடம் நூறு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி சட்­டத்­த­ர­ணி­யூ­டாக கடிதம் அனுப்­பி­யுள்ளேன்.

இரண்டு வாரத்தில் தனது பொய்­யான கூற்­றுக்கு அவர் மன்­னிப்புக் கோரா­விட்டால் வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

நேற்று மாலை இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போது, விமல் வீர­வன்­சவின் குற்­றச்­சாட்­டுக்­களை அவர் முற்­றாக மறுத்­துள்­ள­துடன் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், அவர் தொடர்ச்­சி­யாக பல குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி இருந்­த­தா­கவும், பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு சாட்­சி­யங்­களில் அவற்­றுக்­கான தெளி­வு­ப­டுத்­தலை வழங்கி இருந்­த­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாட் பதி­யுதீன் மேலும் தெரி­வித்தார்.

“அமெ­ரிக்­கா­விலோ வேறு எந்த நாட்­டிலோ தனக்கு எந்த வங்­கிக்­க­ணக்கும் இல்­லை­யெ­னவும், 52 நாள் அர­சாங்­கத்தில் அமெ­ரிக்க வங்­கிக்­க­ணக்கு ஒன்றில் தனது பெயரில் ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­ட­தா­கவும் முழுப்­பொய்யை வீர­வன்ச கூறி­யுள்ளார். அதே­போன்று, எனது பெய­ரி­லான 200 க்கு மேற்­பட்ட காணி உறு­திப்­பத்­தி­ரங்கள் கைப்­பற்­றப்­பட்­டி­ருப்­ப­தாவும் அவர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். இதையும் அவர் நிரூ­பிக்க வேண்­டு­மெ­னவும் விமல் வீர­வன்­ச­வுக்கு நான் சவால் விடுக்­கின்றேன். அத்­துடன், விமல் வீர­வன்ச, பொலிஸ்மா அதிபர் போன்றோ சி.ஐ.டி. போன்றோ செயற்­படக் கூடா­தெ­னவும் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

கடந்த காலங்­க­ளிலும் விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் இவ்­வா­றான பொய்க் குற்­றச்­சாட்டை என்­மீது சுமத்­தி­ய­தோடு, அவற்றை நான் நிரா­க­ரித்­த­துடன் அவ்­வாறு எனக்கு சொந்­த­மான காணிகள் இருந்தால், அதனை அர­சு­ட­மை­யாக்­கு­மாறும் பகி­ரங்­க­மாக தெரி­வுக்­கு­ழு­விலும் எடுத்­து­ரைத்தேன். வெறு­மனே தேர்தல் வெற்­றிக்­காக விமல் வீர­வன்ச போன்ற ஊழல்­வா­தி­களும் இன­வா­தி­களும் காட்போட் வீரர்­க­ளாக வலம்­வந்து, ஊட­கங்கள் முன்­னி­லையில் வீராப்புப் பேசிக்­கொண்­டி­ருக்­காமல், இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை ஒப்­பு­விக்க வேண்டும்.

அத்­துடன், சதொச நிறு­வ­னத்­துக்­கான ஜென­ரேட்டர் கொள்­வ­னவில் பாரிய ஊழல் நடந்­தி­ருப்­ப­தாக இன்­னு­மொரு குற்­றச்­சாட்­டையும் முன்­வைத்­துள்ளார். இதுவும் அப்­பட்­ட­மான பொய்­யாகும். சதொச நிறு­வ­னத்­துக்­கான பொருள் கொள்­வ­ன­வின்­போது ரூபா 250 மில்­லி­ய­னுக்கு அது மேற்­பட்­டி­ருந்தால், அமைச்சின் செய­லாளர் தலை­மை­யி­லான, கேள்­விப்­பத்­திர சபை ஒன்றே அந்த விட­யத்தைக் கையாளும். அதே­போன்று, நூறு மில்­லியன் ரூபா­வுக்கு குறை­வான பொருள் கொள்­வ­ன­வின்­போது, சதொச நிறு­வனத் தலைவர் தலை­மை­யி­லான கேள்­விப்­பத்­திர சபை ஒன்று அந்த விவ­கா­ரத்தைக் கையாளும். இதற்கு மேலாக பொருட்­களின் தரத்தை பரி­சீ­லிப்­ப­தற்கும் தொழில்­நுட்ப மதிப்­பீட்டு குழு­வொன்று பணியில் அமர்த்­தப்­படும். எனவே, சதொச நிறு­வனப் பொருள் கொள்­வ­னவில் எனது தலை­யீடு ஒரு­போதும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை எனவும் பொறுப்­புடன் கூறு­கின்றேன்.

எனவே, விமல் வீர­வன்­சவின் அத்­தனை குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முற்­றாக மறுப்­ப­துடன், அர­சி­ய­லுக்­காக பொய்­யான பிர­சா­ரங்­களை இனி­மேலும் கட்­ட­விழ்த்­து­வி­டு­வதை விமல் வீர­வன்ச உடன் கைவிட வேண்­டு­மென கோரு­கின்றேன். அது­மாத்­தி­ர­மின்றி, வில்­பத்­துவை அழித்­த­தா­கவும் விமல் வீர­வன்ச போன்ற இன­வா­திகள் சுமத்­தி­வரும் குற்­றச்­சாட்டை நான் ஏற்­க­னவே பல­த­டவை மறுத்­தி­ருப்­ப­துடன் மாத்­தி­ர­மின்றி, ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறும் சுமார் 02 மாதங்களுக்கு முன்னதாக கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தேன்” என்று கூறினார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.