2019 ஆட்சி மாற்றத்தின் பின்னர்: முஸ்லிம்கள் ஆபத்தில்

மனித உரிமைகளை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம் வழங்க வேண்டும்; சர்வதேச நெருக்கடிகள் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டு

0 834

இலங்­கையில் கடந்த வருடம் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் எழுந்­துள்ள மாற்­றங்­க­ளுக்­க­மைய முஸ்­லிம்­களின் எதிர்­காலம் ஆபத்­திற்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக ‘சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு‘ வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ‘கண்­கா­ணிப்பு பட்­டியல் 2020‘ எனும் தலைப்பில் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்பு அமைப்­பான ‘சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு‘ கடந்த ஜன­வரி 29 ஆம் திகதி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.2020 ஆம் ஆண்டில் நெருக்­க­டிகள் அல்­லது வன்­மு­றைகள் ஏற்­ப­டலாம் என கரு­தப்­படும் பத்து நாடு­களை உள்­ள­டக்கி இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதில் இலங்­கையும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­துடன் குறிப்­பாக கடந்த வருடம் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தோன்­றி­யுள்ள சமூக, பொரு­ளா­தார, அர­சியல் நிலை­மை­களில் சிறு­பான்மை இனங்கள் எதிர்­நோக்கும் ஆபத்­துகள் குறித்து சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இலங்­கையில் மனித உரி­மை­களை நிலை­நாட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்த சிபா­ரி­சு­களும் இதில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

‘இலங்­கையில் ஓர் ஆபத்­தான கடல் மாற்றம்‘ எனும் தலைப்­பி­லான அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையில் கடந்த 16 நவம்பர் 2019 இல் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யா­கவும் அவ­ரது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் இன உற­வுகள் மற்றும் சட்­டத்தின் ஆட்சி தொடர்­பான கொள்­கை­களில் அடிப்­படை மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

போருக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை, ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­ய­வற்­றுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் தொடர்பில் கடந்த ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் கடைப்­பி­டித்த கொள்­கை­க­ளுக்கு முற்­றிலும் தலை­கீ­ழான கொள்­கை­க­ளையே புதிய ராஜ­பக்ச அர­சாங்கம் அறி­வித்­துள்­ள­துடன் அவற்றில் பல முக்­கிய கொள்­கைளை கைவிட்­டு­முள்­ளது.

இந்த மாற்­றங்கள் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இலங்கை தொடர்­பான கொள்­கை­களை பலத்த சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை வழங்க வேண்­டி­யுள்­ளது.

குறிப்­பாக முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­படும் பாகு­பா­டான வேலைத்­திட்­டங்­க­ளுக்கோ அல்­லது தீவி­ர­ம­ய­மா­தலை குறைத்தல் அல்­லது புனர்­வாழ்­வ­ளித்தல் எனும் போர்­வை­யி­லான மனித உரி­மை­களை பேணாத முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்த திட்­ட­மிட்ட வேலைத்­திட்­டங்­க­ளுக்கோ நிதி­ய­ளிப்­பதை ஐரோப்­பிய ஒன்­றியம் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும்.

2019 நவம்­பரில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் இலங்கை ஆழ­மாக துரு­வ­ம­யப்­பட்­டுள்­ளதை காண்­பிக்­கி­றது. ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் 54 அமைச்­சர்­களில் இருவர் மாத்­தி­ரமே தமி­ழர்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த பின்னர் முஸ்லிம் ஒருவர் கூட இல்­லாத அமைச்­ச­ரவை இது­வே­யாகும்.

கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வ­ளிக்கும் தீவி­ரப்­போக்­கு­டைய பெளத்­தர்கள் பாகு­பா­டு­களின் அடிப்­ப­டையில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்­துள்­ளனர்.

நாட்டின் சமூக, அர­சியல் மற்றும் பொரு­ளா­தா­ரத்தில் முழு­மை­யாகப் பங்­க­ளிப்புச் செய்து வரும் இலங்கை முஸ்­லிம்­களின் வாழ்வு மீதான ஆபத்து வளர்ந்து வரு­கி­றது. 2019 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் உந்­தப்­பட்டு நடாத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் மீதான பாகு­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் முகத்­திரை அணி­வது தடை செய்­யப்­பட்­ட­துடன் அவ்­வாறு அணிந்து சென்­ற­வர்கள் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டனர். முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார இலக்­குகள் சேத­மாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளின்­போது கைது செய்­யப்­பட்ட சிங்­க­ள­வர்­க­ளான சகல சந்­தேக நபர்­களும் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

எனினும் எந்­த­வி­த­மான குற்­றச்­சாட்­டு­க­ளு­மின்றி நூற்றுக் கணக்­கான முஸ்­லிம்கள் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
தேர்­த­லுக்குப் பின்னர் மஹிந்த ராஜ­பக்ஷ வெளி­யிட்ட கூற்­றுக்கள் இன மற்றும் மத அடிப்­ப­டை­யி­லான கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்­து­வதை குறி­காட்­டு­கின்­றன.

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் யாப்புத் திருத்­தங்கள் மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை பல­வீ­னப்­ப­டுத்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுமானால் முஸ்லிம் கட்சிகளால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவிக்கலாம். இது முஸ்லிம் சமூகத்தை மேலும் ஓரங்கட்டுவதாகவே அமையும்.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பான கொள்கைகளில் முழுமையான மீள்பரிசீலனைகளை மேற்கொள்வதுடன் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முன்வர வேண்டும் என சர்வதேச நெருக்கடிகள் குழு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.