மத சுதந்திரம் பூரணமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்

0 687

வத்­தளை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் நிகாப் அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஒரு­வரை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பிய நபர் ஒரு­வ­ருக்கு அப் பெண் துணிச்­ச­லுடன் அளித்த பதில் குறித்தே இன்று பலரும் பேசி வரு­கின்­றனர்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­த­லுக்குப் பின்னர் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நூற்றுக் கணக்கில் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் பெரும்­பா­லா­னவை இவ்­வாறே சமூக வலைத்­த­ளங்­களில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களால் பதி­வி­டப்­பட்­டன. இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தோற்றம் பெற்­ற­துடன் சம்­பவ இடங்­களில் பொலிசார் தலை­யிட்டு நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய தேவையும் ஏற்­பட்­டது. சில சம்­ப­வங்கள் நீதி­மன்றம் வரைக்கும் சென்­றன. எனினும் அவ்­வா­றான சந்­த­ரப்­பங்­க­ளி­ளெல்லாம் சம்­பந்­தப்­பட்ட முஸ்­லிம்கள் அடக்­கியே வாசித்­தனர். பெரும்­பான்­மை­யி­ன­ருடன் எதிர்த்து நின்று வாதி­டாது அமை­தி­காத்­தனர். இருப்­பினும் வத்­த­ளையில் சில தினங்­க­ளுக்கு முன்னர் குறித்த முஸ்லிம் பெண்­மணி சம்­பந்­தப்­பட்ட நபரை எதிர்த்த நின்று கேள்­வி­கேட்­டமை ஏனைய பெண்­க­ளுக்கும் தைரி­யத்தை வழங்­கி­யுள்­ளது.

நாட்டின் சூழலில் நிகாப் அணிந்து வெளியில் நட­மா­டு­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல என்ற போதிலும் நிகாப் அணியக் கூடாது எனக் கூறு­வ­தற்கு யாருக்கும் உரிமை கிடை­யாது. நிகா­புக்கு விதிக்­கப்­பட்ட தடையும் அவ­சர காலச் சட்டம் நீக்­கப்­பட்­ட­துடன் நீங்­கி­விட்­டது. எனினும் நிகாப் விட­யத்தில் சம­யோ­சி­த­மாக நடந்து கொள்­ளுங்கள் என்றே உலமா சபை உள்­ளிட்ட சக­லரும் ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இப் பின்­ன­ணி­யில்தான் எதிர்­கா­லத்­திலும் இவ்­வாறு நிகாப் அணிந்து செல்­ப­வர்­களை வேண்­டு­மென்றே அசெ­ள­க­ரி­யப்­ப­டுத்த பலர் முனையக் கூடும். வத்­தளை விவ­கா­ரத்தில் முஸ்லிம் பெண்ணின் தைரி­யத்தை ஒரு சாரார் மெச்­சு­கின்ற அதே­நேரம் குறித்த பெண்ணை வீடியோ எடுத்த பெரும்­பான்மை இன நபரை அவ­ரது சமூ­கத்தின் ஒரு­சாரார் துணிச்­சல்­மிக்­க­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றனர் என்­ப­தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

என­வேதான் எதிர்­கா­லத்­திலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் மேலும் நிக­ழலாம்.

சில சந்­தர்ப்­பங்­களில் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்க்­கவும் தீய சக்­திகள் முனையக் கூடும். பொதுத் தேர்தல் ஒன்று நெருங்­கு­கின்ற நிலையில் சிறு சிறு பிரச்­சி­னை­களைப் பூதா­க­ரப்­ப­டுத்தி இன­வா­தத்தை தூண்­டுவர் என்­பதில் எந்­த­வித சந்­தே­க­மு­மில்லை. ஆக எல்லா தரு­ணங்­க­ளிலும் எதிர்த்து நிற்­பதும் சம­யோ­சி­த­மா­ன­தாக அமையப் போவ­தில்லை. நிலை­மை­க­ளுக்கு ஏற்­ற­வாறு நமது சகோ­தர சகோ­த­ரிகள் நிதா­ன­மாக நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இருப்­பினும் இவ்­வா­றான துன்­பு­றுத்­தல்­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னெ­டுக்க வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம். இவ்வாறான சம்பவங்கள் இதன் பின்னரும் இடம்பெறாதவாறு கட்டுப்படுத்த வேண்டியது ஜனாதிபதியினதும் பாதுகாப்புத் தரப்பினரதும் பொறுப்பாகும்.

சுதந்­திர தின உரையில் இந்த நாட்டில் வாழும் சகல மக்­க­ளி­னதும் மத சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வது தனது பொறுப்பு என ஜனா­தி­பதி அழுத்­த­மாகக் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்தப் பொறுப்புக்கமைய இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன, மத மக்களும் தத்தமது மதங்களை சுதந்திரமாக பின்பற்றவும் தத்தமது கலாசார ஆடைகளை அணியவும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

இதனைத் தடுக்க முனைகின்ற சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இல்லாதவிடத்து நாம் அனுபவிக்கும் சுதந்திரம் அர்த்தமற்றதாகிவிடும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.