ஹஜ் : ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்

0 605

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் கட்­டண கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு உரிய பாது­காப்பு வழங்­கப்­படும். கடந்த காலங்­களில் போன்று ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஊழல் மோச­டி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது’ என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘புனி­த­மான பயணம் ஒன்­றினை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் ஏமாற்­றப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இந்த ஊழல் மோச­டி­க­ளி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை எவ்­வாறு காப்­பாற்­று­வது. அவர்கள் செலுத்தும் கட்­ட­ணங்­க­ளுக்கு எவ்­வாறு உத்­த­ர­வாதம் வழங்­கு­வது என்­பது தொடர்பில் திணைக்­களம் திட்­டங்­களை வகுத்து சில தினங்­களில் அறி­விக்­க­வுள்­ளது.

திணைக்­க­ளத்தின் திட்­டங்­க­ளுக்கு ஹஜ் முக­வர்கள் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தாம் செலுத்தும் கட்டணத்துக்கு உரிய உயர்ந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன என்றார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.